search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RahulGandhi"

    • ஜோதியாத்திரை வழியனுப்பும் விழா ரெட்டியார்பாளையம் தனியார் ஓட்டலில் நடந்தது.
    • பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    புதுச்சேரி:

    மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் நினைவுதினத்தையொட்டி ஆண்டுதோறும் கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு சார்பில் ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை நடைபெறும்.

    இந்த ஆண்டு யாத்திரை கடந்த 15ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடங்கியது. யாத்திரையை கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    யாத்திரை பெங்களூருவில் தொடங்கி, மாணடியா, மைசூரு, கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், கொச்சின், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக புதுவையை அடைந்தது.

    புதுவைக்கு நேற்று இரவு வந்த யாத்திரையை ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி வரவேற்றார். யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் சென்றடைகிறது.

    ஜோதியாத்திரை வழியனுப்பும் விழா ரெட்டியார்பாளையம் தனியார் ஓட்டலில் நடந்தது.


    மாநில ஐ.என்.டி.யூ.சி.தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், சீனியர் தலைவர் தேவதாஸ், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்டோர் ஜோதி யாத்திரையை வணங்கி வழியனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தன் ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பற்றி தெரிவிக்கவில்லை.

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம்? என்பதையும் சொல்லவில்லை. ஆனால் பிரசாரம் தோறும் காங்கிரசை தாக்கி பேசுகிறார். தனக்கு எதிராக உள்ள எதிர்கட்சியினர் மீது பொய்வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுகிறார்.

    பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிக எம்.பி இடங்களை கைப்பற்றி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் ஊழல் மலிந்துபோயுள்ளது. 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு காங்கிரசை ஆட்சியில் அமர்த்த சபதமேற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரியங்கா வயநாடு எம்.பி.யாக இருந்து அவர் சிறப்பாக பணியாற்றுவார்.
    • ராகுல்காந்தி சகோதரி பிரியங்கா காந்தியுடன் ரோடு-ஷோ.

    திருவனந்தபுரம்:

    வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக, ராகுல்காந்தி நேற்று கேரளா வந்தார். அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ரோடு-ஷோ சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    மேலும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி பிரியங்காவுக்கு ஆதரவு திரட்டினார். நேற்றைய நிகழ்வுகளின் போது சகோதரி பிரியங்காவுடன் ராகுல்காந்தி பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அந்த பஸ்சில் பயணித்த ஒருவர் கேட்ட கேள்விக்கு விளையாட்டுதனமாக பதிலளித்தார்.

    அந்த பயணி ராகுல்காந்தியிடம், "வயநாடு தொகுதியில் உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா காந்தி இருப்பாரா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு, "இது கடினமான கேள்வி" என்று பதிலளித்த ராகுல்காந்தி, சிரித்துக்கொண்டே "நான் அப்படி நினைக்கவில்லை" என்று விளையாட்டாக தெரிவித்தார்.

    இந்த வீடியோ ராகுல்காந்தியின் "எக்ஸ்" வலைதளம் வழியாக வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் ராகுல்காந்தி மேலும் பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

    வயநாடு தொகுதியின் எம்.பி.யாக என்னைத்தவிர வேறு யாரை நான் தேர்ந்தெடுப்பேன். அது எனது சகோதரியாகத்தான் இருக்கும். நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். பிரியங்காவுக்கு பல குணங்கள் இருக்கின்றன. வயநாடு எம்.பி.யாக இருந்து அவர் சிறப்பாக பணியாற்றுவார். பிரியங்காவுக்கும் வயநாடு ரொம்ப பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • போராட்டத்தில் சில எம்.பி.க்கள் கைவிலங்கு அணிந்திருந்தனர்.
    • இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எம்.பிக்கள் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் சில எம்.பி.க்கள் கைவிலங்கு அணிந்திருந்தனர். இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.

    இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்து இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கிறார்.


    ×