என் மலர்
நீங்கள் தேடியது "கேஎல் ராகுல்"
- ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் தவான் ஒருநாள் அணி கேப்டனாக பணியாற்றியுள்ளார்
- கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால் தவானிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது
இந்திய அணியின் தொடக்க இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.
மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படும்போது ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டள்ளார்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஜிம்பாப்வே தொடருக்கான அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜிம்பாப்வே தொடர் தொடங்கும் நிலையில் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதால் தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நாளை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே தொடரின்போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தவான் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-
நீங்கள் நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இந்த நிலையில் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேப்டன் பதவியும், அதன் சவால் பற்றியும் நான் சிறப்பாக உணர்கிறேன். இளம் வீரர்களை கொண்ட அணியுடன் நாம் சில சிறந்த தொடர்களை வென்றுள்ளோம்.
ஜிம்பாப்வே தொடரின்போது, மெயின் அணியின் துணைக் கேப்டனான கே.எல். ராகுல் மீண்டும் விளையாட வரும்போது, அவர் ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறார் என்ற உண்மையை நான் கவனத்தில் கொண்டேன். ஆசிய கோப்பையின்போது ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டால், கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட கேட்டுக் கொள்ளப்படுவார். ஆகவே, ஜிம்பாப்வே தொடர் அவருக்கு சிறந்த பயிற்சியாக இருந்திருக்கும்..
அதனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. எது நடந்தாலும், அது சிறப்பானவைக்காக நிகழும் என நினைப்பேன். தென்ஆப்பிரிக்கா தொடருக்கான கேப்டனை தேர்வு செய்யும்போது, எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தனர். நான் ஒருபோதும் மோசமானதாக உணர்ந்தது இல்லை'' என்றார்.
- மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.
- இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.
காதலியை கரம்பிடிக்கும் கேஎல் ராகுல்- திருமணம் தேதியை சூசகமாக அறிவித்த சுனில் ஷெட்டிபிரபல பாலிவுட் வில்லன் நடிகரின் மகளை காதலித்து வரும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்து வருபவர் கே.எல்.ராகுல். கர்நாடகாவை சேர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு காதல் வதந்திகளில் சிக்கி உள்ளார். கே.எல்.ராகுல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நிதி அகர்வால் உடன் டேட்டிங் செய்து வந்தார். இதைவைத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின. பின்னர் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் நெருங்கி பழகி வந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சுனில் ஷெட்டியின் மகள் தான் அதியா ஷெட்டி. கே.எல்.ராகுல் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, அவருடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த அதியா ஷெட்டி, கடந்த ஆண்டு தங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தார்.
இந்நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.
இதுகுறித்த சூசகமான அறிவிப்பை நடிகர் சுனில் ஷெட்டியும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். பட விழா ஒன்றில் கலந்துகொண்ட சுனில் ஷெட்டியிடம் உங்கள் மகளின் திருமணம் எப்போது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார். இதன்மூலம் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் ஜனவரி மாதம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 186 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாக்கா:
இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து187 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.
வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மெஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது.
ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அது கேட்ச் நோக்கிச் சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் வேகமாக ஓடிச்சென்றார். அவர் கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. கேட்ச் தவறவிட்டதை தொடர்ந்து, அதிரடியை தொடர்ந்த ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஹசன் மிர்சா - ரஹ்மான் ஜோடி கடைசி விக்கெட்டில் 51 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி மீதும், கேப்டன் ரோகித் சர்மா மீதும், கேட்சை தவறவிட்ட கே.எல்.ராகுல் மீதும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
- ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.
- 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும்
வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா 1 -0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. டாக்கா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேச பவுலர்களின் திறமையான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு லிட்டன் தாஸ் 41, சாகிப் 29, ரஹீம் 18 என முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து சென்றனர். அதனால் 139/6 என தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியால் இந்தியாவின் வெற்றி உறுதியான போது விஸ்வரூபம் எடுத்த மெஹதி ஹசன் நங்கூரமாக நின்று வெற்றிக்குப் போராடினார். அப்போது வங்கதேசம் 155/9 ரன்களில் இருந்த போது வெறும் 15 ரன்களில் இருந்த அவர் கொடுத்த அழகான கேட்ச்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டை விட்டார்.
