search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்மிண்டன்"

    துருக்கி வீராங்கனை நெஸ்லிகனுடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
    பாலி:

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து (வயது 26) அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், பி.வி.சிந்து, துருக்கி வீராங்கனை நெஸ்லிகன் யிஜித்தை எதிர்கொண்டார்.

    துவக்கம் முதலே ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிந்து, 35 நிமிடங்களில் 21-13, 21-10 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். நெஸ்லிகனும் சிந்துவும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் 4 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் டென்மார்க் ஓபனிலும் நெஸ்லிகனை வீழ்த்தினார்.

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் தொடரில் இதுவரை எளிதாக வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு அரையிறுதியில் கடும் சவால் காத்திருக்கிறது. ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி அல்லது தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங்குடன் மோதுவார்.
    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை நெஸ்லிகனை பி.வி.சிந்து எதிர்கொள்ள உள்ளார்.
    பாலி:

    இந்தோனேசியாவின் பாலியில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கிளாரா அசுர்மெண்டியை 17-21 21-7 21-12 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை நெஸ்லிகனை சிந்து எதிர்கொள்ள உள்ளார்.

    நெஸ்லிகனும் பி.வி.சிந்துவும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். 3 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, காலிறுதி ஆட்டத்திலும் சிந்து ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென், கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா- சிக்கி ரெட்டி ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். #SainaNehwal
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் முன்னேறினர்.

    இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாய்னா 3-10 என பின்தங்கிய நிலையில் இருந்தபோது, கரோலினா மரினுக்கு தொடைப்பகுதியில் (hamstring injury) காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். ஆகவே, சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
    இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். திருமண பேட்டோவை சாய்னா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். #Saina
    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். அதேபோல் சிறந்த வீரர் பாருபள்ளி காஷ்யப். இருவரும் காதலித்து வருவதாகவும், திருணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.

    கடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான், டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று சாய்னா தெரிவித்தார்.

    இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட போட்டோவை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #HongKongOpen #PVSindhu #Srikanth
    கோவ்லூன்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 13-21, 21-17 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் நிட்சான் ஜின்டாபோலை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-10, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுஷியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-17, 21-14 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் சுப்பான்யு அவிஹிங்சனோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-11, 21-15 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் வோங் விங் கி வின்சென்டை சாய்த்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரர் கோசித் பெட்ராடாப்பிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 16-21, 13-21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியா வீரர் அந்தோணி சினிசுகாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.  #HongKongOpen #PVSindhu #Srikanth 
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து காலிறுதியில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறினார். #ChinaOpen
    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சீனாவின் ஹி பிங்ஜியாவோ-வை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 17-21, 21-17, 15-21 எனத் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    முதல் செட்டில் 8-3 என முன்னிலையில் இருந்து பிவி சிந்து பின்னர் 17-21 என முதல் செட்டை இழந்தார். 2-வது செட்டை சிறப்பாக விளையாடி 21-17 எனக் கைப்பற்றிய போதிலும், வெற்றிக்கான 3-வது செட்டில் 15-21 என வீழ்ந்தார்.
    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி 2-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #SrikanthKidambi
    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தென்கொரியாவின் லீ டாங் கெயுன்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 12-21 என எந்தவித போராட்டமின்றி ஸ்ரீகாந்த் கிதாம்பி இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய ஸ்ரீகாந்த் 2-வது செட்டை 21-16 எனவும், வெற்றிக்கான 3-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் நம்பர் வீரரான கேன்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபன் அரையிறுதியில் மொமோட்டாவிடம் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார். #PVSindhu
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற தொடக்க சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து அமெரிக்காவின் பெய்வென் சங்கை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 17-21 என பிவி சிந்து இழந்தார். 2-வது செட்டை 21-16 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் அமெரிக்க வீராங்கனை 3-வது செட்டை 21-18 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    ஒலிம்பிக், ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது அதிர்ச்சி அளித்தார். ஜப்பான் ஓபனில் 2-வது சுற்றிலும், சீனா ஓபனில் காலிறுதியிலும் தோல்வியடைந்துள்ளார்.
    இளையோர் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். #YouthOlympics2018
    இளையோர் ஒலிம்பிக் தொடர் அர்ஜென்டினாவில் நடைபெற்று வருகிறது. பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சீனாவின் லீ ஷிபெங்கை எதிர்கொண்டார்.



    இந்தியாவின் லக்‌ஷயா சென் சீன வீரரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 15-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்பியடைந்தார்.
    சீன தைபே பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து காலிறுதியோடு வெளியேறினார். #AjayJayaram
    சீன தைபே பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், மலேசியாவின் லீக் ஜீ ஜியா-வை எதிர்கொண்டார். இதில் அஜய் ஜெயராம் 16-21, 9-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    முதல் சுற்றில் 16 புள்ளிகள் வரை அஜய் ஜெயராம் கடும் நெருக்கடி கொடுத்தார். அதன்பின் 16-21 என முதல் செட்டை இழந்தார். ஆனால் 2-வது செட்டில் பெரிய அளவில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 9-21 என 2-வது செட்டை இழந்தார்.

    மற்றொரு வீரரான சவுரப் வர்மா ஏற்கனவே தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றனர். #JapanOpen
    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் கென்டோ மொமோடா - தாய்லாந்தின் கோசிட் பெட்ப்ரதாப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் கென்டோ மொமோடா 21-14, 21-11 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாரா - ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் மோதினார்கள். இதில் கரோலினாவிற்கு ஒகுஹாரா கடும் சவாலாக விளங்கினார். கரோலினா முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 17-21 என இழந்தார். 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் கரோலின் சிறப்பாக விளையாடி 21-11 எனக்கைப்பற்றி கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார்.
    பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த், வீராங்கனை பிவி சிந்து முதல் 10 இடத்திற்குள் நீடிக்கின்றனர். #Srikanth #PVSindhu
    பேட்மிண்டன் உலக பெடரேசன் நேற்று வீர்ரகள் மற்றும் வீராங்கனைகளுக்கான உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் வீரர்களுக்கான தரவரிசயில் ஸ்ரீகாத் கிதாம்பி 63835 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். ஆசிய விளையாட்டில் சோபிக்கா விடிலும் 10 இடத்திற்குள் நீடிக்கிறார்.

    டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் 83754 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனாவின் ஷி யுகி, மலேசியாவின் லீ் சாங் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பிவி சிந்து 85414 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். தைவானின் தாய் சு யிங் 98317 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜப்பானின் அகானே யமகுச்சி 87743 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். சாய்னா நேவால் 58014 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
    ×