search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96106"

    செமஸ்டர், இறுதி தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தயாரிப்புக்கான பாடப்பொருட்களை வழங்க வேண்டும்.
    சென்னை :

    கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் நோய்ப் பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ஆப்லைன் (நேரடி முறையில்) மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், நேரடி தேர்வு தான் கண்டிப்பாக நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, அதற்கு மாணவர்கள் தயாராவதற்கு ஏதுவாக கால அவகாசம் வழங்கியும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அது தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களுடன் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சில அறிவுறுத்தல்களை கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    அதன்படி, உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மர்றும் சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இனிமேல் வாரத்தில் 6 நாட்களும் (சனிக்கிழமை உள்பட) அனைத்து வகுப்புகளும் ஆப்லைன் (நேரடி) முறையில் நடத்தப்பட வேண்டும்.

    அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை மீண்டும் திட்டமிட வேண்டும்.

    உயர்கல்வித்துறை

    செமஸ்டர், இறுதி தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தயாரிப்புக்கான பாடப்பொருட்களை வழங்க வேண்டும். பாடத்திட்டம் முழுமையாக உள்ள நிறுவனங்களில் குறிப்பாக ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலம் பாடங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

    தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்படுவதை உறுதிசெய்து, திருத்தப்பட்ட அட்டவணையை இந்த அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

    அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்கள் அதிகார வரம்பில் செயல்படும் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனை பின்பற்றும்போது அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் சேர்த்து கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    டி.பி.சத்திரத்தில் கல்லூரி மாணவரை கடத்திய காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை டி.பி.சத்திரம் ராமநாதன் தெருவை சேர்ந்தவர் நவீத் முகமது (19). கல்லூரி மாணவரான இவரை கடந்த 9-ந் தேதி 3 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது. பின்னர் அவரை சரமாரியாக தாக்கி ஜாபர்கான்பேட்டை மேம்பாலம் அருகே முட்புதரில் வீசினர்.

    நவீத் முகமதுவிடம் இருந்து ஐபோன், விலை உயர்ந்த வாட்சை பறித்துவிட்டு தப்பியது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து டி.பி. சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் நவீத் முகமதுவும், அமெரிக்காவில் வசித்து வந்த இளம் பெண்ணும் காதலித்துள்ளனர்.

    சென்னை வந்த காதலி ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது அங்கு சென்ற நவீத் முகமதுவுக்கும், காதலிக்கும் தகராறு ஏற்பட்டது. செல்போனில் இருக்கும் நெருக்கமான படத்தை அழிக்க நவீத் முகமது மறுத்ததால் அப்பெண் சண்டை போட்டார். இதில் காதலியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதுபற்றி அப்பெண் தனது நண்பர்கள்கோகுல், அபிஷேக் ஆகியோரிடம் தெரிவித்தார். இதையடுதுது அவர்கள் ஏற்பாட்டின் பேரில் வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர், அவரது தம்பியான 17 வயது சிறுவன் மற்றும் நண்பர் சரவணன் ஆகியோர் நவீத் முகமதுவை கடத்தி சென்று தாக்கி செல்போன்னை பறித்தது தெரிய வந்தது.

    இவ்வழக்கு தொடர்பாக பாஸ்கர், அவரது நண்பர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நவீத் முகமதுவின் காதலி, அவரது நண்பர்கள் கோகுல், அபிஷேக் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தேனி அருகே கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயமானார்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி சத்யாநகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது மனைவியுடன் கேரள மாநிலம் உடுமஞ்சோலையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். செல்வத்தின் மகள் ரம்யா ஓடைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கம்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் ரம்யா திரும்பாததால் அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    சடையம்பாளையம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ளது சடையம்பாளையம். இந்த பகுதியில் உள்ள தொட்டபாவியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் சுவேதா (வயது 18). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்த சுவேதா குளியல் அறைக்கு சென்றார். அங்கு திடீரென தூக்குப் போட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தங்கை சத்தம்போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுவேதாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுவேதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சுவேதா செல்போனில் அதிக நேரம் பேசி விளையாடிததால் பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவருவதாக போலீசார் கூறினர்.

