search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக்ஸ்"

    • பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடங்கினர்.
    • தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    முன்னதாக அன்றைய தினம் காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைந்தது. பின்னர் பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

    இந்த நிலையில் தான் நேற்று பிரான்ஸ் நாடு நெடுகிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு [டெலிகாம்] கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி பேசுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரமாக மார்சில் [Marseille]  உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது
    • 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். விளையாட்டு என்பதையும் தாண்டி தங்களது நாடுகளின் கவுரவம் சார்ந்த மிகப்பெரிய பொறுப்பு தங்களை நம்பி கொடுக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் கருதுவதால் வெற்றியும் தோல்வியும் அவர்களை உணர்ச்சிவசப் பட வைத்துவிடுகிறது.

    அந்த வகையில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது. நேற்று 52 கிலோவுக்கு உட்பட பெண்கள் ஜூடோ போட்டியில் உலகின் முதன்மை ஜுடோ வீராங்கனையாக விளங்கும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை தியோரா கெல்டியோரோவா [Diyora Keldiyorova] உடன் ஜப்பானின் யுதா அபே விளையாடினார்.

    4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான  போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். இதனால் ஜூடோ மேட்டை விட்டு கதறி அழுதபடி சென்ற அபேவை அவரது பயிற்சியாளராலும் தேற்ற முடியவில்லை. 3 வருடங்களுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்சில் அபே தங்க மெடல் வாங்கி ஜப்பானுக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • அவரை நோட்டமிட்டு வந்த 5 பேர் மர்ம நபர்களிடம் அதிகாலை 5 மணியளவில் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கியுள்ளார்.
    • பெண்ணை துரத்தி வந்த அந்த ஐவருள் ஒருவன் கபாப் உணவகத்தில் நுழைந்து பெண்ணின் பின்னால் தட்டிவிட்டு உணவு ஆர்டர் செய்துளான்.

    பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் -இல் நாளை மறுநாள் [ஜூலை 26] முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பாரிஸ் நகரில் 25 வயதான ஆஸ்திரேலியப் பெண் 5 நபர்களால்  கூட்டுப்பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் ஐவரிடம் இருந்து தப்பித்து உணவகம் ஒன்றில் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்கும் அதிர்ச்சி வீடியோவும் வெளியாகியுள்ளது.

    காயங்களுடன் தனது உடையை தலைகீழாக அணிந்து அலங்கோலமாக அந்த பெண் உணவகத்தில் நுழைந்து அங்குள்ளவர்களிடம் தன்னை காப்பற்றும்படி மன்றாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 19 இரவு அந்த ஆஸ்திரேலிய பெண் பாரிஸ் நகரின் பிரபலமான பகுதியான மவுலின் ரோஜ் [Moulin Rouge] பகுதியில் உள்ள பார்கள் மற்றும் கிளப்களில் சுற்றித் திரிந்துள்ளார்.

    அவரை நோட்டமிட்டு வந்த 5 பேர் மர்ம நபர்களிடம் அதிகாலை 5 மணியளவில் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கியுள்ளார். அங்கு வைத்து அவர்கள் ஐவரும் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் ஒருந்த கபாப் உணவகத்தில் தஞ்சமடைந்த அந்த பெண் தனது நிலைமையை அங்கிருந்த ஊழியர்களிடம் எடுத்துக்கூற முயன்றார்.

    ஆனால் அப்பெண்ணை துரத்தி வந்த அந்த ஐவருள் ஒருவன் கபாப் உணவகத்தில் நுழைந்து பெண்ணின் பின்னால் தட்டிவிட்டு உணவு ஆர்டர் செய்துளான்.நிலவரத்தை அறிந்து கடை ஊழியர் அவனை நெருங்குவதற்கு முன் அவன் அங்கிருந்து வெளியேறியுள்ளான்.

    இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் அந்த பெண் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வன்புணர்வால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் அந்த பெண் இன்னும் குழப்ப நிலையிலேயே இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த ஐவரும் ஆபிரகிரர்களைப் போல் இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பீச் வாலிபால் போட்டிகள் ஈபிள் டவர் அருகே நடைபெறுகிறது.
    • தற்காலிகமாக அமைக்கப்படும் அரங்கங்கள் போட்டிகள் முடிந்தவுடன் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும்.

    ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடுகளில் வழக்கமாக ஒரு நகரமே உருவாக்கப்பட்டு புதிதாக மைதானங்கள் கட்டப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் பாரீசில் 95 சதவீதம் ஏற்கெனவே உள்ள ஸ்டேடியங்களிலும் தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டும் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதிக அளவில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்வதை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஒலிம்பிக் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களை கவரும் வகையில் தற்காலிக மைதானங்கள் பாரீஸ் நகரின் முக்கிய அடையாள சின்னங்களான ஈபிள் டவர், கிரான்ட் பேலஸ் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பீச் வாலிபால் போட்டிகள் ஈபிள் டவர் அருகே நடைபெறுகிறது. இவ்வாறு தற்காலிகமாக அமைக்கப்படும் அரங்கங்கள் போட்டிகள் முடிந்தவுடன் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும்.

    லிங்கை கிளிக் செய்யவும்- 162 படகுகளில் Entry... 4 மணி நேர கொண்டாட்டம்.. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்


    • உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
    • 206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக்ஸ் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் யுத்தத்துக்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி இல்லை.

    2-வது ஒலிம்பிக்ஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1900-ம் ஆண்டில் நடந்தது. 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர், வீராங்கனைகள் 19 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.

    ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 162 படகுகள் மூலம் வீரர்கள் மற்றும் கலைஞர்களை செய்ன் நதிக்கு அழைத்து வந்து, சுமார் 6 கி.மீ தூரப்பாதையில் 4 மணி நேரம் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ×