என் மலர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"
- அரசியல் களத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
- பாட்காஸ்டருடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளார்.
அமெரிக்க பாட்காஸ்டருன் பிரதமர் மோடியின் உரையாடல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஓடும் வீடியோவில் பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை, ஆனால் அவருக்கு அமெரிக்க பாட்காஸ்டருடன் உரையாடுவது பிடித்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் மோடியின் பாட்காஸ்ட் வீடியோ குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, "ஊடகத்துறையை சேர்ந்தவர்களை செய்தியாளர் சந்திப்பில் சந்திக்க பயப்படும் நபர், வெளிநாட்டு பாட்காஸ்டருடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளார்.
"பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களை எதிர்கொள்ள பயம் கொண்டுள்ளவர், வலதுசாரி அமைப்பில் நங்கூரமிட்டுள்ள ஒரு வெளிநாட்டு பாட்காஸ்டரிடம் ஆறுதல் கண்டுள்ளார். மேலும், தனது அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தையும் திட்டமிட்டு அழித்து, சமீபத்திய வரலாற்றில் வேறு யாரும் எதிர்க்காத அளவுக்கு பழிவாங்கும் எண்ணத்துடன் விமர்சகர்களைத் துரத்தி செல்லும் அவர், விமர்சனம் தான் ஜனநாயகத்தின் ஆன்மா என்று சொல்லத் துணிந்துள்ளார்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
- இவர் ஏற்கனவே டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரான இவர் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவரது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.
லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நடந்தது.
இந்நிலையில், சிறந்த கிரிக்கெட் அணி எது இந்தியாவா, பாகிஸ்தானா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி பதில் கூறியதாவது:
விளையாட்டுக்கு உலகம் முழுவதையும் உற்சாகப்படுத்தும் சக்தி இருப்பதாக நினைக்கிறேன்.
விளையாட்டு உணர்வு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது. மனித பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என உண்மையிலேயே நம்புகிறேன். அவை வெறும் விளையாட்டுகள் அல்ல, அவை மக்களை ஆழமான மட்டத்தில் இணைக்கின்றன.
இப்போது யார் சிறந்தவர் அல்லது இல்லாதவர் என்ற கேள்விக்கு வருகிறேன். விளையாட்டின் நுட்பங்களைப் பொறுத்தவரை நான் ஒரு நிபுணர் அல்ல. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே அதை மதிப்பிட முடியும்.
எந்த அணி சிறந்தது, எந்த வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் சில நேரங்களில், முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன.
சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் முடிவு எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியது என தெரிவித்தார்.
- ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது.
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.
பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ஆர்.எஸ்.எஸ். போன்ற புனிதமான அமைப்பின் மூலமாக நான் வாழ்க்கையின் நோக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொண்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
என்னுடைய குழந்தை பருவத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எனக்கு கற்றுக்கொடுத்தது. நாடுதான் அனைத்துக்கும் மேலானது. மக்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்வதைப் போன்றது என்பதை ஆர்.எஸ்.எஸ். எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அத்தகைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் துறவிகளுடன் நேரத்தைச் செலவிட்டதை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். துறவிகளின் வழிகாட்டுதலால் எனது ஆன்மீகத் தேடல் விரிவடைந்தது.
எனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியதில் ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தர், ஆர்.எஸ்.எஸ். இன் சேவை மனப்பான்மை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்று தெரிவித்தார்.
- எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் டீ கடைக்கு செல்வார்.
- டீ கடையில் கற்ற அனுபவங்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்
பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், தனது குழந்தை பருவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "நான் என் தந்தையின் தேநீர் கடையில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அந்தக் கற்றல்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்
எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பி, பல கோயில்களுக்குச் சென்று, பின்னர் தான் டீ கடைக்கு செல்வார். கிராமத்தில் உள்ள மக்கள் எனது அப்பாவின் காலடிச் சத்தத்தை கேட்டாலே அந்த நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர் ஒழுக்கமாக இருந்தார்.
என் குழந்தைப்பருவம் பெரும் வறுமையிலேயே கழிந்தது. என் வெள்ளை ஷூ-வை பாலிஷ் போட சாக்பீஸ் சேகரித்துக் கொண்டிருப்பேன்" என்று தெரிவித்தார்.
- ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.
- பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அதில், உக்ரைன் - ரஷியா போர் குறித்து ப்ரீட்மேன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ரஷியா மற்றும் உக்ரைனுடன் இந்தியா நல்ல நட்புறவை கொண்டுள்ளது. ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.
அதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உங்களுக்காக உலகில் எத்தனையோ மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். போரில் நம்மால் ஒருபோதும் நல்ல முடிவை எட்ட முடியாது' என்று எடுத்துக்கூற முடியும்.
உக்ரைன் - ரஷியா போர் தொடங்கிய நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சவாலானதாக இருந்தது. ஆனால், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.
பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை நிறுத்த முடியும். பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
இந்தப் போரில் இந்தியா யாருக்கும் ஆதரவாக இல்லை. ஆனால், அமைதியின் பக்கமும் சமாதானத்தின் பக்கமும் இந்தியா நிற்கிறது. இந்தப் போரினால் உலக நாடுகளே பாதிப்பு அடைந்துள்ளது.
இந்த போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அமைதியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். நான் நடுநிலையானவன் கிடையாது. நான் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறேன்'' என்று தெரிவித்தார்.
- 2015-ல் இருந்து 4-வது முறையாக இலங்கை செல்ல இருக்கிறார்.
- இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது.
இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடக்கத்தில் இலங்கை செல்ல இருப்பதாக என இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகே இந்தியா வந்திருந்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டது.
நாங்கள் அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறோம். இந்தியாவுக்கான எங்களுடைய முதல் மூலோபாய சுற்றுப் பயணத்தின்போது இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும்போது, இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. தேசிய நலனை பேணும் விதமாக வெளிநாட்டு கொள்கையில் எந்தவொரு நாட்டிற்கும் ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக செயல்படுவோம் என விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் NTPC-யும் கிழக்கு திருகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையம் கட்ட ஒப்புக்கொண்டன. பிரதமர் மோடி பயணத்தின்போது இந்த சூரிய மின் நிலையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து 4-வது முறையாக இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
- உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
- இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.
மாஸ்கோ:
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
போர் தொடங்கியதில் இருந்து இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இதற்கிடையே, உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்த திட்டம் குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:
போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏனென்றால் இது விரோதங்களையும், மனித உயிரிழப்பையும் நிறுத்துவதற்கான ஓர் உன்னதமான பணியாகும்.
போர் நிறுத்தம் தொடர்பான திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம். இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என தெரிவித்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார்.
- 21 நாடுகள் அவருக்கு சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தின.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றியதில் இருந்து அவருக்கு பல நாடுகள் சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன.
இதுவரை 21 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:
சவுதி அரேபியா: ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்
ஆப்கானிஸ்தான்: ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்
பாலஸ்தீனம்: கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன விருது
மாலத்தீவு: ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன்
ஐக்கிய அரபு அமீரகம்: ஆர்டர் ஆஃப் சயீத் விருது
பஹ்ரைன்: கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ்
அமெரிக்கா: லெஜியன் ஆஃப் தி மெரிட்
பிஜி: கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி
பப்புவா நியூ கினியா: கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ
பலாவ்: பலாவ் குடியரசு எபகல் விருது
எகிப்து: ஆர்டர் ஆப் தி நைல்
பிரான்ஸ்: கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்
கிரீஸ்: தி கிரான்ட் கிராஸ் ஆப் ஆர்டர் ஆப் ஹானர்
பூடான்: ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ
ரஷியா: ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது
நைஜீரியா: கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்
டொமினிகா: டொமினிகோ அவார்ட் ஆப் ஹானர்
கயானா: ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ்
பார்படாஸ்: ஹானரி ஆப் பிரீடம்
குவைத்: தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்
மொரிஷியஸ்: ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி கிராண்ட் கமாண்டர்
- பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றார்.
- மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக மொரிஷியசுக்கு சென்றார். மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்
பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உரையாற்றினார். இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் அந்நாட்டு அதிபரையும் சந்தித்து பேசினார்.
இதற்கிடையே, மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பிரதமர் மோடிக்கு தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
அதன்பின், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிலையில், மொரிஷியஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு போர்ட் லூயிஸ் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
- மொரீஷியசில் தலைவர்கள், இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாடினார்.
- மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது.
போர்ட் லூயிஸ்:
மொரீஷியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மொரீஷியசுக்கு நேற்று புறப்பட்டார். தீவு நாடான மொரீஷியசை சென்றடைந்ததும், பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் பேசிய அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், மொரீஷியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நீங்கள் எப்போதெல்லாம் எங்கள் நாட்டுக்கு வருகிறீர்களோ, அப்போது எங்களுடைய நாட்டை நன்றாக வளப்படுத்துகிறீர்கள். மொரீஷியஸ் நாட்டில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நீங்கள் ஆற்றிய பங்கு உண்மையில் பெரிதும் பாராட்டத்தக்கது என பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
இந்த விருது பெற்ற பின்பு பேசிய பிரதமர் மோடி, இது எனக்கான கவுரவம் மட்டும் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கவுரவம். இந்த விருது, இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாசார மற்றும் வரலாற்று பிணைப்புகளுக்கான அடையாளம் ஆகும் என தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி விருது பெறும் நிகழ்வை காண்பதற்காக மக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணம் மேற்கொண்டார்.
தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.
இன்று பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டில் உள்ள கிராண்ட் பேசின் என்று அழைக்கப்படும் கங்கா தலாவ் ஏரியில் மக கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரை பிரதமர் மோடி கலந்தார்.
கங்கா தலாவ் ஏரியை இந்துக்கள் புனிதமான இடம் என்று நம்புகிறார்கள். இந்த ஏரியில் பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தார்.
- இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணம் மேற்கொண்டார். தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.
இன்று பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, மொரீஷியஸ் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துகள். கொண்டாட்டங்களில் பங்கேற்பது உட்பட இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் பிரதமர் மோடி-மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.