என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎல் ராகுல்"

    • அணியின் துணை கேப்டனாக இல்லாத போது வெளியே உட்கார வைப்பது நிர்வாகத்துக்கும், தேர்வாளர்களுக்கு எளிதாகி விடும்.
    • கே.எல்.ராகுல் திறமையான வீரர்தான். ஆனால் அவர் திணறி வருகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னனி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். டெஸ்டில் அவரது ஆட்டம் மோசமாக இருக்கிறது. கடந்த 6 டெஸ்டில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பதவி ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்டது.

    இதனால் வருகிற 1-ந் தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    11 பேர் கொண்ட அணியில் அவருக்கு பதிலாக சுப்மன்கில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் லோகேஷ் ராகுல் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அணியின் துணை கேப்டனாக இல்லாத போது வெளியே உட்கார வைப்பது நிர்வாகத்துக்கும், தேர்வாளர்களுக்கு எளிதாகி விடும். கே.எல்.ராகுல் திறமையான வீரர்தான். ஆனால் அவர் திணறி வருகிறார். ரோகித் சர்மாவுடன், சுப்மன்கில் தொடக்க வீரராக ஆடுவதை பார்ப்போம்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    • தற்போது நடக்கும் சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர் சிறிய இடைவெளியை எடுத்து கொள்ள வேண்டும்.
    • ஒவ்வொரு வீரரும் இது போன்ற நிலைமையை சமாளித்து வெளியே வர வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னனி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். டெஸ்டில் அவரது ஆட்டம் மோசமாக இருக்கிறது. கடந்த 6 டெஸ்டில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பதவி ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்டது.

    இதனால் வருகிற 1-ந் தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    11 பேர் கொண்ட அணியில் அவருக்கு பதிலாக சுப்மன்கில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுலை போன்ற நிலைமை தனக்கு வந்துள்ளதாகவும் அப்போது தான் அழுததாகவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    லோகேஷ் ராகுல் திறமையான வீரர். 3 விதமான போட்டிகளில் அவரால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அவருடைய ஆட்ட நுனுக்கத்தில் பிரச்சினை இல்லை என நினைக்கிறேன்.

    தற்போது நடக்கும் சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர் சிறிய இடைவெளியை எடுத்து கொள்ள வேண்டும். நிச்சயம் ஒரு ஓய்வுக்கு பிறகு அவர் திரும்ப வந்தால் அவரால் மிக சிறப்பாக விளையாட முடியும்.

    ஒவ்வொரு வீரரும் இது போன்ற நிலைமையை சமாளித்து வெளியே வர வேண்டும். எனக்கு இதே போன்று நிலைமை ஏற்பட் டது.

    அப்போது எனக்கு இதுதான் கடைசி இன்னிங்ஸ் என்று நினைத்து வீரர்கள் அறையில் உள்ள கழிப்பறைக்கு சென்று ஓரிரு துளிகள் கண்ணீர் சிந்தினேன். அந்த அளவுக்கு அந்த சூழ்நிலை மோசமாக இருக்கும். அதனையும் நான் அனுபவித்தேன்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    • சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் ரன் குவிப்பதுடன், வாய்ப்புக்காக கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் சோபிக்கவில்லை. கடைசியாக ஆடிய 8 இன்னிங்சில் முறையே அவர் 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ரன் வீதமே எடுத்துள்ளார். இதனால் முதல் இரு டெஸ்டுக்கு துணை கேப்டனாக செயல்பட்ட அவர் எஞ்சிய இரு டெஸ்டுக்கான அணியில் நீடிக்கிறாரே தவிர துணைகேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

    இந்தூரில் வருகிற 1-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுலை நீக்கிவிட்டு சூப்பர் பார்மில் உள்ள சுப்மன் கில்லை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் எஞ்சிய இரு டெஸ்டில் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என்பதை சூசகமாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    துணை கேப்டன் குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு எடுக்கும். அவர்களுக்கு லோகேஷ் ராகுலின் ஆட்டத்திறன் தற்போது எப்படி உள்ளது. அவர் எத்தகைய மனநிலையில் உள்ளார் என்பது நன்கு தெரியும். என்னை கேட்டால் இந்திய அணிக்கு துணை கேப்டனையே நியமிக்க வேண்டாம் என்று தான் சொல்வேன்.

