search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்டா பதிவு"

    • ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் மருத்துவர் பதிவிட்டுள்ளார்.
    • சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என ஆதங்கம்.

    செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    செம்பருத்தி டீ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு என நயன்தாரா பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்த மருத்துவர், செம்பருத்தி டீ சுவையானது என சொன்னால் மட்டும் போதும்.. ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

    நெபுலைசர் குறித்து சமந்தா பதிவிட்டபோதும் எதிர்க்குரல் எழுப்பியவர்தான் Liverdoc என்ற ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ்.

    உடல் ஆரோக்கியம் தொடர்பான பதிவா? உணவு ஆலோசகருக்கான விளம்பரமா? என டாக்டர் நயன்தாராவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என மருத்துவர் சரமாரியாக புகார் தெரிவத்துள்ளார்.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து, செம்பருத்தி டீ தொடர்பான பதிவை நயன்தாரா நீக்கியுள்ளார்.

    மேலும், முட்டாள்களுடன் விவாதிக்க விரும்பவில்லை என மார்க் ட்வைன் கருத்தை நயன்தாரா பதிவு செய்துள்ளார்.

    • இளவரசி விவாகரத்து செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியும் உள்ளனர்.

    துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

    தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை வரவேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    விவாகரத்து குறித்து ஷைக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாரகிராம் பக்கத்தில், "அன்புள்ள கணவரே.. உங்களுக்கு வேறொரு துணை கிடைத்துவிட்டதால், நம் விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி." என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும், அவர்களின் சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியும் உள்ளனர்.

    "இது ஒரு மோசமான செய்தி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று ஒரு பயனர் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "உங்களின் முடிவுக்காக பெருமைப்படுகிறேன்" என்றார்.

    இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர், 12 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் மகளை வரவேற்றனர்.

    ஷைக்கா மஹ்ரா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபர் மற்றும் பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரின் மகள் ஆவார்.

    அவர் பெண்கள் அதிகாரம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்காக வாதிடுபவர். அவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், முகமது பின் ரஷீத் அரசாங்க நிர்வாகத்தில் கல்லூரிப் பட்டமும் பெற்றுள்ளார்.

    ×