என் மலர்
நீங்கள் தேடியது "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்"
- உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரதமராக இருந்த சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
33 ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், மாநிலங்களவையில் சிங் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். நான்கு மாதங்கள் மேலவையில், ஜூன் மாதம் பி.வி.நரசிம்மராவ் அரசின் கீழ் மத்திய நிதி அமைச்சராக பதவியேற்றார்.
- தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.
ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது.
இதுபற்றி கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் டெல்லியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
இதுபற்றிய தகவலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு 8.05 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.
முன்னதாக டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய இடங்களில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர்.
- மன்மோகன் சிங் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
இந்த நிலையில், மன்மோகன் சிங் அற்புதமான மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர். அவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறினார்.
- திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் திறப்புக்கு தயாராகியுள்ளது.
- கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவர் சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக குமரி மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்திலும், கடலின் நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைப் பகுதியிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது.
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளது.
- ரூ.799.74 கோடியில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இதனை திறந்து வைத்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ரூ.799.74 கோடியில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் நேரு உயிரியல் பூங்காவில் இருந்து அரம்கர் பகுதி வரை சுமார் 4.04 கிலோ மீட்டர் தூரம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் 2-வது பெரிய மேம்பாலமாக இது திகழ்கிறது. இந்த மேம்பாலத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இதனை திறந்து வைத்தார். இந்த புதிய பிரமாண்ட பாலத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்பட்டது.
- டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார்.
- பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை(மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைகிறது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.
காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் உள்ளனர். ஆனால், ஒரு மேல்-சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.
எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், 1991-ம் ஆண்டு முதல் அங்கிருந்து தான் மேல்-சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவருக்கு ஓட்டு கவுகாத்தியில் தான் இருந்தது.
தற்போதைய நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்- சபை உறுப்பினர்களின் பதவி எதுவும் காலியாகவில்லை. இதனால், மன்மோகன்சிங் மீண்டும் மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால், கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவி அக்கட்சிக்கு கிடைக்கிறது. அந்தப் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 -ம் ஆண்டு பதவி ஏற்றார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அடிக்கடி அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது சர்ச்சையானது.
பிரதமராக பதவி ஏற்ற ஒரு ஆண்டுக்குள் 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை மட்டும் 20 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக அரசு சார்பில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டது. இதன் பிறகு ஆண்டுதோறும் இதை விட அதிகமான தொகை பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவழிக்கப்பட்டது.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பா.ஜனதா கட்சியினர் நாட்டின் தொழில்வளத்தை உயர்த்த புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காக பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார் என்று விளக்கம் அளித்தனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான பில் தொகையை சமீபத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அதில் 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 பயணங்கள் சென்றுள்ளார்.
ஒரே பயணத்தில் ஆறு நாடுகளுக்கு சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது என பல்வேறு பயணங்கள் இதில் அடங்கும். இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது என பிரதமர் அலுவலகத்துக்கு ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது.

மன்மோகன் சிங்கைவிட நிறைய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த மோடி அவரைவிட ரூ.50 கோடி குறைவான செலவில் பயணம் செய்தது எப்படி என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே பயணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாடுகளுக்கு சென்றதால் ஏர் இந்தியாவுக்கான கட்டணம் குறைந்துள்ளது. பிரதமர் தனது வெளிநாட்டு பயணங்கள் பற்றிய பேட்டியிலேயே ஒரே டிக்கெட்டில் நிறைய நாடுகள் என்று இதை குறிப்பிட்டு இருக்கிறார். 44 பயணங்களில் 16 பயணங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.
விரைவில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் செல்ல இருக்கிறார். இந்த ஆட்சி காலத்தில் அவரது கடைசி வெளிநாட்டு பயணமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. #AirIndia #PMModi
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் போட்டியிட்டால் சீக்கிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறினர். ஆனால், மன்மோகன் சிங், சாதகமான பதிலை கூறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. போட்டியிட அவர் தயங்குவதாக கூறப்படுகிறது.

