search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்நதிமன்றம்"

    • குடோன் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்துக்கும், இயற்கைக்கு மாறான வல்லுறவுக்குக்கும் ஆளாக்கினார்கள்
    • ம.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, குற்றவாளி பாஜகவை சேர்ந்தவன் என்பதால் போலீசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் 5 ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் நிர்வாணமாக ஆடவைத்து சித்ரவதை செய்ததாகக் காவல் நிலையத்தில் பெண் புகார் அளிக்க வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண் அளித்த புகாரில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி தன்னை அவர்கள் கடத்திச் சென்று குடோன் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்துக்கும், இயற்கைக்கு மாறான வல்லுறவுக்குக்கும் ஆளாக்கினார்கள், அதன்பின் தொலைக்காட்சி பார்த்த அவர்கள் தன்னை பெல்டால் அடித்து வற்புறுத்தி அந்த நிலைமையில் அரை மணி நேரம் தன்னை நிர்வாணமாக நடனம் ஆட வைத்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.

    19 நாட்களுக்கு முன்னர் அந்த பெண் புகார் அளித்திருந்தும் போலீசார் இந்நாள்வரை எப்.ஐஆர் பதியாமல் இருந்துள்ளனர். தற்போது உயர்நீதிமன்றத்தில் தலையீட்டுக்கு பின்னர் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. போலீசார் எப்.ஐ.ஆர் பதியாததற்கு காரணம், குற்றம்சாட்டப்பட்ட அந்த ஐவருள் ஒருவன் பாஜகவை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ம.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, பாஜக போலீசை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சாலுஜா, குற்றவாளியின் அரசியல் சார்புகள் எதுவாக இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரணை நடதப்பட்டும் என்று துணை ஆணையர் அபிநய் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

    ×