அதை பயன்படுத்திய ஹசன் 38* (39) ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானுடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்துக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். முன்னதாக இப்போட்டியில் ராகுல் கேட்ச்சை விட்டது தான் தோல்விக்கு காரணமென்று நிறைய ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால் பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மொத்த பழியையும் அவர் மீது போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
உண்மையாக அது தான் தோல்விக்கு காரணம் என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆம் அது கடைசி விக்கெட்டாக இருந்ததால் அதைப் பிடித்திருந்தால் போட்டி முடிந்திருக்கும் என்பதால் அதுவும் தோல்விக்கான காரணம் தான். ஆனால் பேட்டிங்கில் நீங்கள் எடுத்த 186 ரன்களையும் பார்க்க வேண்டும்.
சொல்லப்போனால் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டு 136/9 என்ற நிலைமைக்கு இந்தியாவின் பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்கள். அப்போது மெஹதி ஹசன் கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டு எதிரணியை அட்டாக் செய்து தைரியமான ஷாட்டுகளை அடித்து வெற்றி பெற வைத்து விட்டார். ஆனால் உண்மையாக இந்தியா 80 - 70 ரன்கள் குறைவாக எடுத்தது. ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.
ஏனெனில் ஓவருக்கு வெறும் 4 ரன்களை மட்டும் எடுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது தாமாகவே எதிரணிக்கு அழுத்தம் குறைந்து விடும். சொல்லப்போனால் அழுத்தம் இல்லாத போதிலும் அதிகப்படியான தடுப்பாட்டத்தை போட்டு வங்கதேசம் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும் என்று கூறினார்.
அவர் கூறியதை கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் முடிவில் ஒப்புக்கொண்டார். சொல்லப்போனால் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் இதே வங்கதேசத்துக்கு எதிராக எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸை அற்புதமாக ஃபீல்டிங் செய்து ரன் அவுட் செய்த ராகுல் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இப்போட்டியில் கூட பேட்டிங்கில் 73 ரன்கள் எடுத்த அவர் நீண்ட நாட்களுக்கு முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்ததால் துரதிஷ்டவசமாக கேட்ச்சை தவற விட்டார் என்பதால் தோல்விக்கு அவர் மட்டும் காரணமல்ல என்பதே நிதர்சனம்.
- ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளது
- இந்த வருடம் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 721 ரன்களை 60 ரன்கள் சராசரி உடன் எடுத்துள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாகவே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த பின்னர் மூன்றாவது வீரராக களம் புகுந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இறுதியில் 102 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 82 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை முக்கியமான நேரத்தில் பறிகொடுத்தார். இறுதியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத ஒரு வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். அதன்படி இதுவரை இந்திய அணிக்காக 38 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 1534 ரன்களை 49 ரன்கள் சராசரி உடன் அடித்துள்ளார்.
அதோடு அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்திய வீரர்களில் வெகுவிரைவாக 1500 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்தவர்கள் சாதனையில் முதல் இடத்தில் இருந்த கே.எல் ராகுலை பின்னுக்கு தள்ளி அவர் சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 1500 ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் கே.எல் ராகுல் 36 இன்னிங்ஸ்களில் முதலிடத்தில் இருந்த வேளையில் அதனை ஷ்ரேயாஸ் ஐயர் நேற்றைய போட்டியின் மூலம் 34-இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார்.
இவர்கள் இருவரை தொடர்ந்து ஷிகார் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் 38 இன்னிங்ஸ்களில் 1500 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 721 ரன்களை 60 ரன்கள் சராசரி உடன் எடுத்துள்ளார். இதில் 6 அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார்.
- கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே விதிமுறைதான்.
மும்பை:
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மட்டும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன.
இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் டி20 அணி தனியாகவும், ரோகித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான ஒரு அணியும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த விஷயம் கே.எல்.ராகுல் மீது நடவடிக்கை எடுத்திருப்பது தான். தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல்.ராகுல் சமீபத்தில் நடந்த வங்கதேச டெஸ்ட் தொடரிலும் 22, 23, 10, 2 என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் இந்தியாவின் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் கே.எல்.ராகுலிடம் இருந்த துணைக்கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு, ஹர்திக்கிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கே.எல்.ராகுலுடன் லக்னோ அணியில் பணிபுரியும் கவுதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.
நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தேர்வுக்குழுவை கட்டுப்படுத்த முடியாது. அடுத்த தொடரில் என்ன நடக்கும் என்பதை முடிவு செய்ய முடியாது. எனவே இந்த முறை 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி விளையாட வேண்டும்.
நம்மால் மாற்ற முடியாத விஷயத்தை நினைத்து நம்மை நாமே அழுத்தத்தில் போட்டுக்கொள்ள கூடாது. நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார். கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே விதிமுறைதான். அவர்கள் குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்பலாம். யாருமே இங்கு நிரந்தரமானவர்கள் கிடையாது. சிறப்பாக விளையாடி இடத்தை தக்கவையுங்கள்.