    போட்டிக்கு மிகச்சிறந்த 11 வீரர்களுடன் தான் செல்ல வேண்டுமே தவிர, துணை கேப்டன் என்ற பொறுப்பை கொண்டு சிக்கலை உருவாக்கிக் கொள்ள கூடாது. களத்தில் துணை கேப்டன் சரியாக செயல்படாவிட்டால் அவரது இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வரலாம்.

    நேர்மையாக சொல்வது என்றால், இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு துணை கேப்டன் பதவியை நான் ஒரு போதும் விரும்புவது இல்லை. ஆனால் வெளிநாட்டில் நிலைமை வேறு. இங்கு நீங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் ரன் குவிப்பதுடன், வாய்ப்புக்காக கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    லோகேஷ் ராகுல் அற்புதமான வீரர் தான். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் அதை களத்தில் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டியது அவசியம். சில நேரம் சிறிய இடைவெளி எடுத்து விட்டு வரும் போது நல்ல பலனை கொடுக்கும். எனது பயிற்சி காலத்தில் புஜாரா நீக்கப்பட்டார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய போது சதங்கள் அடித்தார்.

    இதே போல் ராகுலும் நீக்கப்பட்டு, வலுவாக திரும்பி வந்தார். ஆனால் நீங்கள் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய ஆட்டத்திறனை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொண்டு வர முடியாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இறுதிப்போட்டி நடக்க உள்ள இங்கிலாந்தின் சூழல் இதை விட வித்தியாசமானதாக இருக்கும்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் முழு உடல்தகுதியுடன் கூடுதல் உற்சாகத்தில் களம் இறங்குவார்கள். ஆனால் மனரீதியாக பார்க்கும் போது ஆஸ்திரேலியாவை விட இந்தியாவுக்கே அனுகூலமாக இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வந்து விடுவார்.

    ஏற்கனவே முகமது ஷமியும், முகமது சிராஜிம் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெல்லும் போது, அது மனதளவில் நம்மை வலுப்படுத்தும்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

    • துணைக்கேப்டன் பதவி நீக்கம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
    • இதேபோன்று பலவீரர்கள் இந்த நிலையை சந்தித்திருக்கிறார்கள்.

    இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பாடர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தாலும் இந்த தொடரில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இருப்பது இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுலின் பேட்டிங் குறித்துதான்.

    ஏனெனில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவில் விளையாடும் போதே உங்களால் ரன்னடிக்க முடியவில்லை என்றால் வேறு என்ன செய்ய முடியும் என்று காட்டமான கருத்தினை கங்குலி வெளிப்படுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    உங்களால் இந்தியாவிலேயே ரன்களை குவிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் உங்கள் மீது விமர்சனம் எழத்தான் செய்யும். கே.எல் ராகுல் மட்டும் இந்த நிலையை சந்திக்கவில்லை.

    இதேபோன்று பலவீரர்கள் இந்த நிலையை சந்தித்திருக்கிறார்கள். துணைக்கேப்டன் பதவி நீக்கம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்வு குழுவினர் தொடர்ச்சியாக அவரை கவனித்து வந்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள். இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவரது திறனை பார்த்து வருவதாலேயே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறார் என்று கங்குலி வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

    • அவர் 5 அல்லது 6-வது வரிசையில் களம் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும்.
    • அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லோகேஷ் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். அவர் 5 அல்லது 6-வது வரிசையில் களம் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும். 

