என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 98066"
- சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.
- சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.
பேராவூரணி :
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் சோலை ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக ஆசிரியர் சோழப்பாண்டியன் அனை வரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவரும், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர் ஒலிம்பியான் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது, நான் இந்த பேராவூரணி அரசு பள்ளியில் கல்வி பயின்று இதே மைதானத்தில் பயிற்சி பெற்றேன். உடற்கல்வி ஆசிரியர்கள் கிட்டப்பா, அப்பாத்துரை ஆகியோர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நீங்களும் சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.
விழாவில்முன்னாள் உடற்கல்வி ஆசிரிய ர்கள் கிட்டப்பா அப்பா த்துரை ஆகியோர் கவுரப்படு த்தப்பட்டனர். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பரிசு பொருட்களை சமூக ஆர்வலர் சுப.நற்கிள்ளி நன்கொடையாக வழங்கினார்.
1. வலைதள உலாவல்
நம்மில் பலருக்கும் இன்று விரல் நுனியில் இணைய வசதி இருப்பதால் மனதில் சிறு கேள்வி உதித்தால்கூட செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு ‘தேடி ஆராய’ ஆரம்பித்துவிடுகிறோம். இவ்வகையான தேடல்கள் நேரத்தை விரயமாக்கி, நம் வேலையையும் பாதிக்கும். இதை தவிர்க்க, வேலை நேரத்தில் தோன்றும் கேள்விகளையெல்லாம் ஒரு நோட்பேடில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், ஓய்வு நேரத்தில் இந்த ஆற்றல் நிறைந்த தேடலில் ஈடுபடலாம்.
2. ஒரே நேரத்தில் பல வேலைகள்
இது பெரிய திறமை எனக் கருதி நம்மில் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதுண்டு. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின்படி 2 சதவிகித மக்களே இந்த மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அநாவசிய சாகசங்களைக் குறைத்தால் சிறப்பாக செயல்பட முடியும்.
3. மெசேஜ், ஈ-மெயில்களை கண்காணிப்பது
இது ஒரு வகையான மயக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கம் வேலையை மட்டுமல்ல மனநிலையையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
4. காரணம் தேடுதல்
ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்போம். ஆனால் அதை மறந்தால் அதற்கு நமக்கு நாமே காரணம் சொல்லிக்கொண்டு, எடுத்த செயலை அப்படியே விட்டுவிடுவோம். தினமும் அதிகாலை எழ வேண்டும் என்ற நம் புத்தாண்டு உறுதிமொழி போல. இப்படி நாம் காரணங்கள் சொல்லி கழட்டிவிட்ட காரியங்களே நமக்கு பெரிய தடையாக அமைந்திருக்கும்.
5. அநாவசிய சந்திப்புகள்
ஆன்லைனிலேயே பல வேலைகளை முடிக்கும் நவீன டெக்னாலஜி காலத்தில், தேவையில்லாத நேரடி சந்திப்புகளை குறைத்துக் கொள்ளலாம். தெளிவில்லாத சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.
6. ஒத்திவைத்தல்
அப்புறம், பிறகு, நாளை என தள்ளிப்போட்டு பல காரியங்கள் ஒரேயடியாகக் காணாமல் போன கதைகள் உண்டு. அதேபோல் சுலபமான வேலைகளை முதலில் முடித்துவிட்டு கடினமானதை கடைசியில் செய்வோம் எனவும் மறந்து விடுவோம். இது தவிர்க்க வேண்டிய முக்கிய பழக்கமாகும்.
7. உட்கார்ந்திருப்பது
வீடோ அல்லது அலுவலகமோ ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது சிறிது தூரம் காலாற நடப்பது, கணினித் திரையை விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்ல புத்துணர்ச்சியை தரும்.
8. முக்கியத்துவம் அளித்தல்
நிறைய குறிக்கோள்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்.
