search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98971"

    • ஓ.பி.எஸ்.சை சந்திப்பதற்கு சசிகலா இதுவரை நேரம் ஒதுக்காமலேயே உள்ளார்.
    • அ.தி.மு.க. விவகாரத்தை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்தினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி பொதுச் செயலாளராக கட்சியினரால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியையே அங்கீகரித்துள்ளன.

    இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமாகி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் அவரை முழுமனதோடு வரவேற்று அ.தி.மு.க.வின் 3-ம் தலைமுறையே என்று வர்ணித்து பின்னால் அணிவகுத்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தீர்ப்பு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் பின்னடைவாகவே மாறி இருக்கிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்ன? என்பது அரசியல் களத்தில் மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனோடு கைகோர்த்துள்ள ஓ.பி.எஸ். சசிகலாவையும் சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.

    ஆனால் அவரது இந்த அறிவிப்பை சசிகலா தரப்பினரோ ரசிக்கவில்லை. இதன் காரணமாகவே ஓ.பி.எஸ்.சை சந்திப்பதற்கு சசிகலா இதுவரை நேரம் ஒதுக்காமலேயே உள்ளார்.

    இப்படி சசிகலாவிடமிருந்து 'கிரீன் சிக்னல்' கிடைக்காத நிலையில் எந்த வழியாக பயணிப்பது? என்பது தெரியாமல் ஓ.பி.எஸ். தவியாய் தவித்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    அ.தி.மு.க. விவகாரத்தை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்தினார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டார். ஓ.பி.எஸ். ஆதரவாளரான சண்முகத்தில் தொடங்கி வைரமுத்து, ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் என 6 பேர் வரை வழக்கு போட்டனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் பல்வேறு கால கட்டங்களில் 10 முறைக்கு மேல் கீழ்கோர்ட்டு முதல் மேல் கோர்ட்டு வரை விசாரணை நடைபெற்று உள்ளது. ஆனால் இதில் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. மற்றபடி 9 முறை நடைபெற்ற வழக்கு விசாரணைகள் அனைத்திலுமே எடப்பாடியே வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஓ.பி.எஸ்.சின் சட்டப்போராட்டங்களை தவிடு பொடியாக்கியுள்ளார்.

    இதனால் ஓ.பி.எஸ்.சுக்கு அ.தி.மு.க. விவகாரத்தில் தோல்வி மேல் தோல்வியே கிடைத்து வந்துள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடிக்கு எதிரான கடைசி வாய்ப்பாக ஓ.பி.எஸ்.சுக்கு இருப்பது ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு மட்டுமேயாகும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்துள்ள இந்த வழக்கிலும் ஓ.பி.எஸ்.சை வீழ்த்தி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. வக்கீல்களுடன் அவர் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தொடங்கி, ராயப்பேட்டையில் தலைமைக்கழகம் தாக்கப்பட்ட விவகாரம் வரை அனைத்து வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்று சாதித்து காட்டி இருக்கிறார்.

    அதே பாணியில் ஓ.பி.எஸ். தொடர்ந்துள்ள இந்த கடைசி வழக்கிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் எந்த மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். உடனான இறுதி மோதல் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். மாவட்ட செயலாளர்களில் தொடங்கி அனைத்து பொறுப்புகளிலும் அதிரடி மாற்றங்களை செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணமக்கள் அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம் தான் மகிழ்ச்சியான தருணம்.
    • துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலர செய்வோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது :-

    மணமக்கள் அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம் தான் மகிழ்ச்சியான தருணம்.

    இந்த திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி என்றால், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து திருமணத்தை நடத்தி வைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இன்றைய தினம் அனைவரும் ஒன்றாய் ஒரே கூரையின் கீழ் இணைந்துள்ளோம்.

    6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் துரோகத்தால், சுயநலத்தால் அ.ம.மு.க. என்ற கட்சி இயக்கத்தை தொடங்க வேண்டியதாகி இருந்தது. ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவே அ.ம.மு.க.வை தொடங்கினேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னீர்செல்வத்துடன் பேசி ஒன்றாக செயல்படுவோம் என கூறினோம். அரசியலையும் தாண்டி எனக்கு அவருடன் நட்பு தொடர்ந்து வருகிறது.

