என் மலர்
நீங்கள் தேடியது "எச்எஸ் பிரனாய்"
- பி.வி.சிந்து ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
- டென்னிசில் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
பிரனாய் வரும் புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் மோதுகிறார்.
- பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் டகாஹஷி உடன் மோதினார்.
இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவான் வீரர் வாங் உடன் மோதினார். இதில் பிரனாய் 21-11, 20-22, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் , பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.
- மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.
பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் டோமா 21-19, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் பிரணாயை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே பிரனாய் வெளியேறியது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார். அந்த போட்டி மாலை 6.25 மணிக்கு தொடங்குகிறது.