    பெருந்துறை அருகே ஆஸ்டலில் தங்கி படித்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவகல்லூரியின் நர்சிங் படித்து வரும் மாணவி ஹாஸ்டலில் இருந்து மாயமான சம்பவம் தொடர்பாக முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், காசிபாளையம் பகுதியை சேர்ந்த  சிவராஜ் என்பவரது மகள் உமாதேவி (வயது 20). இவர் பெருந்துறை, சேனடோரியத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்றாமாண்டு நர்சிங் படித்து வருகிறார்.

    கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலிலேயே தங்கி படித்து வரும் இவர் நேற்று முன்தினம் காலை திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டிரெயினிங் சென்று விட்டு மதியம் ஹாஸ்டலுக்கு திரும்பி வந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து வார்டன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் வெளியே சென்றாராம். அவர் மீண்டும் ஹாஸ்ட லுக்கு வராததால் கல்லூரி முதல்வர் மனோண்மணி பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுகவனம் காணாமல் போன மாணவியை தேடிவருகிறார்.

    திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற கல்லூரி மாணவர் ராம்குமாரை மண்டல வருவாய்த்துறை அதிகாரி எச்சரிக்கை செய்து விடுதலை செய்தார். #semmaram #arrest

    திருப்பதி:

    திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசாருக்கு வேலூரில் இருந்து தமிழக அரசு பஸ்சில் திருப்பதியை நோக்கி செம்மரம் வெட்டும் கும்பல் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் திருப்பதியை அடுத்த சந்திரகிரி மண்டலம் ஐதேப்பள்ளி அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பஸ் ஒன்றை நிறுத்தி, அதில் ஏறி போலீசார் சோதனைச் செய்தனர்.

    அந்தப் பஸ்சில் 4 பேர் சந்தேகப்படும் படியாக வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகளை போலீசார் சோதனைச் செய்தனர். அதில் அரிசி, பீடி கட்டுகள், புகையிலைப் பொருட்கள், மரம் வெட்டும் கோடரிகள், அரிவாள் ஆகியவைகள் இருந்தன. அந்த 4 பேரும், செம்மரம் வெட்டுவதற்கு தினக்கூலி ரூ.600-க்கு ஆசைப்பட்டு வந்ததாக ஒப்பு கொண்டனர்.


    செம்மரம் வெட்ட வந்து கைதானவர்களை படத்தில் காணலாம். 

    அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா புடிபெலா கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 50), முனுசாமி (49), துரைராஜ் (39), ராம்குமார் (29) எனத் தெரிய வந்தது. அதில் ராம்குமார், பி.எஸ்சி. படித்து வரும் மாணவர் எனத் தெரிந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கல்லூரி மாணவர் ராம்குமாரை, செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் திருப்பதி மண்டல வருவாய்த்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அவர், எச்சரிக்கை விடுத்து, மாணவர் ராம்குமாரை விடுதலை செய்தார்.  #semmaram #arrest

    கோவையில் விரும்பிய கல்லூரியில் ‘சீட்’ கிடைக்காததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

    இவரது மகள் தாரணி (வயது 20) பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பே‌ஷன் டெக்னாலஜி படித்துள்ளார்.

    இவர் கொச்சியில் உள்ள ‘நே‌ஷனல் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி’ மேல்படிப்பு படிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு அந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த தாரணி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாகூர் கலைக்கல் லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 21 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைகல்லூரியில் நேற்று 2 பிரிவு மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் பேராசிரியர் சம்பத்குமார் மற்றும் ஒரு மாணவர் காயம் அடைந்தனர்.

    தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வந்ததால் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கல்லூரி முதல்வர் இளங்கோ சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பேராசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    பின்னர் இந்த மோதல் குறித்து கல்லூரி முதல்வர் இளங்கோ லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துதல், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் மிரட்டியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 21 மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் 2 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் சிவஞானம் சாலை விபத்துக்களை குறைக்கும் வண்ணம் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில், 30-வது சாலை பாதுகாப்பு வார விழா தொடங்கியது. விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் சிவஞானம் சாலை விபத்துக்களை குறைக்கும் வண்ணம் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் குறைக்கும் வகையில் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்தும், சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஜீப்ரா கிராஸிங் பயன்பாடு மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் சாலைப் பாதுகாப்பு வார விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக விருதுநகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பாதசாரிகள் சாலையை கடந்து செல்வதற்காக புதிதாக ஜீப்ரா கிராஸிங் அமைக்கப்பட்டு, அதன் பயன்பாடு குறித்தும், அதனை பயன்படுத்தும் விதம் பற்றியும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவஞானம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் மாவட்டத்திலுள்ள முக்கிய இடங்களில் உள்ள சாலை சந்திப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரி அமைந்துள்ள இடங்களில் சாலைகளை பாதசாரிகள் எளிதாக கடந்து செல்வதற்காக ஜீப்ரா கிராஸிங் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் (விருதுநகர்), மோட்டார் வாகன ஆய்வளர் இளங்கோ, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் மரிய அருள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கல்விச் சேவைக்கும் எண்ணற்ற அப்ளிகேசன்கள் உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் சில அப்ளிகேசன்களை இங்கே அறிவோம்...
    கணினிகளை மிஞ்சியதாக செல்போன்கள் அவதரித்துவிட்டபிறகு, மென்பொருட்களைவிட அப்ளிகேசன்களின் ஆட்சி அதிகமாகிவிட்டது. உணவு ஆர்டர் கொடுப்பதில் இருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெறுவதுவரை அப்ளிகேசன்களின் பயன்பாடு அதிகம். கல்விச் சேவைக்கும் எண்ணற்ற அப்ளிகேசன்கள் உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் சில அப்ளிகேசன்களை இங்கே அறிவோம்...

    புராஜெக்ட்கள் தயாரிக்க...


    பள்ளிப் பருவத்தில் இருந்தே கட்டுரைகள் படைப்பது பலருக்கு கஷ்டமான விஷயம். கல்லூரியில் கட்டுரைகள் மற்றும் அசைன்மென்டுகள் விரிவாகவும் தெளிவாகவும் தயாரிக்கப்பட வேண்டும். பல நேரங்களில் ஆராய்ச்சி கட்டுரைகள்போல பாடப்புத்தகத்தில் இல்லாத நிறைய தகவல்களை சேகரித்தும், புதிய நோக்கில் ஆராய்ந்தும் கட்டுரைகள் படைக்க வேண்டியதிருக்கும். இதற்கு மிகுந்த புத்திசாலித்தனமும், சாதுர்யமும் அவசியமாகும்.

    இப்படி கல்லூரியில் தரப்படும் புராஜெக்ட்களால் தடுமாறும் மாணவர் கூட்டம் நிறைய. அவர்கள் வெளியே தனிநபரிடம் உதவி பெற்று தங்கள் பிராஜெக்ட்டை செய்து தரக் கேட்பதும் அல்லது பிறர் செய்ததை காப்பி அடித்து எழுதுவதும் உண்டு. இதற்காக உதவியாளரை தேடித்திரி வதும் உண்டு.

    இப்படி சிரமப்படாமல் கல்லூரி கட்டுரைகளுக்கும், புராஜெக்ட் திட்டங்களுக்கும் கைகொடுக்க இணைய தளங்களில் பல்வேறு அப்ளிகேசன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் நிஞ்சா எஸ்ஸேஸ்(NinjaEssays). 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்களின் நலன்கருதி எழுதிய ஏராளமான கட்டுரைகள் இங்கே கிடைக்கின்றன, பல கட்டுரைகளை இலவசமாக படிக்க முடியும், சில கட்டுரைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. தேவையெனில் விருப்பப்படும் பேராசிரியரை உதவியாளராக நியமித்துக் கொண்டு புராஜெக்ட் செய்யலாம்.

    மேற்கூறியது போன்ற அப்ளிகேசன்தான் help.plagtracker. ஆனால் உங்கள் கட்டுரைகள் மற்றும் புராஜெக்ட்டுகளுக்கு ரெடிமேடு தயாரிப்புகளை வழங்குவதற்குப்பதிலாக உங்கள் தயாரிப்புகளை சரிபார்க்கவும், தேவையான, சரியான மாற்றங்களை செய்துகொடுக்கும் எடிட்டிங் வேலைகளுக்கு பேராசிரியர்களின் உதவியை பெற்றுத் தருகிறது இந்த அப்ளிகேசன். உங்களுடைய படைப்பை கொடுத்து எடிட் செய்து தர கேட்கலாம் அல்லது தனிநபர் உதவியாளராக ஒரு பேராசிரியரை நியமித்துக் கொள்ளவும் வழி உண்டு.

    குழுவாக படிக்க...