1991-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. மக்களவைத் தேர்தல்களில் மன்மோகன் சிங் இதுவரை வெற்றி பெற்றது இல்லை. 1999 ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அவர் பா.ஜனதாவின் மல்கோத்ராவிடம் தோல்வி அடைந்தார். தற்போது, அசாமில் காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால் மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. #LSPolls #ManmohanSingh
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:-

பல்வேறு நாடுகள் தங்களின் அணு ஆயுதங்களை நவீனமாக்கி வருகின்றன. அணு ஆயுத பரவல் தடைக்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு சைபர் பாதிப்புகள் அதிகரிப்பதால் நிச்சயமற்ற தன்மையும் அதிகரிக்கிறது.
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அணு ஆயுத தடை தொடர்பான விரிவான, நவீன அமைதித் திட்டங்களைக் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான். பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அணு ஆயுத விவகாரத்தில் சுமார் 25 ஆண்டுகள் வரை சுய கட்டுப்பாட்டுடன் இருந்தது. அதனால்தான் அணுசக்தி விநியோக நாடுகள் குழு, 2008ம் ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியது.
இவ்வாறு அவர் பேசினார். #ManmohanSingh
டெல்லியில் நேற்று நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் கடுமையான நெருக்கடி, குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் சீர்குலைவு எல்லாவற்றுக்கும் மேலாக பணித்தளங்களில் பிரிவினை சக்திகள் ஆகியவை இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களாக அமைந்துள்ளன.
விவசாயிகளின் தற்கொலைகளும், விவசாயிகள் அடிக்கடி நடத்தி வருகிற போராட்டங்களும் நமது பொருளாதார கட்டமைப்பு சமநிலையின்மையை பிரதிபலிக்கிறது. இதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அரசியல் தலைமை (மத்திய அரசு) இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அது வேலை இழப்பு வீழ்ச்சிக்கு வழிநடத்தி உள்ளது. கிராமப்புறங்களில் கடன்கள் பெருகி வருவதும், நகர்ப்புறங்களில் நிலவுகிற குழப்பங்களும் சேர்ந்து எதிர்பார்ப்பு மிக்க இளைஞர்களை அமைதி இழந்து போகச்செய்கிறது.
தொழில் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தொழில்துறையும் வேகமான வளர்ச்சியை அடையவில்லை.
நாட்டின் பொருளாதாரம் பெருகுவதில் சிறு தொழில் துறையும், அமைப்பு சாரா தொழில் துறையும் துடிப்பு மிக்கவை. ஆனால் பேரழிவை ஏற்படுத்தி உள்ள ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், சரக்கு மற்றும் சேவைவரி நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் வேலை வாய்ப்புகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தொழில் துறையையும், வர்த்தக துறையையும் ஊக்குவிப்பதற்கு நல்ல ஆழ்ந்த சிந்தனையில் தோன்றும் கொள்கைகளும், நல்ல செயல்பாட்டு உத்திகளும் தேவை.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிற உலகம். ஒரு பக்கம் உலகப்பொருளாதாரத்தில் நாம் நம்மை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறோம். உலக சந்தைக்கு நம்மை வெளிப்படுத்தி வருகிறோம். மற்றொரு பக்கத்தில், உள்நாட்டில் நாம் மிகப்பெரிய பொருளாதார, சமூக சவால் களை எதிர்கொண்டு வருகிறோம்.
இது நமது ஜனநாயக உணர்வுகளுக்கும், நமது பொறுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் ஒரு சோதனையான கால கட்டம்.
2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் 3-வது முக்கிய நாடாக இந்தியா வந்து விடும் என கூறப்படுகிற முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் (மாணவர்கள்) வர்த்தக உலகில் இணைகிறீர்கள்.
இதுவரை இல்லாத வகையில் மிக வேகமாக மாற்றங்களை சந்தித்து வருகிற உலகில் உங்களுக்கு வாய்ப்புகளும், சவால் களும் நிரம்ப இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.