இவ்வாறு கம்பீர் கூறியுள்ளார்.
- கே.எல்.ராகுல் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால், அவரிடம் தொடர்ச்சியாக நல்ல திறமையை வெளிப்படுத்துவதில் சிக்கல் காணப்படுகிறது.
- உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் முக்கிய ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்.
இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்தவர் கே.எல்.ராகுல். பேட்ஸ்மேனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல், தொடக்க வீரராக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதற்கு பின்னர் நடந்த போட்டிகளிலும் ராகுலின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வந்தது. இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் பிசிசிஐயின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ராகுல் நீக்கப்பட்டார். இன்னொரு பக்கம் அணியை வழிநடத்தும் பொறுப்பு பாண்ட்யாவுக்கு அளிக்கப்பட்டது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் துணை கேப்டன் பொறுப்பையும் பாண்ட்யா ஏற்றுள்ளார்.
சில வாரங்கள் ஓய்வுக்கு பின்னர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில், ராகுல் நேற்று விளையாடினார். இதில் நல்ல ரன்கள் குவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தும் அவரால் 39 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தொடர்ந்து அவர் தடுமாறி வருவதால் இந்திய அணியின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், ராகுல் குறித்து முன்னாள் கேப்டன் அசாருதீன் பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கே.எல்.ராகுல் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால், அவரிடம் தொடர்ச்சியாக நல்ல திறமையை வெளிப்படுத்துவதில் சிக்கல் காணப்படுகிறது.
இதனை அவரால் சரி செய்ய முடியும். அதற்கு முக்கியமாக பயிற்சியாளர்கள் தான் உதவ வேண்டும். பந்தை எங்கு அடிக்க வேண்டும் என்று தேர்வு செய்வதில் ராகுலுக்கு பிரச்னை இருக்கிறது. இதுதான் அவர் விரைவில் ஆட்டமிழப்பதற்கு காரணமாக நினைக்கிறேன்.
மேலும் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மிகவும் திறமையான வீரர்கள். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர்கள் முக்கிய ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் லோகேஷ் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நடக்கிறது.
- இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல்.
இவர் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை காதலித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ராகுல் ஆடவில்லை. சொந்த காரணங்களுக்காக அவர் விலகி இருந்தார்.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் நாளை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் திருமணம் குறித்த தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நாளை நடக்கிறது. இதற்கான மெஹந்தி விழா மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் இன்று நடந்தது.
மலைவாசஸ்தலமான மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் லோகேஷ் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நடக்கிறது.
இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். மேலும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சல்மான்கான், அக்ஷய்குமார், கிரிக்கெட் வீரர்கள் டோனி, விராட் கோலி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு பாலிவுட், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்காக மும்பையில் பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ராகுல் திருமணம் செய்ய இருக்கும் அதியா ஷெட்டி 2015 முதல் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
- மகாராஷ்டிராவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது.
- மணமக்களின் இரு வீட்டார் மட்டும் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இவரும், இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் கந்தாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதி கே.எல்.ராகுல் - அதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை கே.எல்.ராகுல், அதியா இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.
- தம்பதியருக்கு பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையல்ல.
நடிகை அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும் ஜனவரி 23-ந் தேதி அன்று கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஐபிஎல் போட்டிக்கு பிறகு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தம்பதியருக்கு பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள ஆடம்பர வீடு (50 கோடி) முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து ஆடம்பரமான கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் பைக்குகள் வரை புதுமணத் தம்பதிகளுக்கு அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமண பரிசு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் எதுவுமே உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து அதியா ஷெட்டி குடும்பத்தினர் கூறியதாவது:-
வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையல்ல. இது போன்ற தவறான தகவல்களை பொதுகளத்தில் வெளியிடும் முன் எங்களுடன் விவரங்களை உறுதிப்படுத்துமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
இது சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நிறுத்தும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சொந்த மண்ணில் விளையாடுவதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதற்கான ஆசை இருக்கிறது.
