search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல்"

    • உமா குமரன் என்ற தமிழீழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சகோதரி 19,145 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியினை ஈட்டியுள்ளதைக் கண்டு உலகத் தமிழினம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.
    • லண்டனில் தஞ்சம் அடைந்த உமா குமரனின் பெற்றோர்கள் 40 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

    இந்தத் தேர்தலில் ஸ்ட்ரா போர்ட் அன்ட் பவ் தொகுதியிலிருந்து உமா குமரன் என்ற தமிழீழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சகோதரி 19,145 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியினை ஈட்டியுள்ளதைக் கண்டு உலகத் தமிழினம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.

    இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளால் அங்கிருந்து புலம் பெயர்ந்து லண்டனில் தஞ்சம் அடைந்த உமா குமரனின் பெற்றோர்கள் 40 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

    இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமைக்குரிய உமா குமரனை மறுமலர்ச்சி தி.மு.கழகமும், தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழ் மக்களும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக் கூறி மகிழ்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 408 இடங்களில் வெற்றி பெற்றது.
    • தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

    புதுடெல்லி:

    பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

    தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இங்கிலாந்து பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற கெய்ர் ஸ்டார்மருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தங்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், தேர்தலில் தோல்வி அடைந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவருக்கு விடுத்துள்ள செய்தியில், இங்கிலாந்தின் போற்றத்தக்க தலைமைத்துவத்திற்கும், உங்கள் பதவிக்காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்களின் தீவிர பங்களிப்புக்கும் நன்றி ரிஷி சுனக். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் கண்டனர்.
    • இதில் தொழிலாளர் கட்சி சார்பில் ஸ்டராட்போர்டு தொகுதியில் உமா குமரன் போட்டியிட்டார்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் என மொத்தம் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்தத் தொகுதியில் 19,145 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் உமா குமரன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4-வது இடம் பெற்றார்.

    ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்.பி. ஆவார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×