என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்ஜி கர் மருத்துவமனை"
- ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
- நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சுமார் 6 மாத விசாரணைக்குப் பிறகு கடந்த ஜனவரி 20-ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் டெத் சர்டிபிகேட் அவரது பெற்றோரிடம் இன்று அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், அவர்களுக்கு அசல் இறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டது. இன்று, நான் இங்கு வந்து அதை அவர்களிடம் ஒப்படைத்தேன். எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என தெரிவித்தனர்.
- சந்தீப் கோஷிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை மேற்கொண்டிருந்தது.
- அவரது வீட்டிலும் சோதனை நடத்தியிருந்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உளள் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் முதல்வராக இருந்த காலத்தில் நிதி முறைகேடு மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்தீப் கோஷிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியது. அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில் "இது முடிவுக்கான ஆரம்பம்" என மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக விவரமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, ஆளுநர் மூலமாக, தங்களுடைய மகள் கொலை வழக்கில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியதாக ராஜ்பவன் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 9-ந்தேதி மருத்துவமனை செமினார் அறையில் பெண் டாக்டர் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
- கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் தொடர்ந்து அரசு மற்றும் போலீஸ் மீது குற்றச்சாட்டு.
- பணம் தர முன்வந்ததாகவும், தாங்கள் அதை மறுத்ததாகவும் பெற்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் உலுக்கியது. தற்போது பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். மேற்கு வங்க போலீசார் தொடக்கத்தில் இருந்தே தங்கள் மகள் கொலையை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பணம் தர முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இழப்பீடு தொடர்பாக பணம் தருவதாக பெண் டாக்டரின் பெற்றோரிடம் கூறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பெண் டாக்டர் குடும்பத்தினருக்கு பணம் (இழப்பீடு) கொடுக்க நான் ஒருபோதும் முன்வரவில்லை. அவதூறைத் தவிர இது வேறு ஏதுமில்லை. பெற்றோர்கள் பெண் டாக்டர் நினைவாக
ஏதாவது செய்ய விரும்பினால், அரசு அதற்கு ஆதரவாக இருக்கும் என்பதை மட்டும்தான் தெரிவித்தேன்.
இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் முன்வந்தார். ஆனால், துர்கா பூஜையின்போது சட்டம் ஒழுங்கை பற்றி நன்கு அறிந்தவர் எங்களுக்கு தேவை" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜி பொய் சொல்வதாக பெண் டாக்டரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் "முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. அவள் பெயரில் நான் பொய் சொல்லலாமா?.
நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார். மேலும், உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் எனவும் தெரிவித்தார். நீதி கிடைத்த பிறகு உங்களுடைய அலுவலகம் வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தோம்" என்றனர்.
பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
- ஜூனியர் டாக்டர்கள் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
- மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என தெரிவித்தனர்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி, கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையே, மேற்குவங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதனால்தான் பாஜக, மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்களின் வலியுறுத்தலை நிறைவேற்றும் வகையில் பாஜக தொடர்ந்து போராடும் என பா.ஜ.க. மாநில தலைவர் கூறினார்.
இந்நிலையில், நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை ஜூனியர் டாக்டர்கள் கலந்து ஆலோசனை நடத்தினர். அதன்படி, எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் மற்றும் வேலை நிறுத்தப் பணிகள் தொடரும். மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என ஜூனியர் டாக்டர்கள் தெரிவித்தனர்.
- நேற்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என்றனர்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி, கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்.
மேற்குவங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதனால்தான் பாஜக, மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்களின் வலியுறுத்தலை நிறைவேற்றும் வகையில் பாஜக தொடர்ந்து போராடும் என பா.ஜ.க. மாநில தலைவர் கூறினார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை ஜூனியர் டாக்டர்கள் கலந்து ஆலோசனை நடத்தினர். அதன்படி, எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் மற்றும் வேலை நிறுத்தப் பணிகள் தொடரும். மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என ஜூனியர் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனை ஜூனியர் டாக்டர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்குவங்க அரசின் அதிகாரிகளுக்கும், ஜூனியர் டாக்டர்களுக்கும் இடையே நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. கூட்டத்தின் எழுத்துப்பூர்வ அறிக்கையை அரசு கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து, டாக்டர்கள் குற்றம் சாட்டினர்.
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்பு குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவுகளை அரசு வெளியிடும் வரை, தங்களது போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தைத் தொடர உள்ளோம் என தெரிவித்தனர்.
- நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
- வரும் 21-ம் தேதி முதல் டாக்டர்கள் பணிக்கு திரும்புகின்றனர்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த கூட்டத்தில் ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி, கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, ஜூனியர் டாக்டர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் மற்றும் வேலைநிறுத்தப் பணிகள் தொடரும். மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என தெரிவித்தனர்.
இதற்கிடையே, மேற்குவங்க அரசின் அதிகாரிகளுக்கும், ஜூனியர் டாக்டர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தைத் தொடர உள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜூனியர் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது. வரும் 21-ம் தேதி முதல் அவர்கள் பணிக்கு திரும்புகின்றனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், வெள்ளப் பிரச்சனை உள்ளது. நமக்குத் துணை நின்றவர்கள் ஏதேனும் பேரிடரை எதிர்கொண்டால், அவர்களுக்கு உதவ நாம் இருக்க வேண்டியது நமது கடமை. எனவே, இந்தப் போராட்டக் களத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளோம். சிஜிஓ வளாகம் வரை பேரணி நடத்துவோம். அபயாவுக்கு நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணையை துரிதப்படுத்தக் கோரி போராட்டம் நடத்துவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வந்து மாணவர்களின் குறைகளைக் கேட்கும் வகையில் மருத்துவமனைகளில் முறையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
இதன்மூலம் 40 நாட்களுக்கு மேலாக நடந்த டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது.
- பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் வேலை நிறுத்தம்.
- மருத்துவமனையின் கட்டமைப்பு, பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வதை்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் ஒருவர் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கியது.
பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு, டாக்டர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இருந்த போதிலும் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் உள்பட தங்களது அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று ஜூனியர் டாக்டர் அமைப்பின் முக்கிய குழு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் இன்று மதியம் நடைபெறும் பேரணிக்குப் பிறகு வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான வேலை நிறுத்தம் திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மாநில அரசுக்கு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற காலக்கெடு விதிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
நோயாளிகள் இன்னல்களை சந்திப்பதால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஜூனியர் டாக்டர்களை சஸ்பெண்ட் செய்ய சீனியர் டாக்டர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்கதக்து.
ஜூனியர் டாக்டர்கள் 42 நாட்கள் முழு வேலை நிறுத்தம் செய்தனர். மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர்களுடைய போராட்டம் செப்டம்பர் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அப்போது முக்கியமான மருத்துவ சேவை பாதிக்கக்கூடாது என்ற வகையில் முடிவு செய்தனர். பின்னர் அக்டோபர் 1-ந்தேதி மீண்டும் தங்களது வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
- தங்கள் கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.
- இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் ஒருவர் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கியது.
பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு, டாக்டர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
பணி செய்யும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா உள்பட பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டார்.
டாக்டர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக்கொண்டபடி செயல்படுத்தவில்லை எனக்கூறி ஜூனியர் டாக்டர்கள் கடந்த 1-ம் தேதி மீண்டும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். அப்போது தங்கள் கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அரசிடமிருந்து எந்த பதிலும் வரைவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூனியர் டாக்டர்கள் நேற்று நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், டாக்டர்களின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்குவங்க அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.
- பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் உண்ணாவிரதம்.
- மேற்கு வங்கத்தில் உள்ள எங்கள் சக ஊழியர்களுக்கு ஒற்றுமையாக நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பெண் டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநில அரசுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கொல்கத்தா ஜூனியர் டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக டாக்டர்கள் சங்கம் (Federation of All India Medical Association (FAIMA)) அறிவித்தள்ளது.
"நாங்கள் மேற்கு வங்க ஜூனியர் டாக்டர்கள் முன்னணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம், எங்கள் நிலைப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளோம். விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் உள்ள எங்கள் சக ஊழியர்களுக்கு ஒற்றுமையாக நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்." என அனைத்திந்திய மெடிக்கல் அசோசியேசன் பெடரேசன் தலைவர் சவ்ரங்கர் தத்தா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம 9-ந்தேதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
சுமார் 42 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்குப் பிறகு தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
- அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு.
- நாங்கள் வழக்கை நடத்தியிருந்தால் மரண தண்டனை வாங்கி கொடுத்திருப்போம் என்றார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக சினிமாத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின.
மறுபுறம் பஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.
அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்பவர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டும், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் கடந்த நவம்பர் 12-ந்தேதி முதல் கேமரா முன்பு விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
மிகவும் வேகமாக நடந்து வந்த விசாரணை கடந்த 9-ந்தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படி இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார்.
அத்துடன் குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் வழக்கை கையாண்டிருந்தால் மரண தண்டனை வாங்கி கொடுத்திருப்போம் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.
- அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பெண்ணின் தாயார் அதே மருத்துவமனையில் டாக்டராக உள்ளவர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். 6 மாத விசாரணைக்கு பிறகு கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் 20 வயதான 2 ஆம் ஆண்டு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெண்ணின் தாயார் அதே மருத்துவமனையில் டாக்டராக உள்ளவர். தாயுடன் இஎஸ்ஐ குடியிருப்பில் அப்பெண் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பலமுறை போன் செய்தும் மகள் பதிலளிக்கவில்லை. எனவே குடியிருப்பு வீட்டின் பூட்டிய அறைக் கதவை உடைத்து சென்று பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிய நிலயில் இருந்ததை தாய் பார்த்துள்ளார்.
உடனே மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டபோதோலும் மாணவி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மாணவி ஏற்கனேவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அறையில் தற்கொலை குறிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நியாயம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை.
- இப்படியொரு மரணம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் பிரதமர் மோடியை சந்தித்து அவரிடம் நியாயம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார், "நான் பிரதமர் மோடியை சந்தித்து, இந்த விவகாரத்தில் அவர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரிடம் கூற விரும்புகிறேன்."
"எங்கள் மகள் பெரிய கனவு கொண்டிருந்தாள். அவளுக்கு இப்படியொரு மரணம் ஏற்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. அவள் எங்களை விட்டுச் சென்று ஏழு மாதங்கள் கழிந்துவிட்டது, ஆனால் நீதி எங்கே? எங்களிடம் அவளின் இறப்பு சான்றிதழ் கூட இல்லை. பெண் மருத்துவருக்கு அவர் பணியாற்றும் இடத்திலேயே பாதுகாப்பு இல்லையெனில், வேறு எங்கு தான் பாதுகாப்பு இருக்கும்?," என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயர் கூறிய கருத்துக்கள் குறித்து பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. அக்னிமித்ரா பால், "பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நமது பிரதமர் அவர்களுக்கு (பெற்றோருக்கு) நேரம் கொடுத்து, அவர்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்பார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில நிதித்துறை அமைச்சர் சந்திர்மா பட்டாச்சார்யா கூறும் போது, "நாட்டின் எந்த குடிமகனுக்கும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு அவரை சந்திக்கும் உரிமை உள்ளது. ஆனால், நமது தலைவர் மம்தா பானர்ஜி தான் இந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்து முதல் நடவடிக்கையை எடுத்தார் என்பதை மறந்துவிடக்கூடாது," என்று தெரிவித்தார்.