என் மலர்
நீங்கள் தேடியது "slug 99375"
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இது வரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இன்று தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் விஜயராகவன் ஆகியோர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
சூலூர் தொகுதியில் வருகிற 1-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்கிறார். தலைவர்கள் பிரசாரத்திற்கு பின்னர் தான் சூலூர் தொகுதி தேர்தல் களை கட்டும்.
நாளை மறுநாள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பிரசாரம் செய்ய உள்ளார். சூலூர் தொகுதியில் 1-ந் தேதிக்கு பின்னர் தான் பிரசாரம் சூடுபிடிக்கும். அ.தி.மு.க.மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சூலூரில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.
சூலூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிவிட்டது. மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. ஆனால் சூலூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சூலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளது.
சூலூர் தொகுதியில் 9 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் வாகன சோதனை நடைபெற்றது.
சூலூர் பகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். #TNAssemblyByElection #TNElections2019
கோவை:
கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் எடுத்து செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடத்தை விதிமீறல் புகார்களை பொதுமக்கள் 1800 425 4757 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.
மேலும், சூலூர் தொகுதியில் பணி வினியோகத்தை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தொகுதியில் உள்ள பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தவிர கூடுதலாக 9 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடை பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜா மணி கூறினார். #Election

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்களை ரூ.25,000-ஐ செலுத்தி பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #ADMK #EPS #OPS
தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.
இதில் 18 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆர்வமுடன் அதிக அளவில் வந்து வாக்களித்து இருக்கிறார்கள்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

இன்றைக்கு அம்மா அரசு சிறப்பாக பணியாற்றிய காரணத்தினாலே சேலம் தொகுதியில் கூடுதலான வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.
கே:- ஓட்டுப்பதிவின் போது போதிய அளவில் பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளதே?
ப:- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டப்படிதான் நடக்க வேண்டும். ஏற்கனவே என்னென்ன வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து உள்ளதோ, அந்த வழித்தடங்களில் பஸ்கள் வழக்கம் போல் சென்று கொண்டு தான் இருக்கின்றன.
தேர்தல் நடத்தை விதி காரணமாக உடனடியாக கூடுதலாக பஸ்களை இயக்க இயலாது. இது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் அரசாங்கம் முழுவதுமே சென்று விடுகிறது. நிறைய இடங்களில் கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கும் விஷயத்தில் தேர்தல் நடத்தை விதி குறுக்கிட்டதால் இதில் அமைச்சர்களும் தலையிட முடியாது, மத்தியிலும் யாரும் தலையிட முடியாது. அதிகாரிகள் மட்டத்தில் தான் இதை செயல்படுத்த முடியும்.
தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் முக்கிய நகரங்களில் இருந்து அதிகமான பேர் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிட்டது. இந்த சூழ்நிலையில்தான் இடர்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. விரைவில் இது சரி செய்யப்பட்டு விடும்.
கே:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வருகின்ற தேர்தலில் தொடருமா?
ப:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடருவதற்கு முழு வாய்ப்பு இருக்கிறது.
கே:- சேலம் மாவட்டத்தில் நேற்று வீசிய சூறைக்காற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
ப:- சூறை காற்றால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பிறகு தான் தெரியும். கோடை மழை என்பதால் இதை பற்றி உறுதியாக பேச முடியாது.
நாளை தலைமை செயலகம் சென்றபிறகு, நான் இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்வேன். பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #Edappadipalaniswami #ADMK
அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 4 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பொறுப்பாளர்களாக- துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்.
திருப்பரங்குன்றம் கிழக்கு- மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.,
மேற்கு- தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம்.
தெற்கு- விருதுநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,
வடக்கு- மதுரை மாநகர மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி.
தெற்கு பகுதி-சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ.
அவனியாபுரம் கிழக்கு பகுதி- சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்ஏ.
அவனியாபுரம் மேற்கு பகுதி- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ.