    மீண்டும் மலர செய்வோம்..

    அதன்படி தற்போது அனைவரும் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். அ.தி.மு.க, அ.ம.மு.க இணைந்து கைகோர்த்து ஒன்றாக செயல்பட தொடங்கிவிட்டது.

    துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலர செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார்.
    • வரும் காலங்களில் சசிகலாவின் இந்த எண்ணம் ஈடேறுமா என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் நீடித்து வந்த தலைமை பதவிக்கான அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவர் ஏகமனதாக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டு கதவை தட்டிய ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. தலைமை விவகாரத்தில் சாதகமான அம்சங்கள் எதுவுமே நடைபெறவில்லை.

    தேர்தல் ஆணையத்தில் தொடங்கி கோர்ட்டு நடவடிக்கைகள் வரை அனைத்துமே எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்து உள்ளன. இப்படி அ.தி.மு.க.வில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

    தேவைப்பட்டால் சசிகலாவையும் சந்திப்பேன் என்றும், அ.தி.மு.க.வை மீட்பதே எங்கள் லட்சியம் என்றும் கூறிக்கொண்டு ஓ.பி.எஸ். காய் நகர்த்தினார். அது எந்தவித தாக்கத்தையும் அ.தி.மு.க.வில் இதுவரை ஏற்படுத்தவில்லை.

    இதனை சசிகலாவும் நன்றாக புரிந்து வைத்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உடனடியாக ஓ.பி.எஸ்.சை சந்திக்க விரும்பாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கைப்பற்றியதை சசிகலா நன்கு உணர்ந்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் சசிகலாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்துள்ளார்.

    இதன் காரணமாகவே அவரை சசிகலா முதல்-அமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தினார். தற்போது எடப்பாடி பழனிசாமி ஒரு சிலரை தவிர பிரிந்து சென்ற அனைவரும் அ.தி.மு.க.வில் வந்து சேரலாம் என்று கூறி வருகிறார்.

    இதுபற்றி அ.தி.மு.க. வினர் கூறும்போது, சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரையும் மறைமுகமாக குறிப்பிட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி கூறுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

    ஆனால் சசிகலாவோ இதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து தூது விட்டுக் கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார். இதன் காரணமாகவே அவர் எடப்பாடி பழனிசாமிக்கு தூதுவிட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் துணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக பேச்சு நடத்தி எப்படியும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட வேண்டும் என்று சசிகலா கணக்கு போட்டுள்ளார்.

    ஆனால் எடப்பாடியின் எண்ணமோ வேறு மாதிரியாக உள்ளது. சசிகலா குடும்பத்தினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால் அவர்கள் சொல்கிறபடி தான் நாம் நடக்க வேண்டி இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

    அ.தி.மு.க.வில் உள்ள பெரும்பாலானோரின் எண்ணமும் இதுவாகவே உள்ளது. எனவே வரும் காலங்களில் சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா? என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.

    இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறும் போது, தற்போதைய சூழலில் சசிகலாவை வைத்து அ.தி.மு.க.வுக்கு எந்தவித செல்வாக்கும் வந்துவிடப் போவதில்லை.

    எனவே எடப்பாடி பழனிசாமி தற்போது சசிகலாவின் இந்த தூது நடவடிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தமாட்டார். சசிகலா உள்ளிட்ட அவரது ஆட்கள் யாரை உள்ளே விட்டாலும் நமக்கு ஆபத்து என்பதை அவர் நிச்சயம் உணர்ந்துள்ளார். எனவே அது போன்று நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமியால் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    • மகன் திருமணத்தில் வைத்திலிங்கம் அரசியல் பேச மாட்டார்.
    • ஓ.பி.எஸ்., தினகரன் இருவரும் பேசுவார்கள். அது தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றனர்.

    திருச்சி:

    தஞ்சாவூரில் நாளை (7-ந்தேதி) வைத்திலிங்கம் இல்ல திருமண விழா ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் வைத்திலிங்கம் நேரில் கொடுத்து அழைப்பு விடுத்தார்.

    இதில் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரை கலந்துகொள்ள செய்து புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வைத்திலிங்கம் திட்டமிட்டு இருந்தார். அதன் மூலம் தங்களது நிலைப்பாட்டை கட்சியினருக்கு எடுத்துக் காட்டவும் நினைத்திருந்தார்.

    அதன்படி நாளை நடைபெறும் திருமண விழாவில் தினகரன் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். அதே விழாவில் சசிகலாவையும் தான் சந்தித்து பேசுவேன் என்று ஓ.பி.எஸ். தெரிவித்து இருந்தார். ஆனால் அதுகுறித்த உறுதியான தகவலை சசிகலா தரப்பு தெரிவிக்கவில்லை.

    முன்னதாக தன்னிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த வைத்திலிங்கத்திடம், உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் திருமண விழாவில் கலந்துகொள்ள முடியாது. மற்றொரு நாள் வீட்டுக்கு வந்து மணமக்களை வாழ்த்துகிறேன் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த திருமண விழாவில் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., திவாகரன் ஆகியோரை ஒரே மேடையில் ஏற்றி தங்கள் பலத்தை காண்பிக்க வைத்திலிங்கம் நினைத்திருந்த நிலையில் அது நிறைவேறாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

    ஆனாலும் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் இருவரும் ஒருசேர மேடையேற இருப்பது இரு தரப்பினருக்கிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடல் நலம்தேறிய பின்னர் சசிகலாவும் இணைவார் என்றும் பேசப்படுகிறது.

    இதுபற்றி வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கூறுகையில், சசிகலாவுக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், அதற்கான சிகிச்சையில் இருக்கிறார். அதனால் அவரால் வருவதற்கான சூழல் இல்லை. மகன் திருமணத்தில் வைத்திலிங்கம் அரசியல் பேச மாட்டார். ஆனால் ஓ.பி.எஸ்., தினகரன் இருவரும் பேசுவார்கள். அது தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றனர்.

    பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன சசிகலா-ஓ.பி.எஸ். சந்திப்புக்கு தஞ்சாவூர் திருமண விழா முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்திருந்த நிலையில் மீண்டும் ஒரு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • வைத்திலிங்கம் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானவர்களை அழைத்து உள்ளார்.
    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளாராம்.

    நல்ல செய்தி ஒன்று தஞ்சையில் இருந்து வரும் என்ற நம்பிக்கையோடு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள். வருகிற 7-ந்தேதி வைத்திலிங்கத்தின் இளைய மகன் திருமணம் தஞ்சாவூரில் விமரிசையாக நடைபெற போகிறது.

    இந்த கல்யாண வைபோகம்தான் பலவிதமான எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்திற்கு செல்வதற்காக 7-ந்தேதி நடைபெற இருந்த அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தையும் டி.டி.வி.தினகரன் தள்ளி வைத்து உள்ளார்.

    எனவே திருமண வைபோகத்தில் அவர் பங்கெடுப்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் சசிகலாவை அழைக்க சென்ற போது கையில் கட்டுடன் அவர் இருந்ததை பார்த்து வைத்திலிங்கம் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு போனாராம். அம்மா கையில் என்ன கட்டு என்று கேட்டுள்ளார். கையில் சிறு முறிவு ஏற்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கட்டை அவிழ்த்து விடலாம் என்று தெரிவித்த அவர் கல்யாணத்துக்கு கண்டிப்பாக வருவதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

    ஆக அந்த கல்யாணத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் சந்திக்க போகிறார்கள் என்பதுதான் இப்போதைய பரபரப்பு செய்தியாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல வைத்திலிங்கம் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானவர்களை அழைத்து உள்ளார். அத்துடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளாராம். மொத்தத்தில் இந்த கல்யாண வைபோகம் அ.தி.மு.க. வட்டாரத்தில் எந்தவித தாக்கத்தை உருவாக்கும் என்ற எண்ணம் கட்சியினரிடம் எழுந்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக கேரளாவில் மூலிகை சிகிச்சை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிக்கு வந்தார்.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்ல உள்ளார்.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதற்கான நடவடிக்கையில் தீவிர பணியாற்றி வருகிறார். முதற்கட்டமாக திருச்சியில் மாநாடு நடத்தி அ.தி.மு.க.வை மீட்டெடுப்பேன்று என்று சூளுரைத்தார். அடுத்தகட்டமாக சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கப் போவதாக அறிவித்தார்.

    ஆனால் டி.டி.வி. தினகரனை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை இதுவரை சந்திக்கவில்லை. இதனிடையே ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை அடையாறில் டி.டி.வி. தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    அதனைத் தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்திலிங்கம் மகன் திருமணம் வருகிற 7-ந் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழை சசிகலாவுக்கு கொடுக்கத்தான் இந்த சந்திப்பு நடந்தது என்று அவரது ஆதரவாளர் தெரிவித்தார்.

    வைத்திலிங்கத்தின் இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வமும் கண்டிப்பாக வருவார் என்பதால் திருமண விழாவிலேயே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கேரளாவில் மூலிகை சிகிச்சை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் சென்னை செல்ல உள்ளார். அங்கிருந்து 7-ந் தேதி தஞ்சாவூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    திருமண விழாவைத் தொடர்ந்து சசிகலாவுடன் இணைந்து கட்சி பணியில் ஈடுபடுவது குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.
    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம்.

    கன்னியாகுமரி:

    தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை அனுமதித்தால் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள்.

    மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவினால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாராளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முறையான வாக்குப்பதிவு நடைபெறும். பாராளுமன்றத்தை பொறுத்தமட்டில் யார் இந்த நாட்டினுடைய பிரதமராக வரவேண்டும் என்பதை பொறுத்து தான் வாக்கு வங்கி அமையும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் தி.மு.க.வை எதிர்க்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும். அப்படி ஒன்றுபட்டு தேர்தல் களத்தை சந்தித்தால் தான் தி.மு.க.வை தோற்கடிக்க முடியும். ஆகையால் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.

    தி.மு.க.வை எதிர்க்கக் கூடிய அனைத்து கட்சிகளும் ஒரேஅணியில் இணைய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? என்பது பற்றி அவர்தான் கருத்து சொல்ல வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகத்தில் இருக்கிற மிகச் சிறந்த தலைவர் யார் என்று சொன்னால் இன்றைக்கு முதல் வரிசையில் இடம் பிடித்து இருப்பவர் பிரதமர் மோடி மட்டும் தான். எனவே இந்தியாவில் 3-வது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பு ஏற்பது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சிக்காரர்களின் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு என இரண்டும் இருந்தால்தான் இவர்கள் தான் தலைமை என்று சொல்ல முடியும்.
    • தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இன்னொரு முறை நாங்கள் கொடுக்க மாட்டோம்.

    சென்னை:

    சசிகலா வேளாங்கண்ணியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்தை சந்தீப்பீர்களா? சந்தித்தால் என்ன மாற்றம் நிகழும் என்று கேட்கிறீர்கள். அரசியலில் என்ன மாற்றம் நிகழும் என்பது 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது தெரியும். எல்லோரையும் சந்திப்பேன்.

    என்னுடைய அரசியல் நகர்வு மெதுவாக போவதாக நான் நினைக்கவில்லை. அதாவது ஒரு கட்சி என்று இருந்தால் அதில் தொண்டர்களின் விருப்பம் தான் என்றைக்கும் வெற்றி பெறும். அதன் அடிப்படையில் பார்த்தீர்கள் என்றால் தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரியும், தொண்டர்களுக்கும் தெரியும். அதனால் விரைவில் நல்லபடியாக எல்லாம் நடக்கும்.

    கட்சிக்காரர்களின் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு என இரண்டும் இருந்தால்தான் இவர்கள் தான் தலைமை என்று சொல்ல முடியும். அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. வருங்காலத்தில் தேர்தலின் போது அதனை பார்ப்பீர்கள்.

    எல்லோரையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டு போவது தான் என்னுடைய வேலை. இதை நான் ஏற்கனவே ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் தனி அணியாக தேர்தலை சந்தித்த பிறகு எல்லோரும் ஒன்று சேர்க்கும் பணியினை அந்த காலக்கட்டத்தில் கூட நான் செய்திருக்கிறேன்.

