என் மலர்
நீங்கள் தேடியது "slug 99899"
- தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், தன்னார்வலர்கள், தொழில் அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்றுநோய் மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி ரூ.5 கோடி மதிப்பிலும், 38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், ஒரு லினியர் ஆக்ஸிலரேட்டர் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், தன்னார்வலர்கள், அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் 33 சதவீதமும் திரட்டி ரூ.60 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக மருத்துவ உபகரணங்களை வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நமது தொகையை செலுத்தி அரசின் பங்குத்தொகையையும் செலுத்தி, உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் மொத்த தொகையையும் செலுத்தி மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பாக இதுவரை ரூ.4½ கோடி நிதி வந்துள்ளது. மீதமுள்ள நிதியை திரட்ட அனைத்து தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு நிதியை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேயர் தினேஷ்குமார் பேசும்போது, புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும். அவற்றை பெற்று முதல்கட்டமாக கட்டிட பணிகளை தொடங்கி விட்டால் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து நிதி அளிப்பார்கள். அதனால் கட்டிட பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றார்.கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ரூ.10 லட்சம், மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் காசோலைகளை வழங்கினார்கள். அனைத்து ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.10 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்று அதில் மாற்றுத்திறனாளிளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் இளங்குமரன், திருப்பூர் பிரிண்டிங் அசோசியேசன் தலைவர் ஸ்ரீகாந்த், சைமா சங்க பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் நாகேஷ், பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி, நிட்மா சங்க இணை செயலாளர் ராமகிருஷ்ணன், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், அரிமா சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.
- கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார்.
மங்கலம் :
கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஜவுளி தொழில் அமைப்புகள் ,சைமா,மற்றும் பல்வேறு வர்த்தக அமைப்பினர் சார்பில் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைககளுக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .
விழாவிற்கு தலைமை வகித்து பேசிய இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ,அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் முயற்சியால் ஜவுளித்துறையில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செயலாளர் இரா.வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன்,அமைப்புச்செயலாளர் பா. கந்தவேல், தலைமை ஆலோசகர்வி.டி.கருணாநிதி,தொழில்நுட்ப ஆலோசகர் ஆர். சிவலிங்கம், பல்லடம் விசைத்தறி சங்க துணைச் செயலாளர் பாலாஜி, கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க செயலாளர் செல்வகுமார்,மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, மங்கலம் விசைத்தறி சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர். கோபால் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளர் வாணி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மதுமிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்சீனிவாசன், ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பேசியதாவது:-
மழை காலம் தொடங்க இருப்பதால் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் வசதி தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முழு கொள்ளளவு தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கொடிவேரி மற்றும் அவினாசி -அத்திக்கடவு திட்டத்தில் கூடிய விரைவில் நேரடியாக ஆய்வு செய்து விடுபட்ட பணிகள் சரி செய்யப்படவுள்ளது. திட்டங்கள் முழுமையாக பயனடையும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிறுவணிகக்கடன்களும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் முத்ரா கடனும், 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடன்களும் என மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஆய்வுக்கூட்டத்தில் ஊத்துக்குளி தாசில்தார் சைலஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத், ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி மற்றும் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராசுகுட்டி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அமைதியான பூமியை வடிவமைக்க தியானம் மிக அவசியம்.
- அடக்கப்படாத மனம் என்றைக்கும் நமக்கு விரோதிதான்.
பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சேகர்பாபு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது:-
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாக இருந்தாலும் சரி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாக இருந்தாலும் சரி, பிரம்ம குமாரிகள் ராக்கி கயிறு கட்ட வந்தால் முதலில் அவர்களை வரச் சொல்லுங்கள் என்று சொல்வார்கள். ஒட்டுமொத்தமாக உங்களின் எண்ணங்கள் என்பது அமைதியான ஒரு மனிதம் வேண்டும், எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான். எங்கள் இயக்கத்தின் நிறுவனர் அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்னார்.

மனஅழுத்தம் இல்லாத அமைதியான பூமியை வடிவமைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு தியானம் மிக அவசியம். நாங்களும் கல்வி நிலையங்களில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்களை வடிவமைத்து கொண்டு இருக்கிறோம். அடக்கப்பட்ட மனம்தான் நமக்கு நண்பனாக இருப்பான்.
