என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94357
நீங்கள் தேடியது "slug 94357"
- சீர்காழி அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலை ஓரத்தில் கார் சென்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பல்லாவனம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன்(வயது46).
நேற்று இவர் தனது தந்தை இறந்த கர்ம காரிய பத்திரிக்கை வைப்பதற்காக தனது காரில் திருமுல்லைவாசல் கிராமத்திற்கு சென்றார்.
பத்திரிக்கை வைத்து விட்டு ரவீந்திரன் சீர்காழிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எடமணல் வளைவில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலை ஓரத்தில் சென்றார்.
இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.
இதனை கண்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காரின் உள்ளே இருந்த ரவீந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கார் உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பீஜிங் நகரில் புதிதாக கார் உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆலையில் சியோமி எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு கட்டங்களாக சியோமி உற்பத்தி ஆலை உருவாக்கப்படுகிறது. இதுதவிர தலைமையகம், விற்பனை, ஆய்வு பணிகளுக்கான அலுவலகங்களை சியோமி கட்டமைக்க இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு இந்த ஆலை முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
புதிய எலெக்ட்ரிக் கார் பிரிவில் சியோமி நிறுவனம் ஆயிரம் கோடி டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய வியாபரத்தை சியோமி பதிவு செய்தது.
சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய எஸ் கிராஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் கிராஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மேம்பட்ட குளோபல் சி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட அதிகளவு எஸ்.யு.வி. போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.
இந்த காரின் முன்புறம் கிளாஸ்-பிளாக் கிரில் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட்கள் உள்ளன. இவை காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்துகின்றன. பக்கவாட்டில் இந்த கார் முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கிறது. பின்புறம் ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய சுசுகி எஸ் கிராஸ் மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 125.2 பி.ஹெச்.பி. திறன், 235 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா, 9 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, முன்புறம் ஹீட்டெட் சீட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன.
இத்துடன் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், கிராஸ்-டிராபிக் அலெர்ட், எமர்ஜென்சி ஆட்டோனோமஸ் பிரேக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 30 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் மாடலை வாங்க இதுவரை சுமார் 72 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில், மேக்னைட் எஸ்.யு.வி. மாடலின் 30 ஆயிரத்து யூனிட்டை நிசான் நிறுவன மூத்த அதிகாரி குயிலாம் கார்டியர் வாடிக்கையாளரிடம் வழங்கினார். நிசான் மேக்னைட் மாடல் சி.எம்.எப். ஏ பிளஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பிரிவில் மிகவும் எடை குறைந்த கார் என்ற போதிலும் நிசான் மேக்னைட் ஏ.எஸ்.இ.ஏ.என். என்.சி.ஏ.பி. பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியது. நிசான் மேக்னைட் மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் வினியோக திட்டத்தில் மாற்றம் செய்து இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை அக்டோபர் 11 ஆம் தேதி அறிவித்தது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 21 ஆம் தேதி துவங்கியது. இந்த காரில் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சர்வதேச சந்தையில் நிலவும் சிப் மற்றும் செமிகண்டக்டர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக எம்ஜி ஆஸ்டர் வினியோகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என எம்ஜி மோட்டார் இந்தியா மூத்த அதிகாரி கவுரவ் குப்தா தெரிவித்தார்.
இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் ஸ்டைல் மற்றும் சூப்பர் வேரியண்ட்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. புதிய ஆஸ்டர் மாடல் வினியோகம் பற்றிய அப்டேட்களை மை எம்ஜி ஆப் அல்லது அருகாமையில் உள்ள விற்பனை மையங்களில் அறிந்து கொள்ளலாம்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் முதற்கட்டமாக 5 ஆயிரம் ஆஸ்டர் யூனிட்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வினியோகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. எனினும், இவை அடுத்த ஆண்டு தான் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல்- கம்ஃபர்ட்லைன், ஹைலைன், டாப்லைன், ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இவற்றில் கம்ஃபர்ட்லைன் வேரியண்ட் விலை ரூ. 5200 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 4300 உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்திய சந்தையில் 18 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்ததாக வோக்ஸ்வேகன் அறிவித்து இருந்தது.
இந்தியாவில் புதிய வோக்ஸ்வேகன் காரை பெற குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.
டைகுன் மாடல் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 147 பி.ஹெச்.பி. திறன், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மெகர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய பென்ஸ் கார் விலை ரூ. 79.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
புதிய 2021 மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 416 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய மெர்சிடிஸ் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், அகலமான ஏர் இன்டேக், 19 இன்ச் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.
வோக்ஸ்வேகன் நிறுவனம் 2021 டிகுவான் பேஸ்லிப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் 2021 டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் டிசம்பர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த பேஸ்லிப்ட் மாடல் வோக்ஸ்வேகன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகிறது.
முன்னதாக மேம்பட்ட டிகுவான் மாடல் 2020 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் புதிய பேஸ்லிப்ட் மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பேஸ்லிப்ட் டிகுவான் மாடல் மட்டுமின்றி வோக்ஸ்வேகன் நிறுவனம் மிட்-சைஸ் பிரீமியம் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இருக்கிறது. புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
2021 வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவந்த எக்ஸ்.எம். வேரியண்ட் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக புதிதாக எக்ஸ்.இ. வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 6.34 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 7.54 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் டாடா அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் எக்ஸ்.இ. காரின் மேல் அல்ட்ரோஸ் எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய எக்ஸ்.இ. பிளஸ் மாடல் விலை எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் குறைவு ஆகும்.
டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் 4 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் க்விட் மாடல் ரெனால்ட் நிறுவன விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அங்கமாக ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் 2021 க்விட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரெனால்ட் க்விட் விலை ரூ. 4.11 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5.56 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட் க்விட் மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 53 பி.ஹெச்.பி. திறன், 72 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 67 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 91 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ, ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் டேட்சன் ரெடி-கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷனை அறிமுகம் செய்தது.
பி.எம்.டபிள்யூ. குழுமம் இந்திய சந்தையில் 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 220ஐ பிளாக் ஷேடோ எடிஷன் விலை ரூ. 43.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
இந்த கார் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த காரின் விலை எம் ஸ்போர்ட் லைன் வேரியண்டை விட ரூ. 1.6 லட்சம் அதிகம் ஆகும். இதன் ஆல்பைன் வைட் மற்றும் பிளாக் சபையர் நிற வேரியண்ட்கள் மொத்தத்தில் 24 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
பி.எம்.டபிள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 189 பி.ஹெச்.பி. திறன், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய முன்பதிவில் புது மைல்கல் எட்டியுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் குஷக் மாடலை அறிமுகம் செய்து களமிறங்கியது. இந்தியாவில் அறிமுகமாகி நான்கு மாதங்களில் குஷக் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் 15 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமான முதல் மாடல் குஷக் ஆகும். ஸ்கோடா குஷக் கேண்டி வைட், பிரிலியண்ட் சில்வர், ஹனி ஆரஞ்சு, கார்பன் ஸ்டீல் மற்றும் டொர்னாடோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி 1 லிட்டர் டி.எஸ்.ஐ. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதன் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X