என் மலர்
நீங்கள் தேடியது "slug 98068"
- இந்திய திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து.
- வைரமுத்து இந்தி திணிப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

வைரமுத்து
சமீபத்தில் ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து
இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து வைரமுத்து பதிவிட்டுள்ளார். அதில், "எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ தங்கள் தாய் மொழியை எங்கள் தலையில் திணித்ததில்லை. தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? அதிகாரமிக்கவர்களே அன்போடு சொல்கிறேன். புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக" என குறிப்பிட்டுள்ளார்.
எங்களை ஆண்டஇஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோதங்கள் தாய் மொழியைஎங்கள் தலையில் திணித்ததில்லைதமிழ்நாட்டைத்தமிழர்கள் ஆளும்பொழுதேஇந்தியைத் திணிப்பதுஎன்ன நியாயம்?அதிகாரமிக்கவர்களேஅன்போடு சொல்கிறேன்புலியைத்தொட்டாலும் தொடுகமொழியைத்தொடாது விடுக#HindiImposition
— வைரமுத்து (@Vairamuthu) October 12, 2022
- அரசியலில் ஆன்மீகத்தையும், ஆன்மீகத்தில் அரசியலையும் கலக்கக்கூடாது என கவிஞர் வைரமுத்து பேட்டியளித்தார்.
- இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.
சிவகங்கை
சிவகங்கையில் கவிஞர் இலக்கியா நடராஜனின் "பெயர் தெரியாத பறவை" என்ற கவிதை நூல் மற்றும் "மயானக்கரை ஜன்னங்கள்" சிறுகதை நூல் ஆகியவை வெளியிட்டு விழா நடை பெற்றது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், கவிஞர் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., நக்கீரன் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் கவிஞர் வைர முத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-
அரசியல் வழியே ஆன்மீகமும், ஆன்மீகத்தின் வழியே அரசியலும் எல்லா நூற்றாண்டுகளிலும் எல்லா தேசிய இனங்களிலும், எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன.
பல நேரங்களில் அரசி யலையே ஆன்மீகம் தான் தீர்மானித்தது. இந்த வரலாற்றையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அரசியலில் குரல்வளையை ஆன்மீகம் பிடிப்பதும், ஆன்மீகத்தின் குரல்வளையை அரசியல் பிடிப்பதும் தகாது என்பது என் எண்ணம். இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
- இவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

பாரதிராஜா
இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று பார்த்தனர்.

இதையடுத்து பாரதிராஜா நேற்று (09-09-2022) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கவிஞர் வைரமுத்து நேரில் சென்று நலம் விசாரித்தனர். அண்மையில் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்.
- ராணி எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணி எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
எழுபது ஆண்டுகள்
அரசாண்ட முதல் அரசி
17 பிரதமர்கள் கண்ட
முதல் மகாராணி
ராஜ குடும்பத்தின்
முதல் பொறி நெறியாளர்
ராணுவப் பணி செய்த
முதல் அரண்மனைப் பெண்
அரசி எனில் தானே என
உலகை உணரவைத்த
முதல் ராணி
உங்களோடு கை குலுக்கியது
என் உள்ளங்கைப் பெருமை
உங்கள் புகழைக்
காலம் சுமந்து செல்லும்
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தி தொடங்கியது.
இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

வைரமுத்து
இந்நிலையில் வைரமுத்து, இப்படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது நடந்த உரையாடல் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்துக்குப் பாட்டமைக்க கலைமேகங்கள் கூடிய தருணம். தங்கர் பச்சான், ஜி.வி.பிரகாஷ், மற்றும் நான். மெட்டுக்குப் பாட்டெழுதினேன். அதில் சில காட்சிகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
- 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இயக்குனர் பாரதிராஜா.
- இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.
இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாரதி ராஜா
இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இயக்குனர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார். நாளும் நாளும் தேறி வருகிறார். மருத்துவர்கள் நல்ல சிகிச்சையை வழங்கி வருகிறார்கள். அச்சப்படுவதற்கு ஆதாரம் இல்லை. வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பே இல்லை.

பாரதி ராஜா
நுரையீரலில் சற்றே நீர் சேந்திருக்கிறது. அதுவும் சரி செய்யப்படும் என்று உறுதி தரப்பட்டிருக்கிறது. அவர் நன்றாக பேசுகிறார், அடையாளம் கண்டுகொள்கிறார், நல்ல நிலையில் இருக்கிறார். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். பாரதிராஜா மீண்டும் மீண்டு வருவார் கலை உலகை ஆண்டு வருவார்" என்று கூறினார்
- தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து.
- கவிஞர் வைரமுத்து இதுவரை 7500 பாடல்கள் எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழுமுறை பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் வைரமுத்து எழுதி வெளியிட்ட இந்தப் புத்தகம் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது.

வைரமுத்து
கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புத்தகம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்நிலையில், கள்ளிக்காட்டு இதிகாசம் திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் பேயத்தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று வைரமுத்து கூறியுள்ளார். மேலும் அதில் அவருக்கு எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்பாராத பல விருதுகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
- நன்றி இல்லாத மனிதன் காற்று, தண்ணீர் இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான்.
- அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன்.
பல்லடம் :
பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளையின் 53 -வதுவான்மழை மாதாந்திர கருத்தரங்கம் வனம் அறக்கட்டளை அலுவலகமான வனாலயத்தில் நடைபெற்றது. சக்தி மசாலா உரிமையாளர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வனம் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், சிறு துளி அமைப்பு வனிதா மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனம் அறக்கட்டளை செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசியதாவது:- இந்த பூமியில் மனிதன் உயிர் வாழத் தேவையான முக்கியமான இரண்டு காற்று, தண்ணீர். நன்றி இல்லாத மனிதன் அந்த இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான். அவர்களை காப்பது மரங்கள். இதை அறியாமல் உலகில் மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களிடம்தான். ஆம் இதுவரை அவன் அளித்தது எண்ணிலடங்கா மரங்கள். ஏன் அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன். வனம், சிறுதுளி போன்ற ஆர்வலர்களால் அவன் செய்த தவறுகள் சிறிதேனும் சரி செய்யப்படுகிறது.
நமது முப்பாட்டன் வள்ளுவன் முதல் குறளில் சொல்வது கடவுள் நம்பிக்கை. அதற்கு அடுத்ததாக தண்ணீரைப் பற்றிச் சொல்லி உள்ளார். ஏன்? தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியம். அந்தத் தண்ணீரின் தேவை இல்லை என்றால் நீ கடவுளைக் கூட வழிபட முடியாது .இந்த உலகம் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டது. மீதி உள்ள பகுதியில்தான் மனிதன் குடித்தனம் நடத்தி வருகிறான். அவனுடன் புழு, பூச்சி, விலங்குகள், போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இனியாவது மாற்றத்தைப் பற்றி யோசி, மரத்தை நேசி.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு மாலை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நாகராஜ்,சூழல் செயற்பாட்டாளர் சந்திரசேகர் வெள்ளிங்கிரி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கள் இயக்கத் தலைவர் நல்லசாமி மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