மேலும் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகர், ஜெ.அன்பழகன், கே.எஸ்.மஸ்தான், ஆண்டி அம்பலம், இன்பசேகரன், ஈஸ்வரன், வசந்தம் கார்த்திகேயன், கோவி.செழியன் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன், முத்துராமலிங்கம், ஆவடி சா.மு.நாசர், நிவேதா முருகன்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, கணேசன், மனோ.தங்கராஜ், எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், மு.பெ.கிரி, இ.கருணாநிதி, கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அப்துல் வகாப், பத்மநாபன்.
அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள்- விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.
க.பரமத்தி ஒன்றியம்- முத்துசாமி, கரூர் ஒன்றியம்- டி.எம்.செல்வகணபதி, அரவக்குறிச்சி ஒன்றியம்- சக்கரபாணி எம்.எல்.ஏ.
மேலும் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காந்தி, பெரியண்ணன், சுந்தர், மாதவரம் சுதர்சனம், எழிலரசன், ராமர், சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் காந்திசெல்வன், மூர்த்தி, அங்கயற்கண்ணி, பி.தியாகராஜன், சிவசங்கர்.
சூலூர் தொகுதி பொறுப்பாளர்கள் - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்.
சுல்தான்பேட்டை ஒன்றியம்- தா.மோ.அன்பர சன் எம்.எல்.ஏ., சூலூர் தெற்கு ஒன்றியம்- ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சூலூர் வடக்கு ஒன்றியம்- ஆ.ராசா.
மேலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், கார்த்திக், தடங்கம் சுப்பிரமணி, செங்குட்டுவன், பிரகாஷ், ஜெயராமகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, கார்த்திகேயன், நல்லதம்பி, முபாரக், ராமச்சந்திரன், செல்வராஜ், நல்லசிவம் மற்றும் சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, பத்மநாபன், செல்ல பாண்டியன், சிவானந்தம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNBypolls #DMK
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடைபெறுவதாகவும், காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். கோவையில் 11.20 சதவீதம், ஈரோட்டில் 1.32 சதவீதம், கரூரில் 10.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறினார். #TNElections2019 #VoterTurnout
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி விவரம்:-
கேள்வி:- உங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது.
பதில்:- மோடி மற்றும் அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை காண முடிந்தது. மக்கள் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டளிக்க தயாராகி விட்டனர். தமிழகம் புதுவை உள்பட அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
கே:- ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் பாரதிய ஜனதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா?
ப:- இந்த தேர்தலில் பிராந்திய கட்சிகள் முக்கிய சக்தியாக இருக்கும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் நாட்டின் அனைத்து மாநில மக்களிடமும் உள்ளது. ஏன் என்றால் மத்திய அரசால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வோம். மத சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம்.
கே:- பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தெலுங்கானா, ராஷ்டீரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற 3-வது அணி கட்சிகள் தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தி.மு.க.வின் நிலைபாடு எப்படி இருக்கும்?
ப:- பாசிச பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்திவிட்டு ராகுல் காந்தி தலைமையில் அரசு அமைப்பது என்பதே எங்களது ஒரே குறிக்கோள். தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இதர கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.
கே:- 22 தொகுதி இடைத்தேர்தலும் நடப்பதால் மாநில அரசை கவிழ்க்க முடியும் என்று கருதுகிறீர்களா?

கே:- கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து உங்களுக்கு தேவையான மெஜாரிட்டி கிடைத்தால் நீங்கள் ஆட்சி அமைப்பீர்களா? அல்லது சட்டசபையை கலைக்க சொல்வீர்களா?
ப:- கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி முடிவு எடுப்போம். மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.
கே:- அ.தி.மு.க. அரசு கவிழும் என்று நீங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது கூறினீர்கள். எதை வைத்து நீங்கள் இப்படி சொன்னீர்கள்?
ப:- எடப்பாடி அரசு மைனாரிட்டியாக உள்ளது. அனைத்து அரசியல் சாசன விதிகளும் மீறப்பட்டு மத்திய அரசின் உதவியால் இந்த அரசு நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மத்தியில் இந்த தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
கே:- பிரசாரத்தின் போது உங்கள் தந்தை இல்லாத நிலையை எப்படி உணர்ந்தீர்கள்?
