என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோகோ பைலட்"

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக RRB தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
    • ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

    நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியடைந்தனர்.

    இந்நிலையில், ரெயில்வேயின் இந்த திடீர் முடிவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரயில்வே துறை. நாட்டில் இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பதிவுசெய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

    தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.

    எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது ஒன்றிய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்அவர்கள், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக RRB தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
    • தமிழ்நாட்டில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஐதராபாத் சென்றனர்

    நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர்.

    தெற்கு ரெயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு இன்று இன்று ஷிஃப்ட் முறையில் நடைபெற இருந்தது.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக எந்த முன்னறிவிப்பும் இன்றி மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

    தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது. வெளிமாநில தேர்வு மையங்களை மாற்றுமாறு வைத்த கோரிக்கையை நிராகரித்த ரெயில்வே வாரியம், இப்போது எவ்வித முன்னறிவிப்பின்றி தேர்வை ரத்து செய்துள்ளது.

    இதனால், தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியடைந்தனர்.

    • இரயில்வே தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம்.
    • தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற மத்திய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது.

    இந்தியாவிலேயே அதிக கல்லூரிகள் இருக்கும் தமிழ்நாட்டில் 6000 பேருக்கு தேர்வு மையம் அமைக்க முடியவில்லை என இரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் திருமிகு பிரதிபா யாதவ் அவர்கள், நான் CBT 2 தேர்வு மையங்கள் வெளி மாநிலத்தில் போடப்பட்டு இருப்பது பற்றிய எனது கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.

    ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் வேறு ஒரு தேர்வை நடத்தி வேண்டி இருப்பதாலும் CBT 2 தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியை தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா?

    இப்படி தமிழ்நாடு தேர்வர்கள் வெளி மாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன்!

    உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல.

    தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • ரெயில்வே துறைக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
    • ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

    தெற்கு ரெயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே துறைக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனிடைய தொடர்பாக ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கியது தொடர்பாக ரெயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம் கட்டத் தேர்வு அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் விண்ணப்பதாரர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாத சூழலில் அண்டை மாநிலங்களில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை; இது ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைதான். இட ஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்கள், ரெயிலில் இலவசமாக பயணிக்க பாஸ் தரப்படும்

    • உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது
    • இரயில்வே தேர்வு வாரியத்தின் லோகோ பைலட் தேர்வுக்கு 6000. க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

    தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "இரயில்வே தேர்வு வாரியத்தின் லோகோ பைலட் தேர்வுக்கு 6000. க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

    இவர்களில் பெரும்பாலானோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டுமென்று இரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்

    தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், ரெயில் ஓட்டுனர் பணியில் தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தொடர்வண்டி உதவி ஓட்டுனர் பணிக்கான (Assistant Loco Pilot) ரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு ஆந்திரம், தெலுங்கானம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களை அலைக்கழிக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    இந்தப் பணிக்கான முதற்கட்ட கணினி முறை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இப்போது நடைபெறும் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 6315 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். அவர்களுக்குக் கூட தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்காமல் பிற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது நியாயமல்ல. தமிழக தேர்வர்கள் திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகின்றனரோ என்று தான் தோன்றுகிறது.

    தொடர்வண்டி உதவி ஓட்டுனர் பணி என்பது தொடக்கநிலை பணிகளில் ஒன்றாகும். இத்தேர்வில் பங்கேற்க பல நூறு கி.மீ பயணித்து, அங்கேயே தங்கியிருந்து தேர்வு எழுதிவிட்டு திரும்புவது சாத்தியமல்ல. இது மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார்.
    • தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இன்று(15.03.2025) திருப்பெரும்புதூர் விழா ஒன்றில் பேசிய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என்பது இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் புரியும்.

    தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது, வரிவருவாயில் குறைந்த அளவு நிதிஒதுக்குவது, தமிழ்மொழிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, சென்னை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் உள்ள முன்பதிவில்லாத பெட்டிகளை ஒன்றிய ரயில்வே துறை குறைக்க நடவடிக்கை எடுத்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    தற்போது ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான முதற்கட்ட தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6315 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் நிலைத்தேர்வுக்கு இவர்களில் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துள்ளதாக தகவல் வருகிறது.

    தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தேர்வு எழுதி ஒன்றிய அரசு பணிகளுக்கு வராமல் தடுப்பதே இவர்களின் நோக்கம் என்று புரிகிறது. ஒன்றிய ரயில்வே துறையின் இச்செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்து தமிழ்நாட்டில் அவர்களை தேர்வு எழுத ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • பலருக்கும் உறக்கம் சார்ந்த விஷயங்களில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது.
    • வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    மனிதன் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், உடல் மற்றும் மனதை மீண்டும் புத்துணர்ச்சியூட்ட உறக்கம் மிக மிக முக்கியம். ஆனால், இந்த உறக்கம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் படுத்தவுடன் உறங்குவதும், சிலர் எந்நேரமும் விழித்துக் கொண்டே இருப்பதும் என பலருக்கும் உறக்கம் சார்ந்த விஷயங்களில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது.

    படுத்ததும் உறங்குபவர்கள், எந்நேரமும் உறங்குபவர்கள், எங்கும் உறங்குபவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அந்த வகையில், டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் குடை பிடித்தப்படி அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    தண்டவாளத்தில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்திவிட்டார். பிறகு ரெயிலை விட்டு கீழே இறங்கி வந்து, உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி அங்கிருந்து விரட்டியடித்து அவர் சென்ற பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. பலர் தண்டவாளத்தில் உறங்கிய நபரை வசைபாடியும், பலர் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கமென்ட் செய்து வருகின்றனர். 


    ×