search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா"

    • நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23-ந்தேதி தாக்கல் செய்தார்.
    • எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-2025-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை 23-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    இந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

    இன்று மாநிலங்களவையில் ஜெயா பச்சன்- மாநிலங்களவை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதில் ஒரு அமர்வுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்த இன்று மிகவும் சோகமான நாள்.
    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மனித உரிமைக்கு எதிரானது.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பயன்படுத்தபட்டு வருகின்றது.

    இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

    இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இதற்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்தன.

    இருப்பினும் பாராளுமன்ற கூடியதும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அதன் மீது காங்கிரஸ் எம்.பி.வேணுகோபால் பேசினார். அப்போது சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த மசோதா தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

    இந்நிலையில், இதுதொடர்பாக திமுக எம்.பி., கனிமொழி கூறியதாவது:-

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்த இன்று மிகவும் சோகமான நாள். மத சுதந்திரத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தலையிடுகிறது. இந்த மசோதா மனித உரிமைக்கு எதிரானது. அரசியல் அமைப்பு மட்டுமின்றி கூட்டாட்சி முறைக்கும் இது எதிரானது. நாட்டு மக்கள் இடையே பிரிவை ஏற்படுத்தும் முயற்சி இதுவாகும். குறிப்பிட்ட மதம், சமுதாயத்தினரை குறிவைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரான மசோதா. சிறுபான்மை மக்களை குறிவைத்து வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×