9. பொய் தூக்கம்
படுக்கையில் ‘இன்னும் 5 நிமிஷம்’ என்று எழுந் திருக்க மனமில்லாமல் புரள்பவர்களில் பெரும்பாலானோருக்கு அப்பழக்கம், கூடுதல் எனர்ஜி, மேம்பட்ட சிந்தனையை வழங்கும் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நிறைவான இரவுத் தூக்கமும் அதிகாலை கண் விழிப்பும் சிறந்ததொரு நாளை தரும்.
10. ஓவர் பிளானிங்
லட்சிய வெறி கொண்டோர் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்கமாட்டேன் என்ற பெயரில் தீவிரமாக பிளான் போட்டு செயல்படுவர். தங்கள் திட்டத்தில் சின்ன தடங்கல் ஏற்பட்டால் கூட சோர்ந்துவிடுவார்கள். இது பெரிய தடை.
11. திட்டமிடல் இல்லாமை
எந்த திட்டமும் இல்லாமல் வாழ்க்கையில் போகிற போக்கில் வென்று விட முடியாது. இந்த எல்லையும் ஆபத்தானதே. லட்சியமில்லா வாழ்க்கை சுவாரசியமற்றதாகிவிடும்.
12. செல்போனை சார்ந்திருத்தல்
எல்.இ.டி. ஸ்கிரீன்கள் கொண்ட செல்போன், லேப்டாப் போன்றவை வெளியிடும் ஒளி கண் திரையை பாதிக்கக்கூடியவை. தூங்கும் போது கூட செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்குவோர் தான் அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
13. எல்லாம் பெர்பெக்ட்
எல்லா காரியத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்போர் செயல்படுவதை காட்டிலும் வேலையை தள்ளிப்போடுபவராகவே உள்ளனர். நேர்த்தி எல்லா விஷயத்திலும் கிடைத்துவிடாது. எல்லோராலும் ‘மிஸ்டர். பெர்பெக்ட்’ ஆக முடியாது. வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள்.
பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். இதனால் தற்கொலை செய்து கொள்ளக்கூட நேரிடலாம்.
இவற்றை போக்குவதற்கு சில வழிகள்!
* நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள், உங்களை நீங்களே ரசியுங்கள்.
* எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
* உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்.
* என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
* உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
* கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
* அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
* உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். உண்மையை மற்றவருக்கும் பகிருங்கள்.
ஒருவரிடம் உள்ள திறமையை பணத்தை பயன்படுத்தியோ, அதிகாரத்தை பயன்படுத்தியோ பெற முடியாது. திறமை என்பது வெள்ளம் போன்றது. குறிக்கோள், லட்சியம் என்ற கரை இருக்குமானால் அந்த தண்ணீர் விவசாயத்திற்கு, குடிநீருக்கு என்று பல வகையில் பயன்படும். கரைகள் இல்லை என்றால் ஊருக்குள் புகுந்து பல உயிர்களை, உடமைகளை அழித்து விடும். எனவே குறிக்கோள், இலக்கு இல்லாத திறமை செயல்வடிவம் பெறாது.
வாழ்க்கை எண்ணற்ற சவால்கள் நிறைந்தது. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளையும், பின் விளைவுகளையும் எதிர்கொள்ள திறமை நிச்சயம் தேவை. எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மன உறுதியை, நீங்கள் பெற்றுள்ள திறமைகள் தான் அளிக்கும்.
அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளின் வாயிலாக, பலருடைய வாழ்க்கையை காண்பதன் வாயிலாக நாம் பெறுவது தான் அனுபவ அறிவு. நாம் காண்கின்ற, கேட்கின்ற நிகழ்வுகள் செய்திகள் வாயிலாக தான் அறிவை பெறுகிறோம். தன்னம்பிக்கையின் வாயிலாக, கற்பனையின் வாயிலாக, பயிற்சிகளின் வாயிலாக, கல்வி ஞானத்தின் வாயிலாக, கேட்டு உணர்வதன் வாயிலாக எதையும் கற்று கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் வாயிலாக திறமைகளை வளர்த்து கொள்ளலாம்.