- இந்திய ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
நாக்பூர்:
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய பயிற்சிக்கு பின்னர் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது:-
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ஒரு கடினமான முடிவாக இருக்கும். மிகச்சிறப்பாக விளையாடி உள்ள வீரர்கள் அணியில் உள்ளனர். சில இடங்களுக்கான வீரர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
வீரர்களிடம் பேசப்பட்டு வருகிறது. நாக்பூர் ஆடுகளத்தை நாங்கள் பார்வையிட்டோம். ஆனால் ஆடுகளம் என்ன மாதிரி செயல்படும் என்பதை இப்போதே கணித்து கூறுவது கடினம். ஆடுகளம் எந்த வகையில் செயல்படும் என்பதை போட்டி நாளில் தான் அறிய முடியும். ஆடுகளம் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படும் என்று யூகிக்க முடியும். ஆனால் ஆடுகளங்களைப் அறிந்துகொள்ள முடியாது.
சொந்த மண்ணில் விளையாடுவதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதற்கான ஆசை இருக்கிறது. ஆட்டத்தின் நாள் அல்லது ஆட்டத்திற்கு முந்தைய நாள் இதுதொடர்பான முடிவை எடுப்போம். பேட்டிங்கில் நான் நடுவரிசையில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அதை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன்.
அணிக்காக நான் ஏற்கெனவே அதை செய்துள்ளேன். யார் வேண்டுமானாலும் போட்டியின் நாளில் வெற்றி தேடிக்கொடுக்கக் கூடியவராக மாறலாம். அணிக்கும், குறிப்பிட்ட டெஸ்ட் போட்டிக்கும் எது சிறந்தது என்பதை கருத்தில் கொண்டே விளையாடும் 11 பேர் கொண்ட அணி முடிவு செய்யப்படும்.
கடந்த இரு ஆண்டுகளாக நாங்கள் இதை செய்துள்ளோம். அணியில் உள்ள வீரர்கள் ஏன் விளையாடும் 11 பேர் அணியில் இருக்கிறோம். ஏன் இல்லை, தங்களுக்கான பணி அணியில் என்ன என்பதில் அனைவரும் தெளிவாக உள்ளனர். இந்திய ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.
- சிலர் கேஎல் ராகுலுக்கு எதிராக நான் தன்னிச்சையாக வெறுப்பைக் கொண்டுள்ளதாக நினைக்கிறார்கள்.
- ஃபார்முக்கு திரும்பி நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே இந்த விமர்சனத்திற்கு உங்களது பதிலாக இருக்க முடியும்.
கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 2014-இல் டெஸ்ட்டில் அறிமுகமாகி இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவரை அணியில் இருந்து விடுவிக்குமாறு கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அதற்கு மாறாக அவரைத் துணை கேப்டனாக அறிவித்த பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது சமீப காலங்களாகவே ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அப்படி ஆரம்பத்தில் ரசிகர்கள் மட்டும் விமர்சித்து வந்த ராகுலை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சமீபத்தில் தனது டுவிட்டரில் வெளிப்படையாகவே ஆதாரங்களுடன் விமர்சித்தார். குறிப்பாக 8 வருடங்களாக விளையாடி 40-க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்த அவர் உங்களால் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக வெளிப்படையாக தாக்கினார்.
அத்துடன் உங்களை விட அஷ்வின் துணை கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவர் என்று தெரிவித்த அவர் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ராகுலை மீண்டும் டுவிட்டரில் விமர்சித்தார். அதனால் ராகுல் மீதிருக்கும் பகைமை காரணமாகவே வெங்கடேஷ் பிரசாத் இவ்வாறு பேசுவதாக அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் ராகுல் மீது எந்த பகைமையும் இல்லை என்றும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அக்கறையில் தான் ஆரோக்கியமான விமர்சனங்களை வெளிப்படுத்தியதாக வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிலர் கேஎல் ராகுலுக்கு எதிராக நான் தன்னிச்சையாக வெறுப்பைக் கொண்டுள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியே நேர்மாறானது. ஏனெனில் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இருப்பினும் இந்த பார்மில் தொடர்ந்து விளையாடுவது நிச்சயமாக அவருடைய தன்னம்பிக்கையை அதிகரிக்காது.
எனவே அவர் டெஸ்ட் அணியில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். ஆனால் உள்ளூர் (ரஞ்சி) சீசன் முடிவுக்கு வந்து விட்டது. எனவே புஜாரா நீக்கப்பட்ட போது இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி ரன்களை அடித்து மீண்டும் தனது இடத்தை பிடித்தது போல் ராகுலும் விளையாட வேண்டும். ஃபார்முக்கு திரும்பி நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே இந்த விமர்சனத்திற்கு உங்களது பதிலாக இருக்க முடியும். ஆனால் இதற்காக உங்களால் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க முடியுமா.
இவ்வாறு பிரசாத் கூறியுள்ளார்.