search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை வெஸ்ட் இண்டீஸ் தொடர்"

    • முதலில் ஆடிய இலங்கை 23 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் டிஎல்எஸ் விதிப்படி 196 ரன்கள் எடுத்து வென்றது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் இரு போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக 23 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 23 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ் அரை சதம் கடந்து தலா 56 ரன்கள் எடுத்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ 36 ரன்கள் எடுத்தார்.

    மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 23 ஓவரில் 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரண்டன் கிங் 16 ரன்னும், ஷாய் ஹோப் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எவின் லெவிஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 22 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்து ஆறுதல் வெற்றி பெற்றது. லெவிஸ் 102 ரன்னும், ரூதர்போர்டு 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கும், தொடர் நாயகன் விருது சரித் அசலங்காவுக்கும் வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக 44 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 80 ரன்கள் எடுத்தார். குடகேஷ் மோட்டி 50 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா மற்றும் சதீரா சமரவிகரமா தலா 38 ரன்கள் எடுத்தனர்.

    கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இலங்கை 38.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

    ஆட்ட நாயகன் விருது மகேஷ் தீக்ஷனாவுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 38.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்தார். கீஸ் கார்டி 37 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 33 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, மழை காரணமாக இலங்கை அணிக்கு 37 ஓவரில் 232 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 69 ரன் குவித்தார். கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இலங்கை 31.5 ஓவரில் 234 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பல்லகலேவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் வனிந்து ஹசரங்கா, சதீரா சமரவிக்ரமா, மகேஷ் தீக்சனா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இலங்கை அணியின் விவரம் வருமாறு:

    சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்கா பெர்ணாண்டோ, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், ஜனித் லியானகே, சதீரா சமரவிக்ரமா, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசிதா பெர்ணாண்டோ, தில்ஷன் மதுஷன்கா, முகமது ஷிராஸ்.

    • முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    தம்புல்லா:

    இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மோதி 15 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 39 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ், குசால் பெராரா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.

    இறுதியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. குசால் மெண்டிஸ் 68 ரன்னும், குசால் பெராரா 55 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • 3-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இலங்கை அணி தரப்பில் தீக்‌ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங்- லீவிஸ் களமிறங்கினர்.

    லீவிஸ் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கிங் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹோப் 18, சேஸ் 8, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 6 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

    இதனையடுத்து கேப்டன் பவல்- குடாகேஷ் மோதி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய மோதி 15 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரோவ்மன் பவல் 20 ரன்கள் எடுத்தார்.
    • இலங்கை தரப்பில் துனித் வெல்லலகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவரில் 89 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லலகே 3 விக்கெட்டும், தீக்ஷனா, அசலங்கா, ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். 

    • மந்தமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மந்தமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா- குசல் மெண்டீஸ் களமிறங்கினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் குவித்தது. இதில் குசல் மெண்டீஸ் 26 ரன்னில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் குசல் பெரேரா 24, கமிந்து மென்டிஸ் 19, அசலங்கா 9 என வெளியேறினர். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை 179 ரன்கள் எடுத்தது.

    கொழும்பு:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புலாவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் அசலங்கா 59 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராண்டன் கிங், எவின் லெவிஸ் ஜோடி அதிரடியில் மிரட்டியது.

    முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்த நிலையில் லெவிஸ், 28 பந்தில் 50 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷாய் ஹோப் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, அதிரடியாக ஆடிய பிராண்டன் கிங் அரை சதம் கடந்து 63 ரன்னில் வெளியேறினார். ரோஸ்டன் சேஸ் 19 ரன்னும், ரோவ்மேன் பவெல் 13 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ×