என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சய் மஞ்ரேக்கர்"

    • நிதிஷ் முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க் என மஞ்ரேக்கர் கூறியிருந்தார்.
    • 4-வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் சதம் அடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்தும் நிதிஷ் குமார் ரெட்டி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சை மஞ்ரேக்கர் கூறியிருந்தார். நிதிஷ் முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க் எனவும் அவர் கூறியிருந்தார்.

    அவர் பேசுகையில், நிதிஷ் குமார் ரெட்டியை முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க். அவர் திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்கான ஸ்பார்க்கை காட்டிவிட்டார். ஆனால் நிதிஷ் குமார் ரெட்டியை பிளேயிங் லெவனில் சேர்ப்பதால், இந்திய அணியின் பேலன்ஸ் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று கூறியிருந்தார். அவரால் 100 ரன்களுக்கு மேல் அடிக்க முடியுமா எனவும் கூறினார்.

    இவரது விமர்சனத்துக்கு இந்த போட்டியில் சதம் அடித்து நிதிஷ் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது எக்ஸ்தள பதிவுக்கு பூமா ஸ்போர்ட்ஸ் பதிலளித்துள்ளது.

    அதில், பூமா விளம்பரத்தின் போது நிதிஷ் குமார் ரெட்டி போட்டோஷூட் நடத்தினார். அப்போது நிதிஷ் வாயில் கையில் வைத்தப்படி இருக்கும் போட்டோவை வைத்து பூமா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    • அணியிலிருந்து நீக்கப்பட்டதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சர்மா ஒன்றும் சிறந்த பேட்ஸ்மேன் அல்ல.
    • ஒருவேளை விராட் கோலிக்கு இப்படி செய்திருந்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா செயல்பட்டார். ரோகித் 11 பேர் கொண்ட அணியில் கூட இடம் பெறவில்லை.

    ரோகித் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என பல தகவல்கள் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் அவரது ஓய்வை மறைத்து வைத்து கூறும் அளவுக்கு அவர் பெரிய அளவில் ஏதும் செய்யவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் கேப்டனாக பும்ரா மைதானத்திற்குள் வரும் போது ரவி சாஸ்திரி ரோகித் குறித்து கேட்காதது ஆச்சரியமாக இருந்தது. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஏன் ஏதோ ரகசிய ஆபரேஷனை போல் மறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    இதுதான் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் எனக்கு பிடிக்காத விஷயம். அணியிலிருந்து நீக்கப்பட்டதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சர்மா ஒன்றும் சிறந்த பேட்ஸ்மேன் அல்ல. ஒருவேளை விராட் கோலிக்கு இப்படி செய்திருந்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.

    ஆனால் ரோகித் சர்மா சுமார் 60 டெஸ்ட் போட்டிகள் விளையாடி சேனா (தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஒரேயொரு சதத்தை மட்டுமே விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி வெறும் 40 மட்டும்தான். இதனால் ரோகித் சர்மா நீக்கப்பட்டதை இந்திய அணி மறைக்க தேவையில்லை என்பதே எனது கருத்து.

    என்று சஞ்சய் கூறினார்.

    • சமூக வலைதளங்களில் கமென்ட் செய்தனர்.
    • ரோகித் ஓய்வு முடிவு அவரது கையில் தான் உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்தது ஏமாற்றம் அளித்தது. இதோடு, டெஸ்ட் தொடர் தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டது.

    பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவரது ரசிகர்கள் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதே நல்லது என்றும் சமூக வலைதளங்களில் கமென்ட் செய்தனர்.

    இந்த நிலையில், ரோகித் சர்மா ஓய்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் வெளிப்படையாக தெரிகிறது. ஓய்வு அறிவிப்பது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட முடிவுதான். அந்த வகையில் ரோகித் ஓய்வு முடிவு அவரது கையில் தான் உள்ளது."

    "ஆனால் இந்திய அணியில் அவர் விளையாட வேண்டுமா? இல்லையா? என்பது தேர்வுக் குழுவினர் கையில் தான் உள்ளது. ஏனெனில் கடைசியாக நடந்த டெஸ்ட் தொடர்களில் அவர் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார். எனவே அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் அவர் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பதை தேர்வுக் குழுவினர்தான் முடிவு செய்வார்கள்," என்று தெரிவித்தார்.

    • வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.
    • ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்.

    மும்பை:

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நெருக்கடியில் இருக்கிறார். ஆஸ்திரேலிய பயணத்தில் 6 இன்னிங்சில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல விராட் கோலியின் பேட்டிங்கும் மோசமாக இருந்தது.

    இதனால், முன்னாள் வீரர்கள் பலரும் மூத்த வீரர்களை கடுமையாக விமர்சித்தனர். மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

    இந்த நிலையில் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோகித் சர்மாவே முடிவு செய்வார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ததாக நம்புகிறேன். அது போன்று ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். ஓய்வு என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவாகும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு காலம் விளையாட வேண்டும், அணிக்காக எந்த அளவுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது எல்லாம் சம்பந்தப்பட்ட வீரரின் தனிப்பட்ட முடிவை பொறுத்து அமையும். தேர்வுக் குழு உறுப்பினர்களின் கைகளில் இறுதி முடிவு உள்ளது என்பதே உண்மை. வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.

    இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.

    • முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
    • ஏபி டி வில்லியர்ஸ் 2021-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

    தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நிறைய தவறுகளை செய்துவிட்டார் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வந்த ஏபி டி வில்லியர்ஸ் தவறான அணிகளில் விளையாடி விட்டார். 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காக விளையாடினார்.

    மூன்று சீசன்கள் டெல்லி அணியில் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 2011 ஐ.பி.எல். மெகா ஏலத்திற்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்தார். ஆர்.சி.பி. அணிக்காக 11 சீசன்களில் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 2021-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

    இந்த நிலையில், ஏபி டி வில்லியர்ஸ்-இன் மிஸ்டர் 360 நிலையை சூர்யகுமார் அடைந்துவிட்டாரா என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "அவர் போட்டியில் வெற்றி பெறும் தாக்கத்தை பொருத்து ஆம் என்று தான் கூறுவேன்."

    "ஏபி டி வில்லியர்ஸ் சிறப்பாக இருந்தார். இவரின் டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 50 ஆக இருந்தது. ஒரு நாள் போட்டிகளிலும் அவர் தலைசிறந்த வீரர். ஆனால் டி20 கிரிக்கெட்டை மட்டும் பார்த்தால், நான் அதிகம் பார்த்திருக்கிறேன்."

    "ஐ.பி.எல். தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் அவரின் உண்மையான திறமைக்கு ஏற்ப சரியாக பயன்படுத்தப்படவில்லை. இது கூறுவதற்கு மன்னிக்கவும், அவர் தவறான அணிகளில் விளையாடி விட்டார். அவர் வேறு அணியில் விளையாடி இருந்தால், ஏபி டி வில்லியர்ஸ்-இன் மற்றொரு முகத்தை பார்த்திருக்கலாம்," என்று தெரிவித்தார்.

    ×