    அதனால் இதை இப்போதும் செய்வது பெரிதாக தெரியவில்லை. என்ன பொருத்தவரை நான் நினைத்ததை முடித்துக் கொண்டே வருகிறேன்.

    தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இன்னொரு முறை நாங்கள் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அ.தி.மு.க.வால் தான் காப்பாற்ற முடியும். அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

    அதனை நிச்சயம் செய்து ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆட்சி நடத்தினாரோ அதனை நாங்கள் நிச்சயம் செய்வோம். அ.தி.மு.க. என்று நான் சொல்வது எங்களை தான். அனைவரும் ஒன்று சேர்ந்து 2024 தேர்தலை நிச்சயம் சந்திப்போம். அதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது.

    நான் வெளியில் செல்லுகின்ற போது அங்கே பொதுமக்கள் சொல்வது, என்னிடம் பேசுவது, எல்லோரும் நினைப்பது நான் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை வெளிப்படையாக பேசுகிறார்கள். நான் நம்பி ஒருவரிடம் பொறுப்பை கொடுத்திருந்தேன்.

    அவரவர்கள் எடுத்துக்கொள்ளும் முறையில் தான் இருக்கிறது. அப்படி தான் நான் எடுத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா நிறைய இதுபோன்று சந்தித்திருக்கிறார்.

    என்னை பொறுத்த வரைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில பேர் மாற்று எண்ணத்திற்கு சென்று விடுவார்கள். இதனை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

    ஜெயலலிதா வேண்டாம் என்று சொன்ன ஆர்.எம்.வீரப்பனாக இருக்கட்டும். எஸ்.டி.சோமசுந்தரமாக இருக்கட்டும், தலைவர் இருக்கின்ற காலத்தில் இருந்தே ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் இருந்தால் கூட பிளவுபட்ட கழகம் ஒன்றாக இணைந்த பிறகு, ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான காங்கேயத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு விட்டு கொடுத்தார்கள். அவரையும் அமைச்சராக்கினோம். ஆகையால் ஒரு கட்சி என்று இருந்தால் இதுபோன்றெல்லாம் இருக்கும்.

    பொதுமக்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. 39 ஆண்டு காலம் நாங்கள் அரசியலில் பயணம் செய்திருக்கிறோம். தமிழகத்தில் நாங்கள் போகாத இடமில்லை. எங்கள் வண்டியில் டயர் படாத இடமில்லை. அந்தளவுக்கு நாங்கள் குக்கிராமங்கள் எல்லாம் சென்றிருக்கிறோம். அந்த மக்களை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பொதுமக்களுக்காகவே நான் வந்தாக வேண்டும் என்ற முயற்சியில் தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

    என்னை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தான் 2024 பாராளுமன்றத் தேர்தலை சந்திப்போம். ஒன்றிணைந்தால் தான் தி.மு.க.வை வேரோடு எடுக்க முடியும்.

    தி.மு.க. மாதிரி எங்கள் தொண்டர்கள் யாரும் இப்படி இருக்கமாட்டார்கள். ஜெயலலிதா கட்சியை மிகவும் கட்டுப்பாடாக வைத்திருந்தார்கள். கட்சியினர் எப்போதும் பொதுமக்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். தி.மு.க.வினரிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. 2026-ல் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வால் நிச்சயம் ஆட்சிக்கு வரும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

    இவ்வாறு சசிகலா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசிய பின்னர்தான் டி.டி.வி.தினகரனை சென்று சந்தித்தனர்.
    • சென்னை வந்ததும் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசுவார்கள்.

    சென்னை:

    பிளவுப்பட்டிருந்த அ.தி.மு.க.வில் இரட்டை இலையும், தலைமை கழகமும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்று விட்டதால் பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் இ.பி.எஸ். பக்கம் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிகம் பேர் அவரிடம் உள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம் பக்கம் குறிப்பிட்ட சிலர் தான் உள்ளனர். ஆனாலும் அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டு வர கோர்ட்டு தீர்ப்பை எதிர்நோக்கி ஓ.பன்னீர்செல்வம் காத்திருக்கிறார்.

    அதுமட்டுமின்றி பிரிந்து கிடக்கிற அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு உள்ளார்.

    அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்று சந்தித்து பேசினார்கள்.

    இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் செல்லவில்லை.

    இதுபற்றி ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பிரிந்து கிடக்கிற அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசி உள்ளனர்.

    வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசிய பின்னர்தான் டி.டி.வி.தினகரனை சென்று சந்தித்தனர்.

    அடுத்தகட்டமாக சசிகலாவையும் சந்தித்து பேசுவார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சை முடிந்து நேற்று பெரியகுளம் வந்தார். மீண்டும் கேரளா சென்று 4 நாள் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

    அதன்பிறகு சென்னை வந்ததும் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசுவார்கள். விரைவில் இந்த சந்திப்பு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    • வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிந்து 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் சிறையில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோருக்கு தனி சமையலறை, சொகுசு படுக்கைகள், பார்வையாளர்கள் சந்திக்க சிறப்பு வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.

    அப்போது மத்திய சிறைப் பாதுகாப்புப் பணியில் இருந்த கர்நாடக மாநிலத் தொழில் பாதுகாப்புப் படையில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கஜராஜா, மத்திய சிறை உதவிக் கண்காணிப்பாளர் அனிதா மற்றும் தலைமைக் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது தனித்தனியாக வழக்குத் தொடர கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.

    இதை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.

    • ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான்.
    • அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவளரான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசி இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார்.

    ஆனால் நான், பிரபாகரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்திப்பதால் செல்லவில்லை.

    ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான். இதுதான் உண்மையான தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக தான் அவர் பாடுபட்டு வருகிறார். மேலும் டி.டி.வி.தினகரனை சந்தித்து இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளார்.

    அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காக தான் ஓ.பி.எஸ் பாடுபட்டு வருகிறார்.

    திருச்சி மாநாட்டை போல் விரைவில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். அதில் சசிகலா பங்கேற்க ஓ.பி.எஸ் அழைப்பு விடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீய சக்திகளோடு சேர்ந்து கொண்டு கருணாநிதிக்கு புகழ் பாடுகிறார்.
    • தர்ம யுத்தம் தொடங்கியதே டி.டி.வி. தினகரனுக்கு எதிராக தான் என்று சொல்லிவிட்டு தற்போது அவரை சந்தித்து உள்ளார்.

    சென்னை:

    சென்னையில் இன்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் தீய சக்திகளோடு சேர்ந்து கொண்டு கருணாநிதிக்கு புகழ் பாடுகிறார். மகனை மு.க.ஸ்டாலினுடன் சந்திக்க வைத்து தி.மு.க. அரசை பாராட்ட வைக்கிறார்.

    அவரது இந்த நிலைபாட்டினை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவரை அ.தி.மு.க. தொண்டர்கள் மன்னிக்கவே மாட்டார்கள். அவருக்கு மன்னிப்பே கிடையாது.

    சசிகலா குடும்பத்துக்கு எதிராக தான் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். தர்ம யுத்தம் தொடங்கியதே டி.டி.வி. தினகரனுக்கு எதிராக தான் என்று சொல்லிவிட்டு தற்போது அவரை சந்தித்து உள்ளார்.

    அவர் ஒரு அமாவாசை. இவர் ஒரு அமாவாசை. 2 அமாவாசையும் ஒன்று சேர்ந்து உள்ளன. ஒரு அமா வாசையையே தாங்க முடியாது. இப்போது 2 அமாவாசைகளும் ஒன்று சேர்ந்து உள்ளனர்.

    ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் இணைந்ததால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    சசிகலாவை ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என்று அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அவரை சின்னம்மா என்று அழைத்து வருகிறார். எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வுக்குள் ஓ.பன்னீர்செல்வம் வர முடியாது.

    ஓ.பி.எஸ்.சுடன் உள்ள மற்ற நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். ஜே.சி.டி. பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிருப்தியுடன் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

    டி.டி.வி. தினகரன் சொல்வதை எல்லாம் நகைச்சுவையாகத்தான் அனைவரும் எடுத்துக்கொள்வார்கள். ஓ.பி.எஸ்.-டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. சேர்த்துக் கொள்ளாது. அவர்களை பா.ஜ.க. சேர்த்துக்கொண்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×