ப:- அவர் இல்லாதது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவரை தந்தையாக பார்த்ததை விட தலைவராகத் தான் அதிகமாக பார்த்தேன். அவர் ‘‘உடன்பிறப்பே’’என்று 60 ஆண்டுகளாக அழைத்த அந்த காந்தகுரல் இல்லாதது மக்களையும், தொண்டர்களையும் வேதனை அடைய செய்யும் ஒன்றாக இருந்தது. அவருடைய நுட்பங்களையும், வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். நான் அனைத்து அரசியல் பாடங்களையும் அவரிடம் இருந்து கற்று இருக்கிறேன். அவருடைய காலடி தடத்தை தொடர்கிறோம். அவர் இப்போது இருந்திருந்தால் என்னை வழிநடத்தி இருப்பார்.
கே:- தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பலவகை கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருக்கிறீர்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது என்று வைத்து கொள்வோம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை இன்றைய நிதி நிலையில் நிறைவேற்ற முடியுமா?
ப:- நிச்சயமாக நிறைவேற்ற முடியும். 2006-ல் தி.மு.க. அரசு ஏற்பட்ட போது அன்றைய அ.தி.மு.க. அரசு கருவூலத்தை முற்றிலும் காலியாக்கி விட்டு சென்றிருந்தது. ஆனாலும் தலைவர் கருணாநிதி பதவி ஏற்றதும் ரூ. 7,000 கோடி விவசாய கடனை ரத்து செய்து முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.
இதனால் மாநில நிதி நிலைமை மோசமாகும் என்று விமர்சித்தனர். ஆனால் தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் வளத்தை பெருக்கினார். மத்திய அரசும் உதவி செய்ததால் பற்றாக்குறை மிகவும் குறைக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டு மத்திய ஆட்சியில் அதானி, அம்பானி, அமித்ஷா மகன் போன்ற சில தொழில் அதிபர்களுக்கு தான் மத்திய அரசு உதவி இருக்கின்றது. மத்திய அரசின் தவறான கொள்கைகள் பண மதிப்பிழப்பு திட்டம் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிதி நிலைமைகளை சமாளிக்க நாங்கள் சிறந்த கொள்கைகளை வைத்து உள்ளோம். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.
கே:- தினகரன் மற்றும் அவரது கட்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
ப:- ஜனநாயகத்தில் சில கட்சிகள் உதயமாகும் சில கட்சிகள் காணாமல் போகும். இந்த கட்சியை பொறுத்தவரை பங்காளி சண்டையாகவே பார்க்கிறேன். இந்த சண்டையில் யார் சக்தி படைத்தவர்? யார் வீழ்ச்சி அடைவார் என்பது மே 23-ந் தேதி தெரியவரும்.
கே:- உங்கள் மகன் உதயநிதி இந்த தேர்தலில் நட்சத்திர பிரசாரமாக திகழ்ந்தாரே? அவருக்கு கட்சியில் ஏதேனும் முக்கிய பதவி வழங்குவீர்களா?
ப:- அவர் மீது ஊடகங்கள் அன்பு காட்டி காட்சி படுத்தியதற்கு நன்றி.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #TNBypoll #DMK #MKStalin

பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிக்கு நாளை மறுநாள் (18-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியின் பிரசாரம் ஓய்கிறது. அதன்பிறகு யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு பிரசாரம் செய்யலாமா? என்று அரசியல் கட்சியினர் தேர்தல் கமிஷனில் கேட்டிருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 4 தொகுதி மக்களும் ஓட்டுப்போட உள்ளதால் இந்த 4 தொகுதிகளிலும் இப்போது பிரசாரம் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளிலும் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிப்படி இன்று மாலை 6 மணியுடன் இங்கு பிரசாரம் முடிகிறது.
எனவே இடைத்தேர்தலை காரணம் காட்டி இங்கு பிரசாரம் செய்ய முடியாது. 4 சட்டசபை தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியில் இருந்து வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்யக் கூடாது. அதன்பிறகு இந்த 4 தொகுதிகளிலும் தொடர்ந்து பிரசாரம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #Assemblybypoll
