என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் வசந்த்"

    • குருந்தன்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றினை விஜய் வசந்த் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடைக்காவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    குருந்தன்கோடு அருள்மிகு காரிபள்ளி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டார்.


    S. T. மங்காடு, பால்குளம் சி. எஸ். ஐ புதிய ஆலய அர்ப்பணிப்பு விழா மற்றும் சபை நாள் விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.


    கொடுப்பைக்குழியில் நடைபெற்ற குருந்தன்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் உட்பட ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.

    சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.

    ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.

    மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

    ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு.

    நாகர்கோவில் பெருவிளை பகுதியில் ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    இதுதொடர்பாக விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    • தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தினார்.
    • தேங்காய்பட்டணம் துறைமுக புனரமைப்பு பணிகளை கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    தேங்காய்பட்டணம் துறைமுகம் பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் மணல் திட்டு காரணமாக அவ்வப்போது படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனைத் தடுக்க வேண்டி பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, துறைமுக முகத்துவாரத்தைச் சீரமைக்க ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று முகத்துவாரம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகளுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    கால நிலை ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்படும். அருகில் உள்ள பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கும் முயற்சியும் விரைவில் துவங்கும்.

    கடந்த ஆட்சியில் மீனவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பணிகள் செய்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை மீனவ மக்களின் ஆலோசனை பெறப்பட்டே பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், மீனவர் அணி மாவட்ட தலைவர் கென்னடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், வார்டு உறுப்பினர் கிளிட்டஸ் மற்றும் சுனில், சகாயதாஸ், சவுகத்அலி, சேக், சமீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்
    • தாம்பரம் - நாகர்கோவில் ரயிலை தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ரயில்வே சேவைகள் குறித்தும் ரயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் இன்று நாகர்கோவிலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து பல்வேறு ரயில் சங்க பிரதிநிதிகளுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய ரயில்களைக் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருதல் சில ரயில்கள் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நின்று செல்ல ஏதுவாக வழிவகை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    குறிப்பாகத் தாம்பரம் - நாகர்கோவில் ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல், ஷார்மினார் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், வார கடைசியில் வேளாங்கண்ணி செல்ல கன்னியாகுமரி வழித்தடத்தில் ரயில் இயக்குதல், மதுரை - திருவனந்தபுரம் இடையே மெமோ ரயில் இயக்குதல், டவுன் ரயில் நிலையத்தில் பரசுராம் ரயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    இதனைக் கேட்டறிந்த விஜய் வசந்த், இந்த கோரிக்கைகள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கைகள் வைத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து பேசுவேன் எனவும் ரயில் பயணிகள் சங்கத்திடம் கூறினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சூசைராஜ், மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார், ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம், கன்னியாகுமரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முருகதாஸ், கன்னியாகுமரி கிறிஸ்தவ ஃபாம் சென்னை சங்கத்தைச் சேர்ந்த செல்வின் ஜெயபால், ராதாபுரம் நாங்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்க தலைவர் ராஜ்குமார், கே.எம்.எஸ் சங்க இணை செயலாளர் செல்லத்துரை, ராதாபுரம் ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த கிங்ஸ்லி, ஜான் தேசிங், முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரியத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தேவாரம், நுகர்வோர் சமூகப் பாதுகாப்பு சங்க உறுப்பினர் தினேஷ் கிருஷ்ணா, டவுன் ரயில்வே சங்கத்தைச் சேர்ந்த மோகன், தமிழ்நாடு தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ரெஜிசிங், சி.எல்.ஜோ எச்.இ.எ.எல் சங்கத்தைச் சேர்ந்த செல்வின் வஸ்தின், உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மாலத்தீவில் மரணம் அடைந்த கணவன் மனைவியின் பூத உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கோரிக்கை
    • அரசு சார்ந்த அனைத்து உதவிகளும் ஆவன செய்வதாக விஜய் வசந்த் எம்.பி. உறுதியளித்தார்.

    கன்னியாகுமரி:

    மாலத்தீவில் நடந்த தீ விபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் ஜெனிஸ்-சுந்தரி ஆகியோர் மரணம் அடைந்தனர். அவர்களின் உடல்களை கன்னியாகுமரி கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களது உறவினர்கள், மற்றும் ஊரார்கள், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்தை தொடர்பு கொண்டு மாலத்தீவில் மரணம் அடைந்த கணவன் மனைவியின் பூத உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில், மாலத்தீவில் மரணம் அடைந்த தம்பதியர் ஜெனிஸ்-சுந்தரி ஆகியோரின் இல்லத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. சென்று, அவரது தாய், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்ந்த அனைத்து உதவிகளுக்கும் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

    மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்ன குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், வட்டார காங்கிரஸ் தலைவர் என்.ஏ.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆய்வு செய்தார் .
    • அந்த நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்

    தென்தாமரைகுளம்:

    அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய் வசந்த் ஆய்வு செய்தார் .

