என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர்கள் உயிரிழப்பு"

    • பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்.
    • எங்கள் வீரர்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமுற்றனர். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில்,

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் பத்னோட்டாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்.

    அவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மேலும் எங்கள் வீரர்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

    இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


    • பயங்கரவாதிகள் நம் எல்லைக்குள் ஊடுருவி மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று அண்டை நாடு நினைத்தால் அது தவறு.
    • அவர்கள் இந்த பாதையில் செல்ல விரும்பினால், பின்விளைவுகளுக்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமுற்றனர். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஜேகேஎன்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறும்போது,

    நாட்டின் மீது உலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க வேண்டும் என்பதே இப்போதைக்கு ஒரே வழி. இது அமைதிக்கான பாதை அல்ல. அழிவுக்கான பாதை. பயங்கரவாதம் யாருக்கும் உதவாது. பயங்கரவாதிகள் நம் எல்லைக்குள் ஊடுருவி மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று அண்டை நாடு நினைத்தால் அது தவறு. அவர்கள் தோல்வி அடைவார்கள்.

    இதற்கு பிறகு கோபம் அதிகமாகி ஆக்கிரமிப்பு மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பயப்படுகிறேன். அவர்கள் ஏற்கனவே தங்கள் நாட்டை அழித்துவிட்டார்கள். இப்போது ஒரு போர் அதை மேலும் அழிக்கும். இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?

    உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் துக்கம் அனுசரித்து, பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவர்கள் இந்த பாதையில் செல்ல விரும்பினால், பின்விளைவுகளுக்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் கைகோர்த்து செல்ல முடியாது.

    அவர்கள் நல்ல உறவுகளை விரும்பினால், அவர்கள் அந்த பாதையில் நடக்க வேண்டும், பயங்கரவாதம் அந்த பாதையில் இல்லை. எனவே பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
    • ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.

    கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர். 

    வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    அப்போது அந்த ஹெலிகாப்டர் குமரிபோ என்ற நகராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரும் தப்பவில்லை. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 8 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

    இதனை அந்நாட்டின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார். எனினும், விபத்து எப்போது நடந்தது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.

    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூர் மாவட்டத்தில் இன்று கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் ஒன்று மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

    பந்திபூர் மாவட்டத்தில் உள்ள சதர் கூட் பேயன் என்ற பகுதி அருகே சாலையின் ஒரு கூர்மையான வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில், பலத்த காயமடைந்த ராணுவ வீர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இரண்டு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 5 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    யூனியன் பிரதேசத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளாவது முதல் முறை அல்ல.

    கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று, பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் 350 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து வீரர்கள் இறந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பயங்கரவாத கோணம் எதுவும் இல்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நவம்பர் 4 அன்று, ரஜோரி மாவட்டத்தில் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு ராணுவ வீரர் இறந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.

    நவம்பர் 2, அன்று ரியாசி மாவட்டத்தில் ஒரு மலைப்பாங்கான சாலையில் இருந்து கார் சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 10 மாத மகன் உட்பட மூன்று பேர் இறந்தனர் மற்றும் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×