search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக் 2024"

    • நீரஜ் சோப்ரா எதிர்கால வீரர்களுக்கு ஊக்கமாக இருப்பார்.
    • நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்களை வென்று கொடுப்பார்.

    ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2 ஆவது இடம் பிடித்தார். இதனால் இந்தியாவுக்கு ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை. மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்கி நம் தேசத்தை பெருமை கொள்ள செய்வதற்கு அவர் ஊக்கமாக இருப்பார்," என பதிவிட்டுள்ளார்.


    குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தள பதிவில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அவர். அவரால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்கள் மற்றும் பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுத் தருவார் என இந்தியா எதிர்நோக்குகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
    • டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இருந்தார்.

    ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இது ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஐந்தாவது பதக்கம் ஆகும். முன்னதாக இந்தியா நான்கு வெண்கல பதக்கங்களை வென்று இருந்தது. ஈட்டி எறிதலை பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 தூரத்திற்கு வீசி 3-வது இடத்தைப் பிடித்தார்.

    முன்னதாக நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றிருந்தார். தற்போது அவர் தனது சாதனையை முறியடித்த நிலையிலும், தங்க பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டுள்ளார்.

    • இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா.
    • இன்னும் 45 விளையாட்டுகளில் சிலவற்றிற்கான டிக்கெட்டுகள் விற்பனையில் உள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த

    இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    7,500 விளையாட்டு வீரர்கள், 300,000 பார்வையாளர்கள் மற்றும் விஐபிகளுடன் பாரிஸ் தொடக்க விழா வண்ணமயமாக தொடங்குகிறது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

    அதன்படி, இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் 9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பாரிஸைப் பொறுத்தவரை, ஒலிம்பிக்கிற்கு மொத்தம் 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையானபோதும், இன்னும் சில போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், விற்பனை அளவு மேலும் கூடும் என எதிர்பார்கப்படுகிறது.

    முந்தைய டிக்கெட் விற்பனை சாதனையாக, 1996ம் ஆண்டில் அட்லாண்டா இடம் பிடித்தது. அப்போது 8.3 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரலில் தொடங்கி, உள்ளூர் இளைஞர்கள், அமெச்சூர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக சுமார் ஒரு மில்லியன் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒலிம்பிக் தொடக்க விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
    • 10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் இந்த தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

    பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் நாசவேலை செய்து முடக்கியிருக்கும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, அரசு போக்குவரத்து நிறுவனமான எஸ்என்சிஎப் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்து காரணமாக, பாரிஸ் மற்றும் லில்லி இடையே அதிவேகப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாரிஸூக்கு செல்லும் மற்றும் வரும் அதைத்து அதிவேக ரெயில்களும் இன்று கிளாசிக் பாதை வழியாக திருப்பி விடப்படுகின்றன. இது பயண நேரத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நீட்டிக்கிறது.

    ரெயில்கள் வெவ்வேறு தடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. ஆனால் அவற்றில் அதிக எண்ணிக்கையை நாங்கள் ரத்து செய்ய வேண்டியிருக்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "ஜூலை 29 திங்கட்கிழமை இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று ரெயில் புறப்படும் மண்டபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது. ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும்.

    அந்த வகையில் வில்வித்தை தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.

    12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 2013 புள்ளிகளைப் பெற்றது. இதனால் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தென் கொரியா அணி 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும் , பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் , சீனா 1998 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    மகளிர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகளில் இந்திய அணியில் அங்கிதா பகத், பஜன் கவுர் தீபிகா குமாரி ஆகியோர் இடம் பெற்றனர். 12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 1983 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ×