என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95935"
- 5 கிேலா கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல் சம்பவத்தில் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டி கள் கடத்தி வரும் சம்பவம் அண்மை காலமாக அதிகரித் துள்ளன. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு படகுகளில் கடத்தி வரப்பட்ட 33 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கை யில் இருந்து கடல் வழியாக தங்கக்கட்டிகள் படகு மூலம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப் படையில் மண்டபம் அருகே நல்ல தண்ணீர் தீவு கடல் பகுதியில் அதிகாரிகள், கடலோர காவல் படையினர் தீவிர ரோந்த மேற்கொண்ட னர். அப்ேபாது அந்த வழியாக பதிவு எண் இல்லாத படகு வந்தது. அதிகாரிகளை பார்த்ததும் படகில் இருந்தவர்கள் வேறு பகுதிக்கு திருப்பி வேகமாக சென்றார்கள்.
உடனே சுதாரித்து கொண்ட கடலோர காவல் படையினர் அவர்களை விரட்டினர். நொச்சியூரணி புதுமடம் கடற்கரையில் படகை நிறுத்தி விட்டு அதில் இருந்த 3 பேரும் தப்பினர். அங்கு வந்த அதிகாரிகள் அந்த படகை சோதனை செய்த போது அதில் 5 கிலோ தங்கக்கட்டி கள் இருந்தது. அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.
படகில் பதிவு எண் இல்லாததால் தப்பியோடிய வர்கள் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்ைல. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடிக்க மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகி றார்கள். கடத்தல் காரர்கள் சிக்கிய பின்புதான் முழு விவரம் தெரியவரும்.
- தங்கம் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
- தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து இருக்கிறது.
சென்னை:
சமீப காலமாக தங்கத்தின் விலையில் நிலையில்லா தன்மை இருந்து வருகிறது. தினமும் அதன் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
தங்கம் இன்று கிராம் ரூ. 30-ம், பவுன் ரூ. 240-ம் உயர்ந்து இருக்கிறது. கிராம் ரூ. 5,570-ல் இருந்து ரூ. 5,600 ஆகவும், பவுன் ரூ. 44,560-ல் இருந்து ரூ.44,800 ஆகவும் அதிகரித்து விற்பனை ஆகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து இருக்கிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூ. 78 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.78 ஆயிரமாகவும் விற்பனை ஆகிறது.
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது.
- வெள்ளி இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.77.60-க்கு விற்கப்படுகிறது.
சென்னை :
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45,160-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,645-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,620-க்கு விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் இன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.77.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 77,600-க்கு விற்பனையாகிறது.
- சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.
- கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மோண்டா மார்க்கெட்டில் சித்தி விநாயக் என்ற பிரபல நகைக்கடை உள்ளது.
இந்த கடைக்கு கடந்த 27-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் டிப்டாப் உடைய அணிந்து கார்களில் வந்து இறங்கினர்.
அவர்கள் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி போலியான அடையாள அட்டைகளை காண்பித்தனர்.
இதனை நம்பி கடை ஊழியர் மற்றும் உரிமையாளர்கள் அவர்களை சோதனை நடத்த அனுமதித்தனர். அவர்கள் கடையில் இருந்த ஆவணங்கள் மற்றும் நகைகளை சரிபார்த்தனர்.
அப்போது சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.
அவர்கள் சென்ற பிறகுதான் வந்தவர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்த திருட்டு கும்பல் என தெரியவந்தது.
இது குறித்து கடையின் உரிமையாளர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார்.
ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தலைமையில் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கும்பல் வந்த கார் பதிவு எண் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்.
விசாரணையில் அவர்கள் ரகுமான் கபூர் அதர், ஜாகிர் கனி அதர், பிரவீன் யாதவ் மற்றும் ஆகாஷ் அருண் ஹோவில் என தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 தங்க பிஸ்கெட்டுகள் மீட்கப்பட்டன.
மேலும் 6 பேர் தலைமறைவாகி விட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் கோவா பகுதிகளுக்கு அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.
அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
- யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார்.
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போன்று இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று நவீன ஸ்கேனிங் கருவி மீலம் சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பயணியை மருத்துவ பரிசோதனைக்காக விமான நிலைய பகுதியில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விரட்டி சென்று பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
பனைக்குளம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இலங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இலங்கையில் இருந்து கடத்தல் காரர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடத்தல்காரர்கள் வரும் பகுதிகளுக்கு ரோந்து படகில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஹோவர் கிராப்ட் கப்பலில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றனர்.
அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் ஒரு நாட்டுப்படகு வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளை பார்த்ததும் நாட்டுப்படகில் இருந்தவர்கள் ஏதோ ஒரு பொருளை கடலில் வீசியுள்ளனர்.
இதையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர். அந்த படகில் வேதாளை பகுதியை சேர்ந்த முகமது நாசர், அப்துல் கனி, பாம்பன் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் இருந்தனர்.
அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கடலில் வீசியது தங்கக்கட்டிகளா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்ற போது இலங்கை பகுதியில் இருந்து மேலும் ஒரு நாட்டுபடகு வருவது தெரியவந்தது. அந்த படகை போலீசார் மடக்கி, அதில் வந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக நேற்று 3 பேர் வந்த படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று கடத்தல்காரர்கள் படகில் இருந்து கடலில் பார்சலை வீசிய பகுதி மணாலி தீவுப்பகுதி ஆகும். அங்கு கடலில் தங்கம் வீசப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் மீனவர்களை வைத்து தங்கத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45 ஆயிரத்து 160க்கு விற்றது.
- ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 645ஆக உள்ளது.
சென்னை:
தங்கம் விலையில் ஏற்ற தாழ்வு நிலவி வரும் நிலையில் இன்று விலை குறைந்தது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45 ஆயிரத்து 160க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 645ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.78 ஆயிரமாக இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கு விற்கிறது.
- தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
- வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பன் எதிரியாக மாறுவான். ஊரே இவர்களை விமர்சனம் செய்யும்.
- பூர்வபுண்ணியமும் கெட்டுவிடுகிறது.
ரத்தினம்: புஷ்பராகம்
தாது: அரிதாரம்
உலோகம்: தங்கம்
மிருகம்: மான்
பறவை: கவுதாரி, நீர்க்கோழி
சமித்து: அரசமரம்
மலர்: சரக்கொன்றைப்பூ
அன்னம்: தயிர் சாதம்
திசை: வடக்குசெடி: வெள்ளைக்கரும்பு, சிவப்பு முள்ளங்கி, மணத்தக்காளி
கொடி: சீந்தில்கொடி
காய்: தேங்காய்
பழம்: இனிப்புள்ள மாதுளை, இலந்தை, பேரிட்சை, திராட்சை
மருந்து: தாழைவேர், லவங்கம், சிறுநாகப்பூ
சமையல் பொருள்: புளி,வெந்தயம்
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி,
ராசி: தனுசு, மீனம்
உச்சமடையும் ராசி: கடகம்
நீசம் பெறும் ராசி: மகரம்
ஆட்சி பெறும் ராசி: மீனம், தனுசு
நிறம்: மஞ்சள்
வாகனம்: யானை
அதிதேவதை: தட்சிணாமூர்த்தி
கோயில்: ஆலங்குடி
தெய்வம்: திருச்செந்தூர் முருகன்
பார்வை: 5,7,9 ஆம் பார்வை
ஜாதகத்தில்:
புத்திரகாரகன், தனத்துக்கு அதிபதி, பணிவு, அடக்கம் மரியாதை. ஆன்மீகத்தில் ஈடுபாடு, உடல் அங்கத்தில் தோல் இவற்றுக்கு அதிபதி... குரு ஜாதகத்தில் கெட்டுப்போனா மேற்க்கண்டவையும் கெட்டுப்போகும்.
சகட யோகம்:
குருவுக்கு 6,8,12ல் சந்திரன் அமையப் பெற்றால் சகட யோகம் ஏற்படுகிறது.பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் வண்டிச்சக்கரம் போன்று வாழ்வு அமைப்பு போன்ற சோதனைகள் உண்டாகிறது.
இல்வாழ்க்கை:
குருவுக்கு 5ல் சனி அமையப்பெற்றாலோ 5 ஆம் வீட்டில் மேலும் அசுபர்கள் காணப்பட்டாலோ திருப்தியற்ற இல்வாழ்க்கை ஏற்படுகிறது. நண்பன் எதிரியாக மாறுவான். ஊரே இவர்களை விமர்சனம் செய்யும். பூர்வபுண்ணியமும் கெட்டுவிடுகிறது.
- தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது.
- தங்கத்தை போல வெள்ளியும் குறைந்து இருக்கிறது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.5,670-க்கும் பவுன் ரூ.45,360-க்கும் விற்பனை ஆனது. இன்று இது குறைந்து கிராம் ரூ. 5,650-க்கும்,பவுன் ரூ. 45,200-க்கும் விற்பனை ஆகிறது. இன்று கிராம் ரூ 20-ம் பவுன் ரூ.160-ம் குறைந்து உள்ளது.
தங்கத்தை போல வெள்ளியும் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.78.20-ல் இருந்து 78.10-ஆகவும், கிலோ ரூ. 78,200-ல் இருந்து ரூ.78,100-ஆகவும் குறைந்து விற்பனை ஆகிறது.
- நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 715-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5 ஆயிரத்து 670-க்கு விற்கப்படுகிறது.
- வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.78.80-க்கு விற்கப்பட்டது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.45 ஆயிரத்து 720-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45 ஆயிரத்து 360-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 715-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5 ஆயிரத்து 670-க்கு விற்கப்படுகிறது.
இதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.78.80-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.78.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.78 ஆயிரத்து 200-க்கு விற்பனையாகிறது.
- சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 742-க்கு விற்கப்படுகிறது.
- 1 கிலோ பார் வெள்ளி ரூ. 82 ஆயிரத்து 700-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உச்சத்தில் உள்ளது. கடந்த 5-ந்தேதி வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.46 ஆயிரத்து 200 ஆக உயர்ந்தது. அதன் பிறகு விலை சற்று குறைவதும் உயர்வதுமாக உள்ளது.
நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45 ஆயிரத்து 736-க்கு விற்கப்பட்டது. இன்று பவுன் ரூ.45 ஆயிரத்து 936-க்கு விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 717-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 742-க்கு விற்கப்படுகிறது.
இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.82.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.82.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ. 82 ஆயிரத்து 700-க்கு விற்பனையாகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்