என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படப்பை"

    • லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை.

    படப்பை:

    கடலூரை சேர்ந்தவர் தர்மதுரை(வயது29). இவர் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் நெடுஞ்சாலையில் நத்தம்பாக்கம் நோக்கி சென்றார். புதுநல்லூர் பகுதியில் வந்த போது மாடு ஒன்று திடீரென குறுக்கே வந்தது.

    இதில் மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த தர்மதுரை மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த சிமெண்ட் கான்கிரீட் கலவை லாரி தர்மதுரை மீது மோதியது.

    லாரியின் சக்கரத்தில் சிக்கிய தர்மதுரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான தர்மதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்றத்தூர் நெடுஞ்சாலையில் அதிக அளவில் மாடுகள் சுற்றி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோபால் ராஜ், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பரமேஸ்வரியிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம் பாக்கம், தாய்மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கோபால் ராஜ் (33). இவர் அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (26), இருவருக்கும் திருமணம் நடந்து 10 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். கோபால்ராஜிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.

    இந்த நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கோபால் ராஜ், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பரமேஸ்வரியிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர், பரமேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் பரமேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கோபால்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துணை சுகாதார நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
    • கட்டிட பணி முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் மூடியே கிடக்கிறது.

    படப்பை:

    படப்பை அருகே உள்ள செரப்பணஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 15-வது நிதிக் குழு மானியத்தில் துணை சுகாதார நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டிட பணி முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் மூடியே கிடக்கிறது.

    இதனால் இந்த புதியகட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே துணை சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
    • செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    படப்பை:

    குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் பூந்தண்டலம் மணிமங்கலம் ஒரத்தூர் நாட்டரசன்பட்டு வடக்குப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம் பள்ளி வகுப்பறை, கட்டிடம் நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    ×