தீப்பொறி போன்ற உங்கள் திறமைகள் தீப்பந்தங்களாக மாறட்டும். செயல்திறன் என்கின்ற தீ வானத்தை எட்டட்டும். தீப்பந்தத்தை கீழ்நோக்கி காண்பித்தாலும் தீ மேல் நோக்கி தான் எரியும். எனவே திறமை என்கின்ற தீப்பந்தத்தை உருவாக்குங்கள். செயல்திறன் என்கின்ற தீ வெற்றியை நோக்கியே எரியும். நாளைய குறிக்கோள் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றால் போல் திட்டமிட்டு வாழ்ந்தால் வெற்றி சொந்தக்காரர்களாக எப்போதும் நாம் இருக்கலாம்.
இருப்பினும், பிரபாவோவும் அவருடைய ஆதரவாளர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உடனடி அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் கூறினர். எனினும், பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-7 என்ற நேர்செட்டில் ஜப்பானின் சயாகா தகாஹஷியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 28 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் (இந்தியா) 12-21, 21-11, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் யுவை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சகாய் கஜூமசாவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். அதேசமயம் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 16-21, 20-22 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #AsiaBadminton #PVSindhu #SainaNehwal
கிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். இந்நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் (வயது 53), பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் பெட்ரோ பொரஷென்கோ தனது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத டி.வி. நகைச்சுவை நடிகரான ஜெலன்ஸ்கி (41) களம் இறங்கினார்.
அரசியலில் புதிய மாற்றத்தை விரும்பிய உக்ரைன் மக்கள் ஜெலன்ஸ்கியை ஆதரித்தனர். இதனால் களத்தில் இருந்த மற்ற 35 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பெட்ரோ பொரஷென்கோவிற்கு நேரடி போட்டியாளராக மாறினார்.
தனது அரசியல் கொள்கை இதுதான் என்பதை தெளிவுபடுத்தாத ஜெலன்ஸ்கி தேர்தல் நேர விவாதங்கள் மற்றும் நேர்காணல்களை தவிர்த்தார். இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளான போதும், மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு குறையவில்லை. இந்த சூழலில் கடந்த மாதம் 31-ந் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடந்தது.
பொருளாதார பேராசிரியரான அலெக்சாண்டர் ஜெலன்ஸ்கிக்கு மகனாக பிறந்த ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து, டி.வி. தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடக்க தொடங்கினார். அவரது டி.வி. தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், ஜெலன்ஸ்கி கதா நாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (சர்வண்ட் ஆப் பீப்புள்) என்கிற டி.வி. தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.
கதையின் படி பள்ளிக் கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.
இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வர தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார்.
இதையடுத்து, தனது டி.வி. தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.
அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை மக்கள் அதிபராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் அடுத்த மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்குப்பதிவு முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, “நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்றார். மேலும் அவர் “நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது” எனவும் கூறினார். #UkrainePresidentialElections #VolodymyrZelenskiy
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான சீனா கிராண்ட்பிரி போட்டி ஷாங்காய் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 305.066 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் பங்கேற்ற 20 வீரர்களும் போட்டி தொடங்கியதும் காரில் சீறிப்பாய்ந்தனர். பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 06.350 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.
பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 6.552 வினாடிகள் பின்தங்கி 2-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ) 13.744 வினாடிகள் பின்தங்கி 3-வது இடத்தையும் பெற்றனர். இந்த ஆண்டில் லீவிஸ் ஹாமில்டன் 2-வது முறையாக முதலிடத்தை தனதாக்கி இருக்கிறார். இந்த போட்டி தொடரில் மெர்சிடஸ் அணியை சேர்ந்த லீவிஸ் ஹாமில்டன், வால்ட்டெரி போட்டாஸ் ஆகியோர் தொடர்ந்து 3-வது முறையாக முதல் 2 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
3-வது சுற்று முடிவில் லீவிஸ் ஹாமில்டன் 68 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்ட்டெரி போட்டாஸ் 62 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 4-வது சுற்று போட்டி அஜர்பைஜானில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்