    சிலருக்கு சேர்ந்து படித்தால்தான் நன்கு படித்த மாதிரி இருக்கும். எளிதில் புரியும். அப்படி குழு படிப்பிற்கு கைகொடுக்கும் அப்ளிகேசன்தான் ஓபன்ஸ்டடி (open study) அப்ளிகேசன். வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல் என எல்லா பாடங்களுக்கும் இங்கே குழுக்கள் உண்டு. அவர்களுடன் பாடம் சம்பந்தமான விஷயங்களை கலந்துரையாடலாம், சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்.



    புத்தகங்களைப் பார்த்துப் படித்து புரிந்துகொள்வதைவிட, மற்றொருவர் வாசித்துக் காட்ட அதில் இருந்து தேவையான விஷயங்களைப் புரிந்து கொள்வது பலருக்கு எளிதாக இருக்கும். இதற்காக கல்லூரி புத்தகங்கள் பெரும்பாலானவற்றை ஆடியோவாக குரல் வடிவில் தருகிறது audible அப்ளிகேசன். வகுப்பறையில் மீண்டும் மீண்டும் ஒன்றை நடத்தச் சொல்லிக் கேட்பது இயலாத காரியம். ஆனால் ஆடியோ புத்தகத்தில் உங்களுக்கு புரியும் வரை ரீவைண்ட் செய்து கேட்டு பாடத்தை மனதில் ஏற்றிக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த அப்ளிகேசன் ஒரு மாதத்திற்கு இலவசமாகவும், பின்பு சலுகை கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.

    ஆராய்ச்சி தலைப்புகளுக்கு...

    புதிதாக என்ன தலைப்பில் ஆராய்ச்சி செய்யலாம், அதற்கு என்ன விவரங்கள் தேவைப்படும் என்பது மாணவர்களுக்கு தலைவலியை உருவாக்கும் பிரச்சினையாக இருக்கும். அதுபோன்ற நேரத்தில் உதவக்கூடிய இணையதளங்களும் இன்று நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் InstaGrok. இதில் நீங்கள் விரும்பிய தலைப்பை உள்ளீடு செய்து அது பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளையும், சில ஆராய்ச்சி தலைப்புகளையும் அறிய முடியும். ஆய்வுக்கு வழிகாட்டும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடவும் முடியும். ஆய்வுக்கு உதவும் பல்வேறு தகவல் தொகுப்புகளும் இதில் காணப்படும்.

    கட்டுப்பாடுகளுக்கு...

    வகுப்பறைக்குள், செல்போன்கள் அனுமதிக்கப்படுவ தில்லை. சிலர் மறதியிலோ, ரகசியமாகவோ வகுப்பறைக்கு செல்போன்களை கொண்டு சென்றுவிட்டு, அழைப்பு வந்ததும் செல்போன் சிணுங்கி மாட்டிக் கொள்வதும், பேராசிரியர்களின் கண்டிப்புக்கும், தண்டனைக்கும் ஆளாவது உண்டு. இது போன்ற சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது ஸ்டடியஸ் (Studious) அப்ளிகேசன். இதில் நீங்கள் எந்த நேரத்தில் எங்கிருப்பீர்கள், எந்த நேரத்தில் உங்கள் மொபைல் சைலன்ட்மோடுக்கு மாற வேண்டும் என்பதை பதிவு செய்து வைக்கலாம். அப்படிச் செய்துவிட்டால் நீங்கள் மறந்தாலும் அந்த நேரத்திற்கு தானாக சைலன்ட் மோடுக்கு மாறி, வகுப்பறையிலும், செமினாரிலும் நீங்கள் அவமானப்படுவதை தடுத்துவிடும்.

    வகுப்பறையில் கண்டிப்புக்கு பயந்து சைலன்ட் மோடுக்கு மாறலாம். ஆனால் வகுப்பைவிட்டு வெளியே வந்துவிட்டால் படிக்கும் நேரத்திலும் சமூக வலைத்தளங்களில் உலவ மனம் துடிக்குமே. அப்படி மனம் அலைபாயும் நேரத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத் தளங்களின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது SelfControl அப்ளிகேசன். இதை இலவசமாக பயன்படுத்த முடியும்.

    இன்னும் சில அவசிய தேவைகள்...

    * பாடத்திட்டங்கள், வகுப்பு நேரங்கள் மற்றும் உங்கள் கல்வித்திட்டங்களை குறிப்பிட்டு சீராக வழி நடத்த உதவுகிறது ஐ-ஸ்டிஸ் புரோ (iStudiez Pro) அப்ளிகேசன். இது ஐபோன், ஐபேடு கருவிகளில் மட்டுமே செயல்படும்.

