search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெய்ர் ஸ்டார்மர்"

    • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 408 இடங்களில் வெற்றி பெற்றது.
    • தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

    புதுடெல்லி:

    பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

    தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இங்கிலாந்து பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற கெய்ர் ஸ்டார்மருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தங்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், தேர்தலில் தோல்வி அடைந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவருக்கு விடுத்துள்ள செய்தியில், இங்கிலாந்தின் போற்றத்தக்க தலைமைத்துவத்திற்கும், உங்கள் பதவிக்காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்களின் தீவிர பங்களிப்புக்கும் நன்றி ரிஷி சுனக். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    • 14 வருடங்கள் கழித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
    • தற்போதைய அரசர் மூன்றாம் சார்லஸ்தான் அவர் பிரதமராக ஆகவேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுப்பார்.

    பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூன் 4] நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தொடக்கம் முதலே இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் பின்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பிரதான இடதுசாரி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 326 இடங்களையும் கடந்து 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டனில் ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 14 வருடங்கள் கழித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். 61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் தொழில்முறையாக வழக்கறிஞராக இருந்தவர்.

    இரண்டாம் எலிசபெத் மாகாராணியிடமிருந்து கிநைட் பட்டம் பெற்றவர். கடந்த 2015 இல் முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது லண்டனில் ஹோல்பார்ன் மற்றும் st. பங்கிராஸ் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

    இவரின் வெளியுறவுக் கொள்கைகள் இந்தியாவிற்கு சாதகவமானதாகவே இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துகின்றனர். தொழிலாளர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் உலக நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுடனான புதிய ஸ்டிராடஜிக் பார்ட்னர்ஷிப், ஹிந்துக்கள் பண்டிகைகளை பிரிட்டனில் கொண்டாட முழு சுதந்திரம் உள்ளிட்டவை இவரின் கொள்கைகளில் அடங்கும். ஆனால் ரிஷி சுனக்கை போல், அதிகப்படியான இந்திய குடியேற்றத்துக்கு எதிரான கருத்துள்ளவராக கெய்ர் ஸ்டார்மர் பார்க்கப்படுகிறார்.

    இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், வென்ற கட்சியை, பிரிட்டன் அரசர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பது வழக்கமாக உள்ளது. ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டு அரசர் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்க முழு அதிகாரம் உள்ளது. தொழிலாளர் கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மர் வெற்றி பெற்றாலும் தற்போதைய அரசர் மூன்றாம் சார்லஸ்தான் அவர் பிரதமராக ஆகவேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுப்பார்.   

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடக்கம் முதலே இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் பின்னிலையில் இருந்து வந்தது
    • ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூன் 4] நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தொடக்கம் முதலே இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் பின்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பிரதான இடதுசாரி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 326 இடங்களையும் கடந்து 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தொழிலாளர் கட்சி 410 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் வெற்றி பெரும் எனவும் கணிக்கப்பட்டது குறிப்பிடத்தத்க்கது. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து கடந்த 14 வருடங்கள் கழித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    வெற்றி குறித்து பேசிய கெய்ர் ஸ்டார்மர், தேச புத்தாக்கத்துக்காக நாங்கள் பாடுபடுவோம் என்றும், நாடுதான் முதலாவது, கட்சி இரண்டாம் பட்சம்தான் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தான் முழு பொறுப்பேற்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ரிசிமண்ட் மற்றும் நார்தலெர்ட்டான் தொகுதிகளில் போட்டியிட்ட ரிஷி சுனக் அங்கு வெற்றி பெற்று தனது எம்.பி பதவியை தக்கவைத்துள்ளார்.

    ×