    அப்போது அவரிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி.,விஜய் வசந்த் கூறியதாவது;

    அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனி பிரசவ வார்டு அறை அமைக்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணி தொடங்கப்படும்.

    அதேபோல், தற்போதுள்ள பிரசவ வார்டில் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார் .

    இந்த ஆய்வின்போது அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் சீதா, முடயியல் இயக்குனர் கனி, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் கிங்சிலின், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்னம்பெருமாள், நிர்வாகிகள் டேனியல், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கீரிப்பாறையில் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொழிலாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    கன்னியாகுமரி:

    கீரிப்பாறையில் செயல்படும் அரசு ரப்பர் தோட்டத்தில் காளிகேசம், பரளியாறு, மணலோடை ஆகிய 4 பிரிவுகளிலும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கான ஊதிய உயர்வு என்பது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காததால், கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன் தோட்டக்கலை தொழிலாளர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நியாயமான கோரிக்கைக்காக தொழிலாளர்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தோட்டக்கலை தொழிலாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது பேசிய விஜய் வசந்த் எம்.பி., உறுதி செய்யப்பட ஊதிய உயர்வு தற்போது வரை வழங்காதது மிகவும் வேதனை அளிக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருந்து வரும் நிலையில் அரசு அறிவித்த ஊதிய உயர்வை ரப்பர் கழகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கி ரப்பர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

    மேலும், கீரிப்பாறை செல்லும் சாலைகள் விரைந்து செப்பனிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என விஜய் வசந்த் கூறினார்.

    இந்த நிகழ்வின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், பொதுச்செயலாளர் பால்ராஜ், காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் மஞ்சுஸா, மாவட்ட செயலாளர் சகாயராஜ், வர்த்தக பிரிவு மாநில செயல் தலைவர் ராமசாமி, ஐ.என். டி. யூ.சி கிழக்கு மாவட்ட தலைவர் பொன்ராஜா, சட்ட ஆலோசகர் ஜான் செளந்தர், அழகியபாண்டியபுரம் கிராம தலைவர் காங்கிரஸ் ராமதாஸ், அழகியபாண்டியபுரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராபி, நிர்வாகிகள் ஜினோ, ஜோசப் ஜெரால்டு சீலன், மாசிலாமணி, சுந்தரராஜ், செய்யது அலி மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டியினைக் கட்ட அடிக்கல் நாட்டினார்
    • இத்திட்டத்துக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றினை கட்டி தரும்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டியினைக் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டினார்

    இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சீனிவாசன், வட்டார தலைவர் முருகானந்தம், வட்டார பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, வர்த்தக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் முருகேசன், திருப்பதிசாரம் ஊராட்சி தலைவர் சிந்துமதி, வார்டு உறுப்பினர் முகிலா, தோவாளை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் கனகப்பன், செண்பகராமன்புதூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் நிலாமணி, தாழக்குடி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் டேவிட்சிங், ஆரல்வாய்மொழி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் நேசமணி, பீமநேரி ஊராட்சி காங்கிரஸ் தலைவர் முத்துமணி, சிறுபான்மை பிரிவு தலைவர் முகைதீன் சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாகர்கோயில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.சி.பாலனின் துணைவியார் வசந்தா பாலன் காலமானார்.
    • அவரது இல்லத்திற்கு சென்ற கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் இறுதி மரியாதை செலுத்தினார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரான எம்.சி.பாலனின் துணைவியார் வசந்தா பாலன் காலமானார்.

    இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எம்.சி.பாலன் துணைவியார் திருமதி வசந்தா பாலன் அவர்கள் மறைவு செய்தி அறிந்து அவர் இல்லத்திற்கு சென்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

    அவரது மறைவால் பிரிந்து வருந்தும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டனர்.

    • திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருடன் இணைந்து, விஜய் வசந்த் எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார்.
    • கடந்த தேர்தலில் பாஜக டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் வரும் 4ந் தேதி (நாளை) மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் கடந்த சில தினங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருடன் இணைந்து, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பிரசாரம் மேற்கொண்டார். ஆர். கே. புரம், நானக் புரம் ஆகிய பகுதிகளில்

    தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் மக்களை சந்தித்து உரையாடி பிரசாரம் மேற்கொண்டார்கள்.

    மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    • சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க கேட்டுக்கொண்டார்
    • கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்தார்.

    சென்னை:

    சென்னையில் ரயில்வே துறை பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் மேலாளர் மல்லையா, முதன்மை இயக்குனர் நீனு ஆகியோரை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்தார்.

    சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள், ரயில்வே நிலையங்களின் மேம்பாடு, ரயில் நிறுத்தங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளார் விஜய் வசந்த். 

    ×