search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் கோப்பை 2025"

    • அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது.
    • இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை.

    லாகூர்:

    இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

    அடுத்ததாக பாகிஸ்தானில் 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது. பாகிஸ்தானுடனான சீரற்ற உறவு மற்றும் பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

    இந்த நிலையில் இந்திய அணி இந்த முறை பாகிஸ்தானுக்கு வருகை தரும் என்று அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐ.சி.சி.யின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய்ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளது என்று தான் அர்த்தம். இதுவே இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருகை தருவதை 50 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது.

    கிரிக்கெட் வாரிய நிர்வாகியாக ஜெய்ஷா இதுவரை செய்துள்ள பணிகள் கிரிக்கெட்டுக்கு ஆதாயம் தரும் வகையிலேயே இருந்துள்ளன. எனவே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்பதை உறுதி செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வார் என நம்புகிறேன்.

    இவ்வாறு ரஷித் லத்தீப் கூறினார்.

    • இதனை பாகிஸ்தான் முதல் முறையாக 2025-ல் நடத்துகிறது.
    • 5 போட்டிகள், ராவல்பிண்டியிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    "மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.

    கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல் முறையாக 2025-ல் நடத்துகிறது.

    ஒருநாள் போட்டித் தர வரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூரில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    தொடக்க ஆட்டம், அரை இறுதி உள்பட 3 போட்டிகள் கராச்சியிலும், இறுதிப் போட்டி உள்பட 7ஆட்டங்கள் லாகூரிலும், அரையிறுதி உள்பட 5 போட்டிகள், ராவல்பிண்டியிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பாதுகாப்பு கருதி மத்திய அரசு அனுமதி மறுப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் விளையாட தயார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருகிற 19-ந்தேதி ஐ.சி.சி.யின் கூட்டம் கொழும்பில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும்.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட இந்திய அரசு அனுமதி மறுப்பதற்கு எழுத்துப்பூர்வ ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.

    இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குவது கட்டாயம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாட மறுத்து இலங்கையில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

    ×