    * தேவையான புத்தகங்களை வாங்கவும், தேவையற்ற புத்தகங்களை விற்கவும் உதவும் ஹால்ப்.காம் (Half.com) இணையப் பக்கம் வசதியாக இருக்கும்.

    * மாணவர்களின் செலவை மேற்பார்வையிட உதவும் அப்ளிகேசன் மின்ட் (Mint). செலவுகள், தேவைகள் எல்லாவற்றையும் பதிவிடும்போது பயனுள்ள சேமிப்பு வழிகளை நினைவூட்டக்கூடியது மின்ட் அப்ளிகேசன், இது இலவச அப்ளிகேசனாகும்.

    * எழுதாமல், தட்டச்சு செய்யாமல் குறிப்பெடுக்க உதவுகிறது Dragon Dictation அப்ளிகேசன். இது, நாம் உச்சரித்தாலே எழுத்துகளாக குறிப்பெடுத்துக் கொள்ளும். இது பலவகையில் உதவியாக இருக்கும்.

    * உங்கள் பயிற்சிகள் அழிந்துவிடாமல் பாதுகாக்க சுகர் சிங் (SugarSync) அப்ளிகேசன் உதவுகிறது. இது பல கருவிகளில் உங்கள் தயாரிப்புகளை சேமிப்பதுடன், பாதுகாப்பை வழங்குகிறது.

    * மாணவர்களுக்கான மின்னணு நூலகமாக விளங்கும் அப்ளிகேசன் BenchPrep. நூல்கள் மட்டுமல்லாது பிளாஸ்கார்டு, வினாத்தாள்கள், பாடங்களும் உள்ளன.

    * கல்லூரி பாடங்களின் சொற்களுக்கு பொருளும், எளிய விளக்கமும் தரும் அகராதி அப்ளிகேசன் Dictionary.com/Mobile.

    மாணவர்களான நீங்கள், செல்போனில் பொழுதுபோக்கு தளங்களில் சென்று நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள அப்ளிகேசன்களை பயன்படுத்தி கல்வியை வளப்படுத்திக் கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
    மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் ஸ்ரீவித்யா கல்விக்குழும நிர்வாகம் மற்றும் அனைத்து குழும கல்லூரி, பள்ளிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா, விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் கலை பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீவித்யா மெட்ரிக் மற்றும் பப்ளிக் பள்ளி, கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இதனையொட்டி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்விக்குழும நிறுவன தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ், துணைத்தலைவர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகத்தினர், கல்லூரி, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.



    சாத்தூர் மேட்டமலை ஸ்ரீவத்சா கல்வியியல் மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா, கல்லூரி தலைவர் சுப்பாராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    சிவகாசி அனிதா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவுக்கு பள்ளி தலைவர் ஆறுமுகச்சாமி வடிவேல், பள்ளி தாளாளர் வசந்த் விகாஷ் ஆறுமுகச்சாமி மற்றும் சுஜிதா விகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவுக்கு தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் அரவிந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சாத்தூர் மேட்டமலை பி.எஸ்.என்.எல். கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவையொட்டி உறியடித்தல், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் நாட்டுப்புற கலைகள் முன்னேற்ற பாதையில் செல்கின்றனவா?, அழிவு பாதையில் செல்கின்றனவா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது.

    தாயில்பட்டி அருகே செவல்பட்டி எஸ்.பி. மாடர்ன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா, தாளாளர் பார்வதி சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி இயக்குனர் ஜெயபாரதி முன்னிலை வகித்தார். விழாவையொட்டி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், கல்வி குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் மற்றும் சசிரேகா, பள்ளி செயலாளர் சரவணன், சங்கீதா சரவணன், ஹேமாபார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் விழாவையொட்டி பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பட்டிமன்றம் நடந்தது.

    ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் தாளாளர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி சித்ரா தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த், நிர்வாக அதிகாரி அமுதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஷியாம்சுந்தர். இவரது நண்பர் வெங்கடேஷ்குமார். இருவரும் கல்லூரி மாணவர்கள்.

    நேற்று இரவு ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாருடன் வில்லிவாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகே உள்ள செல்போன் கடைக்கு சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாரை தாக்கினர்.

    பின்னர் 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே காலி மைதானத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவர்களை தாக்கி செல்போன், பணம், மோதிரத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

    இதுகுறித்து ஐ.சி.எப். போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ×