என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி அணி"

    • உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும்.
    • டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    சென்னை:

    தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், தமிழ்நாடு,டெல்லி, கேரளா உள்பட 30 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 4-வது நாளான இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் 'எப்' பிரிவில் உள்ள உத்தர பிரதேசம்-டெல்லி அணிகள் மோதின. இதில் உத்தர பிரதேசம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    உத்தரபிரதேச அணியில் சந்தன் சிங் (4-வது நிமிடம்), அருண் விகாரி (19), மனிஷ் விகாரி (20) பரால் முகமது (26) கோல் அடித்தனர். டெல்லி அணி தரப்பில் கோவிந்த் சிங் 17-வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.

    உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே கேரளாவை 6-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இன்று மாலை 3.45 மணிக்கு அந்தமான் நிகோபாரை சந்திக்கிறது. தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் ஆந்திராவை 7-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' செய்தது. கால் இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் தமிழக அணி அந்தமான் நிக்கோபாரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

    • பிசிசிஐ-ன் விதிமுறையால் ம், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
    • விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார்.

    மும்பை:

    இந்திய அணியின் மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. பிசிசிஐ-ன் விதிமுறையால், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.

    இந்த நிலையில் மூத்த வீரரான விராட் கோலி தேசிய அளவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார். அவர் அப்போது டெல்லி மாநில அணிக்காக விளையாடி இருந்தார். இப்போதும் அவரது பெயர் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. அவரை ரஞ்சி டிராபி அணியில் சேர்ப்பதா? வேண்டாமா? என குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

    விராட் கோலிக்கு கழுத்து வலி ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக அவர் ஊசி செலுத்தி கொண்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் தான் இந்த குழப்பத்துக்கு காரணம். இந்த நிலையில். டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலியின் பெயரை அணியில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.

    விராட் கோலி விளையாட மறுத்ததால் கழுத்து வலி என்ற காரணம் சொல்லப்படுகிறதா? அல்லது உண்மையாகவே அவருக்கு கழுத்து வலி இருக்கிறதா? என சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    அதன்படி எந்த வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லையோ, அந்த வீரரை பிசிசிஐ நடத்தும் எந்த கிரிக்கெட் தொடரில் இருந்தும் நீக்கும் முடிவு எடுக்கப்படும் என்றும், ஐபிஎல் தொடரிலும் கூட அந்த வீரர் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. 

    • விராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.
    • விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

    இதன் காரணமாக தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார். மேலும் தனது பேட்டிங்கில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கருடன் இணைந்து அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கும் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியை வேறொருவரின் தலைமைக்கு கீழ் விளையாட வைக்காமல் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.

    ஆனால் அதனை மறுத்த விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழலில் டெல்லி அணியில் எந்தெந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அதன் காரணமாக தானும் அணியில் ஒரு அங்கமாக இணைந்து சாதாரண வீரராக விளையாட விரும்புவதாகவும் விராட் கோலி கூறியுள்ளாராம்.

    • 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார்.
    • ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்திய அணியின் பேட்டிங் சொதப்பிய நிலையில், அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது. அதன்படி அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகின்றனர்.

    அந்த வகையில் கழுத்து வலி காரணமாக ஓய்வு இருந்து வந்த விராட் கோலி, தற்போது ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக களமிறங்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார். சீனியர் வீரரான விராட் கோலிக்கு கேப்டன் பதவு கொடுக்க டெல்லி அணி நிர்வாகம் முன்வந்த நிலையில் அதனை கோலி நிகாரித்தார்.

    இதனால் ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது. வருகிற 30-ந் தேதி ரெயில்வே அணியுடன் டெல்லி அணி மோதுகிறது.

    இந்நிலையில் டெல்லி அணியுடன் விராட் கோலி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் பீல்டிங் செய்யும் வீடியோ என கோலி குறித்து பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த பயிற்சியின் போது அவரது ரசிகருக்கு தனது கையுறையை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

    • டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை தொடங்குகிறது.
    • டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.

    டெல்லி:

    12 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.

    இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நாளை அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.

    கடந்த வாரம் வரை டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை. ஆனால், தற்போது விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது. ஜியோ சினிமா விராட் கோலி ஆடும் போட்டியை ஒளிபரப்பும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

    டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் ஆடும் போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாமல் போனால் விராட் கோலியை பார்க்க வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் மைதானத்திற்கு வர முயல்வார்கள். எனவே, மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    விராட் கோலி பயிற்சி செய்யும் போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடங்கியது.
    • டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

    புதுடெல்லி:

    விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

    இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி-ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.

    ரசிகர் ஒருவர் பாதுகாப்பையும் மீறி மைதானத்தினுள் சென்று விராட் கோலியின் காலில் விழுந்தார். உடனே பதறிய கோலி அவரை தூக்கி விட்டார். அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    விராட் கோலி ஆடும் இந்தப் போட்டியை ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது.

    விராட் கோலி பயிற்சி செய்யும்போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×