    ஏனென்றால் ராகுல் கடந்த ஆண்டு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை தேர்ந்து எடுக்கும் போது லோகேஷ் ராகுலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப்பண்ட் விபத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர் இந்த ஆண்டு முழுவதும் எந்தவித போட்டியிலும் விளையாடமாட்டார். பண்ட் இடத்துக்கு கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அவரது பேட்டிங் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் தான் அவர் இடத்தில் ராகுலை சேர்க்கலாம் என்று கவாஸ்கர் வலியுறுத்தி இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்டில் தொடக்க வீரராக ஆடிய ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது மற்றும் 4-வது டெஸ்டில் அவர் நீக்கப்பட்டார். அதோடு லோகேஷ் ராகுலின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அவரது இடத்தில் இடம் பெற்ற சுப்மன்கில் தொடக்க வரிசையில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.

    தொடக்க வீரர் வரிசையில் சுப்மன்கில் நல்ல நிலையில் இருப்பதால் ராகுலை விக்கெட் கீப்பராக சேர்த்து 6-வது வீரராக களம் இறக்கலாம் என்ற யோசனையை கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

    • இரண்டு வெற்றிகளும் கடின உழைப்பால் கிடைத்தது.
    • இந்த ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே உணர்ந்து இருந்தோம்.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை லக்னோ அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுத்தது. பின்னர் விளையாடிய லக்னோ 16 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி ஆல்-ரவுண்டர் குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தி. பேட்டிங்கில் 34 ரன்கள் எடுத்தார்.

    லக்னோ 2-வது வெற்றியை (3 ஆட்டம்) பெற்றது. ஐதராபாத் தான் மோதிய இரண்டு ஆட்டத்திலும் தோற்றது. வெற்றி குறித்து லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    இந்த ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே உணர்ந்து இருந்தோம். அதில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அதை முதல் 2 ஓவர்களிலேயே பார்த்தோம். பவர் பிளேயில் குர்ணால் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசுவார் என்று எனக்கு தெரியும். அது போலவே அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    இரண்டு வெற்றிகளும் கடின உழைப்பால் கிடைத்தது. அதில் வெவ்வேறு சவால்கள் இருந்தன. அணியில் ஒவ்வொருவரும் வித்தியாசமாக விளையாடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குர்ணால் பாண்ட்யா கூறும்போது பந்து வீச்சு, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐதராபாத் அணியில் நிறைய வலது கை பேட்ஸ்மேன் இருந்ததால் என்னை முன்னதாகவே பந்து வீச அழைப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

    கிரிக்கெட்டில் இருந்து 5 மாதங்கள் ஓய்வு எடுத்து இருந்தேன். எனது திறமைகளை வளர்க்க உழைத்தேன்.

    மும்பை அணியில் விளையாடியபோது 4-வது வரிசையில் களம் இறங்கினேன். எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன் என்றார்.

    • குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் கேஎல் ராகுல் சதமடித்து 149 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    அதில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் ரோகித் சர்மாவுடன் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு சுப்மன் கில்லிடம் டெக்னிக்கல் அளவில் குறைபாடுகள் இருப்பதாகவும் கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ராகுல் தான் விளையாட வேண்டுமென்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வரலாற்றை மறந்து விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய டெக்னிக்கில் சில குறைபாடுகளை நான் பார்த்துள்ளேன்.

    குறிப்பாக பந்து நகரும் போது அவர் தன்னுடைய கைகளை பந்தை நோக்கி சற்று அதிகமாக எடுக்கிறார். அதனால் அடிக்கடி எட்ஜ் கொடுக்கிறார். எனவே கில்லுக்கு பதிலாக ராகுல் தேர்வு செய்யப்படுவாரா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் நான் இந்திய அணியின் தேர்வு குழுவில் இல்லை.

    ஆனால் ஃபைனலுக்கு பின்பாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு அந்த போட்டிக்கான அணியை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இறுதிபோட்டி எனும் ஒரு போட்டியில் வெல்வதற்கான சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    என்று அவர் கூறினார்.

    அவர் கூறுவது போல 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய கில் 28, 8 என 2 இன்னிங்சிலும் சுமாராகவே செயல்பட்டார்.

    மறுபுறம் 2021-ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்ற ராகுல் 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து 149 ரன்கள் விளாசிய அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பவுண்டரி சென்ற பந்தை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடியபோது காயமடைந்தார்
    • காயத்தின் தன்மை குறித்து பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும்.

    லக்னோ:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    போட்டியின் இரண்டாவது ஓவரில் கே.எல்.ராகுல் காயமடைந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை டு பிளசிஸ் அடிக்க, பந்து பவுண்டரியை நோக்கி பாய்ந்தது. அதை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடியபோது கே.எல்.ராகுலின் வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு  தரையில் சரிந்தார். வலியால் துடித்த அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. பின்னர், அணியின் பிசியோ மற்றும் ரிசர்வில் இருந்த சக வீரரின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

    காயத்தின் தன்மை குறித்து பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும். அதன்பிறகே, இப்போட்டியில் அவர் தொடர்ந்து ஆடுவாரா? என்பது தெரியவரும். தசை கிழிந்திருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்பது கடினம்.

    • கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டனாக குர்ணால் பாண்ட்யா செயல்படுவார்.
    • ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார்.

    லக்னோ:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. லக்னோவில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 45-வது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி தேவை என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்நிலையில் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டனாக குர்ணால் பாண்ட்யா செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார். அந்த போட்டியின் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை டு பிளசிஸ் அடிக்க, பந்து பவுண்டரியை நோக்கி பாய்ந்தது. அதை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடியபோது கே.எல்.ராகுலின் வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தரையில் சரிந்தார். வலியால் துடித்த அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. பின்னர், அணியின் பிசியோ மற்றும் ரிசர்வில் இருந்த சக வீரரின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தகக்து. 

    • பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
    • ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் நாளை மும்பை செல்கிறார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல்.போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் காயம் அடைந்தார்.

    பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் நாளை மும்பை செல்கிறார்.

    • பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
    • ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் மும்பை சென்றார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஆட்டத்தில் காயமடைந்தார்.

    பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களில் ராகுல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் மும்பை சென்றார்.

    இந்நிலையில், ஸ்கேன் பரிசோதனை முடிவில் தசைநார் கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே.எல்.ராகுல் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

    • விராட் கோலி இன்ஸ்டா பதிவில் என்ன ஒரு வீரர் என்று பாராட்டியிருந்தார்.
    • இந்த சீசனில் இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடிய சஹா, 273 ரன்கள் வரையில் அடித்துள்ளார்.

    நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 51-வது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    ஆரம்பம் முதலே சஹா அதிரடி காட்டி ஆடினார். அவர் 20 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி குஜராத் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 21 பந்துகளிலும், 24 பந்துகளிலும் விஜய் சங்கர் அரைசதம் அடித்திருக்கிறார். தொடர்ந்து ஆடிய சஹா 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹாவின் பேட்டிங்கை கண்டு வியந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி கூட இன்ஸ்டா பதிவில் என்ன ஒரு வீரர் என்று பாராட்டியிருந்தார்.

    இந்த சீசனில் இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடிய சஹா, 273 ரன்கள் வரையில் அடித்துள்ளார். இதில் 7 சிக்ஸர்கள், 35 பவுண்டரிகள் அடங்கும். அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்குப் பதிலாக விருத்திமான் சஹா இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக சென்னை அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

    அதே போன்று தற்போது ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஹா, கேஎல் ராகுலுக்குப் பதிலாக இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய பந்து வீச்சாளரான தொட்டா கணேஷ் இந்த யோசனையை கூறியிருக்கிறார். வரும் ஜூன் 7ஆம் தேதி ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×