என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95995"
- குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.
- டிக்கெட்டுகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய கட்டண சேவைகளில் மெய் நிகர் அடிப்படையில் கலந்து கொள்ள தேவையான டிக்கெட்டுகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
மெய்நிகர் அடிப்படையிலான கட்டண சேவைகளில் பங்குபெறும் பக்தர்களுக்கு மற்றொரு நாளில் ஏழுமலையானை நேரடியாக தரிசிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
இதேபோல் இம்மாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம் ஆகிய கட்டண சேவைகளில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று காலை 10 மணி முதல் 10 ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான வெப் சைட் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த பக்தர்கரின் பெயர்கள் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் இம்மாதம் 22 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்க இருக்கும் கட்டண சேவைகளில் நேரடியாக பங்கு பெற விரும்பும் பக்தர்கள் இன்று பகல் 12 மணி முதல் தேவையான டிக்கெட்டுகளை www.tirupatibalaji.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. கடந்த 18-ந்தேதி முதல் தரிசன டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பக்தர்களுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.
வருகிற 30-ந்தேதிக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு வர விரும்பும் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை சாப்ட்வேர் அப்ளிகேஷனில் 6 மாதங்களுக்குள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். தற்போது இலவச தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், ஆர்ஜித சேவைகள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் ஆகியவற்றில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலையில் ஓரிரு இடங்களில் தான் கனமழை பெய்தது. இதனால், பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை. அலிபிரியில் இருந்து திருமலை வரை நடைபாதையில் 13 இடங்களில் சேதம் ஏற்பட்டது. தடுப்புச்சுவர்களும் இடிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்களும் விழுந்தது. அவை, அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் அச்சமின்றி நடந்து வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலை-திருப்பதி, திருப்பதி-திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு மலைப்பாதைகளிலும் கடந்த 4 நாட்களாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் வந்து ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.
அலிபிரி நடைபாதை தற்போது நன்றாக இருக்கிறது. பக்தர்கள் நடந்து திருமலைக்கு செல்லலாம். ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 4 இடத்தில் சேதம் ஏற்பட்டு இருந்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பெரிய பாறைகள் மோதி படிகட்டுகள் சேதம் அடைந்திருந்தது.
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை சரி செய்வதற்காக வாகனங்களில் தேவையானப் பொருட்களை கொண்டு செல்ல சரியான பாதை வசதி இல்லை. ஏற்கனவே இருக்கிற பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. நடைபாதையை சரி செய்ய தேவையான கூலியாட்களும் கிடைக்கவில்லை.
இதனால் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை சீரமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து செல்ல தற்காலிக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பணி நிறைவு பெறும் வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
25-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ள நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான பொறியியல், வனவியல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என அனைத்துத்துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் உள்ளனர்.
மீட்புப்பணிகளில் பயன்படுத்த கூடிய பொக்லைன் எந்திரம், லாரிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மலைப்பாதைகளில் திடீரென மரங்கள், பாறைகள் சரிந்து விழுந்தால் விரைந்து சென்று அகற்ற தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள நாராயணகிரி தங்கும் விடுதியில் 2 அறைகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளன. திருமலையில் மீதமுள்ள 7 ஆயிரம் அறைகளில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. கனமழையின்போது கம்ப்யூட்டர்கள் தொடர்பான சர்வர்கள் செயலிழக்காமல் இருக்க, போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஐ.டி. துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்னதானம், கல்யாணக் கட்டா, கோவில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. பக்தர்கள் தயக்கமின்றி, அச்சமின்றி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்
இவ்வாறு அவர் பேசினார்.
அதில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, என்ஜினீயர் ஜெகதீஸ்வரரெட்டி, பேஷ்கர் ஸ்ரீஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மூலவர் கருவறை மற்றும் இதர சன்னதிகளில் தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள பல்வேறு இடங்களில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அகல் விளக்கு நெய் தீபம் ஏற்றப்படுகிறது.
இதனால் இன்று கோவிலில் நடக்கும் சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது, எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோவிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் இக்கோவிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன.
திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலப்போக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
நேற்று ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தான வஸ்திர மரியாதை காலை 7 மணிக்கு புறப்பட்டு வீதிஉலா வந்தது. மங்கல பொருட்களை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இருந்து வஸ்திரமரியாதையை கருடாழ்வார் மண்டபத்தில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க 14 வகையான மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருமலை, திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் ஸ்ரீவேதாந்த ஜெகநாத்ச் ஸ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான புஷ்ப யாகத்திற்காக இன்று அங்குரார்ப்பணம் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் செய்தனர். ஏழுமலையான் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படும்.
நாளை (வியாழக்கிழமை)மதியம் 1 மணி முதல் 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி, துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களால் புஷ்பயாகம் நடத்தப்படும்.
வேதமந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களால் சாமிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
திருப்பதியில் நேற்று 32816 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,459 முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
கொரோனா தொற்று காரணமாக திருப்பதியில் குறைந்த அளவு பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனம் செய்து வந்தனர்.
தொற்று படிப்படியாக குறைந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக் கப்பட்டது. இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 3-ந்தேதி 30,379 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,327 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.16 கோடி வசூலானது.
4-ந்தேதி ரூ.2.63 கோடியும், 5-ந்தேதி ரூ.2.15 கோடியும், 6-ந்தேதி ரூ.2.17 கோடியும், 7-ந்தேதி ரூ.3.19 கோடியும் உண்டியலில் வருவாயாக கிடைத்தது.
திருப்பதியில் நேற்று 34,695 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 16,723 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியலில் காணிக்கையாக கிடைத்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 2-வது முறையாக உண்டியல் வருவாய் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது.
நாக சதுர்த்தியையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் வீதிஉலா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது. பின்னர் உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீபாவளி ஆஸ்தானத்தில் பெரியஜீயர், சின்னஜீயர், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவஹர்ரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில்களில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்