search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனா"

    ஹாங் கூறும் போது, ‘என்னை ஓட்டலில் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை.

    பீஜிங்:

    சீனாவில் உள்ள ஷாங்ஷா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹாங். இவர் மிக அதிகமாக சாப்பிடும் சாப்பாட்டு ராமனாக வலம் வருகிறார். இவர் அதிகமாக உணவு சாப்பிடுவதை வீடியோக்கள் எடுத்து வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

    அந்த நகரில் ஹன்டாடி பார்பிக்யூ ஓட்டலுக்கு சென்று அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இவர் அந்த ஓட்டலுக்கு முதல்முறை சென்றபோது 1½ கிலோ பன்றி இறைச்சி சாப்பிட்டார்.

    அடுத்த முறை ஓட்டலுக்கு சென்றபோது இதேபோல அதிக உணவுகளை சாப்பிட்டார். சமீபத்தில் அவர் அந்த ஓட்டலில் 4 கிலோ இறால் உணவுகளை சாப்பிட்டு தீர்த்தார்.

    இதனால் அந்த ஓட்டலில் இனி ஹாங் நுழையக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக அந்த நிர்வாகத்தினர் கூறும்போது. அவர் எப்போது ஓட்டலுக்கு வந்தாலும் நாங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உணவின் பெரும் பகுதியை சாப்பிட்டு காலி செய்து விடுகிறார்.

    எனவே மற்ற வாடிக்கையாளர்களுக்கு எங்களால் உணவு வழங்க முடியவில்லை. எனவே தான் அவர் ஓட்டலுக்கு வரக்கூடாது என நாங்கள் தடை விதித்திருக்கிறோம்’ என்று கூறினார்கள்.

    ஆனால் ஹாங் கூறும் போது, ‘என்னை ஓட்டலில் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை. என்னை ஓட்டல் நிர்வாகம் பாரபட்சத்துடன் நடத்துகிறது’ என்று கூறினார்.

    இதையும் படியுங்கள்... வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தது

    ஹன்பன்தொட்டா துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என இலங்கை ராணுவ மந்திரி ருவன் கூறியுள்ளார். #China #Hambantota #SriLanka
    கொழும்பு:

    இலங்கையின் தென்பகுதியில் ஹம்பன்தொட்டா துறைமுகம் உள்ளது. அதை 99 ஆண்டுகள் குத்தகைக்கு இயக்க ஒரு சீன நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு இலங்கை அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அந்த துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்நிலையில், இலங்கைக்கு வந்த ஜப்பான் ராணுவ மந்திரி இட்சுனோரி ஒனோடரா, இலங்கை ராணுவ மந்திரி ருவன் விஜேவர்தனேவை சந்தித்து, இதுபற்றிய தனது கவலையை தெரிவித்தார்.

    அப்போது, ஹன்பன்தொட்டா துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று ருவன் விஜேவர்தனே தெரிவித்தார்.  #China #Hambantota #SriLanka
    இருநாடுகளுக்கு இடையே வர்த்தக தகராறு இருந்து வந்த நிலையில், பல தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது. #TradeWar #US #China
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் காப்புரிமையை தவறான முறையில் பயன்படுத்தி அதே பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு நாடுகளுக்கும் வர்த்தக தகராறு தொடங்கியது. இதன் காரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களின் மீது பல்வேறு வரிகளை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவில் இருந்து  சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 128 அமெரிக்க பொருட்களின் மீது அதிக வரிகளை அந்நாடு விதித்தது. இதையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப்போர் மூலம் அபாயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப்போரை தவிர்க்கும் நோக்கில் வாஷிங்டன் நகரில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களின் மீதான வரி விதிப்பை குறைத்துகொள்வதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இதைத்தொடர்ந்து, அதிகரித்துவரும் சீன நுகர்வோர்களின் தேவைகள் மற்றும் அதை ஈடு செய்ய தேவைப்படும் உயர்தர பொருளாதார மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவிலிருந்து அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்யப்படும் என சீனா தரப்பில் பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்டுள்ளது.

    அறிவுசார் பொருட்களின் காப்புரிமைகளை தவறாக பயன்படுத்தாமல் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் வர்த்தகத்தை அதிகரிப்பது, இறக்குமதி பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியை இரண்டு நாடுகளும் குறைத்துக்கொள்வது, உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற முக்கிய முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா சார்பில், வணிகத்துறை செயலாளர் வில்புர் எல்.ரோஸ் மற்றும் அமெரிக்க வணிக பிரதிநிதி ராபர்ட் இ.லைத்திசர் ஆகியோரும், சீனாவின் தரப்பில் அதிபரின் சிறப்பு அதிகாரி லியூ ஹீவும் இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்தனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிபர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சீன தொலைதொடர்ப்பு நிறுவனங்கள் மீண்டும் தங்களது தொழிலை அமெரிகாவில் தொடங்க உதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். #TradeWar #US #China
    சீனா இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது. இந்த கப்பல் நேற்று டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது. #China #Aircraft
    பீஜிங்:

    சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது.

    இந்த கப்பல் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது.

    கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும்.

    சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகிலேயே இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் தான் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 18 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.  #China #Aircraft
    ×