search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆண்கள் பள்ளியில் விளையாட்டு விழா
    X

    விழாவில் ஒலிம்பியன் சுப்பிரமணியன் பேசினார்.

    அரசு ஆண்கள் பள்ளியில் விளையாட்டு விழா

    • சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.
    • சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

    பேராவூரணி :

    பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் சோலை ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக ஆசிரியர் சோழப்பாண்டியன் அனை வரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவரும், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர் ஒலிம்பியான் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது, நான் இந்த பேராவூரணி அரசு பள்ளியில் கல்வி பயின்று இதே மைதானத்தில் பயிற்சி பெற்றேன். உடற்கல்வி ஆசிரியர்கள் கிட்டப்பா, அப்பாத்துரை ஆகியோர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நீங்களும் சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.

    விழாவில்முன்னாள் உடற்கல்வி ஆசிரிய ர்கள் கிட்டப்பா அப்பா த்துரை ஆகியோர் கவுரப்படு த்தப்பட்டனர். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பரிசு பொருட்களை சமூக ஆர்வலர் சுப.நற்கிள்ளி நன்கொடையாக வழங்கினார்.

    Next Story
    ×