என் மலர்
நீங்கள் தேடியது "கேந்திரிய வித்யாலயா பள்ளி"
- தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை?
- உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி.
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் கற்பிக்க நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என, பாராளுமன்றத்தில், மத்திய அரசு அளித்துள்ளதாக" தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், மத்திய அரசில் 15 ஆண்டுகள் தி.மு.க. அங்கம் வகித்தபோதும் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருந்தன.
அப்போது, தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை? அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி இதை கேட்டிருக்கலாமே? மத்திய அமைச்சர் பதவிக்காக, பசையான துறைகளுக்காக சோனியா காந்தியிடம் சண்டை போட்ட தி.மு.க., கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்க சண்டை போட்டிருக்கலாமே?
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை எனக்கூறும் கனிமொழி, இந்தப் பள்ளிகளில் எப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்? தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் எப்போது நியமிக்கப்பட்டனர்? என்பதையும் சொல்ல வேண்டும்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா?
2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. கூட்டணி அரசு அமையும் முன்பு வரை, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை. மோடி அவர்கள் பிரதமரான பிறகுதான், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளை விருப்பப் பாடமாக கற்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.
தமிழே இல்லாமல் இருந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் வந்ததே பிரதமர் மோடி ஆட்சியில்தான். இந்த உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி.
புதிய தேசிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிப் பாடங்கள் கட்டாயமாக்கப்படும். அப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ, சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா?
- பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது தானா ?
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (கே.வி) தமிழ் கற்பிப்பதற்கு தமிழாசிரியர்களே இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் "0". ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர்.
- தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டத்தில் கேந்திரிய வித்யாலயாவில் தமிழ், இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.
கனிமொழி எம்.பி கேட்ட கேள்விக்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 86 இந்தி, 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.
தமிழ்நாட்டில் 21,725 பள்ளிகளில் ஒரு மொழி மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 35,092 பள்ளிகளில் இரு மொழி, 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்றார்.
- மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணத்தில் இந்திய கடற்படை வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவர் ஒருவர் மீது தண்ணீரை சிந்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவர்களுக்கிடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை மாணவர் தனது வீட்டில் இருந்து சிறிய அரிவாள் ஒன்றை எடுத்து வந்து தன் மீது தண்ணீர் சிந்திய மாணவரை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த மாணவர் அலறி துடித்தார். உடனே அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சம்பவம் குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த மாணவனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்திருக்கிறது.
- கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதிகள் மாற்றப்பட வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருந்தார்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது.
இதனையடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தேர்வுகள் ஜனவரி 13 முதல் 16 வரை நடக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பொங்கல் திருநாளை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதிகள் மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதனடிப்படையில் , ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்திருக்கிறது.
பொங்கல் விழாவுக்காக கேந்திரிய வித்யாலயா தேர்வுத் தேதிகளை மாற்றக்கோரிய எனது கடிதத்திற்கு தரப்பட்டுள்ள பதில்;
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), சென்னை பிரிவு, பொங்கல் திருவிழா நாட்களில் தேர்வுகள் நடக்காமல் இருக்க தேர்வுத் தேதிகளை மாற்றியமைத்திருக்கிறது.
தேர்வுகள் முதலில் ஜனவரி 13, 2025 முதல் தொடங்க இருந்த நிலையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு தேதி மாற்றப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தேன்.
அதனடிப்படையில் , ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா பதில் தந்துள்ளது.
கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தை விரைவாக செய்த கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு நன்றி. மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.