அடக்கப்படாத மனம் என்றைக்கும் நமக்கு விரோதிதான் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். எங்களுடைய திராவிட மாடல் புத்தகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது இதுதான். நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
- 5-வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்
நெற்குப்பை
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் பெரியகருப்பன் 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து திருப்பத்தூர் அண்ணா சாலையில் ஒன்றிய, பேரூர் சார்பில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிய தலைவர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு ஊரகத் வளர்ச்சி துறையை அகில இந்திய அளவில் தமிழகம் 3-வது இடத்தில் வருவதற்கு சிறப்பாக செயல்பட்டதற்காக அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் விழா நடைபெற்றது.
- வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம், வெள்ளகோவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு உத்தமபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 101 மிதிவண்டிகளும், வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சேடன்குட்டை பழனிச்சாமி, கவிதா, திமுக ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், நகரச் செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், ஒன்றிய அவைத் தலைவர் தண்டபாணி. சிவக்குமார். அன்பரசன்.ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், பள்ளி தலைமையாசிரியர்கள் குணசேகரன், மனோன்மணி உட்பட நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
- கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில்அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது.
உறுப்பினர் செயலர்- கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்கா ணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் பணியாகும்.
இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்ட ங்களான தூய்மை பாரத இயக்கம் - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம்- பேரூராட்சிகள், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம், பிரதமரின் உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்க ளின் மூலம் செயல்படுத்த ப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.
மேலும் மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு தேவை யான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,
- கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
- தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார்.
காங்கயம் :
காங்கயம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.காங்கயம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
கூட்டத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், நகராட்சி நிர்வாகத்துறை செயற்பொறியாளர் பாலச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சார்லஸ் கென்னடி, காங்கயம் நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையாளர் வெங்கடேஷ்வரன், காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தி.மு.க. கவுன்சிலர் மணிவண்ண்ன் , தி.மு.க. நகர துணை செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
- பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
குடிமங்கலம்:
உடுமலையில் இருந்து தடம் எண் 22 டவுன் பஸ் நேற்று மாலை 4.30 மணிக்கு ஆமந்தகடவு அம்மா பட்டிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை டிரைவர் சதீஷ்குமார் (வயது 45) என்பவர் ஓட்டினார்.
அந்த பஸ் குடிமங்கலம் அருகே சனுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக பஸ்வை டிரைவர் திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்பாராத விதமாக உப்பாறு ஓடையில் கவிழ்ந்தது. பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சின் ஒரு பக்கம் ஜன்னல் பகுதி தரையில் சிக்கிக்கொண்டது. இதனால் பஸ்சில் சிக்கிய மாணவ-மாணவிகளும், பயணிகளும் அபயக்குரல் எழுப்பினர். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி சென்று காயம் அடைந்த தேவிகா (வயது 55), விந்தியா (21), சரஸ்வதி (53), முத்தம்மாள் (65), மகேஸ்வரி (52), வாசுகி (17), அபிநயா (16), சஞ்சய் (16), தனலட்சுமி (42), கலைச்செல்வி (16), பிரியங்கா (16), வசுந்தரா (16), வித்யா விகாசினி (15) உள்பட 41 பயணிகளை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடாசலம் (வயது45) மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மட்டும் 25 மாணவ-மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் காயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று காலை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- மகளிரை, நடத்துநர் ஓட்டுநர்கள் அதிக மரியாதையுடன் நடத்த வலியுறுத்தல்.
- பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அமைச்சர் அறிவுரை
அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் கட்டணமில்லா மகளிர் பயண திட்டத்தின் மூலம் 173 கோடி மகளிர் பயணம் மேற் கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை. ஓட்டுநர், நடத்துநர்கள் இத்திட்டத்தை மேலும் சிறப்பிக்க மகளிரை அதிக மரியாதையுடன் நடத்த வேண்டும்.

மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பேருந்து பற்றாக்குறை என்ற நிலை ஏற்படா வண்ணம், பள்ளி கல்வித்துறையிடம் கலந்தாலோசித்து பேருந்துகளை இயக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும் நிலை உள்ளதால் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, பயணிகளுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படா வண்ணம் இயக்க வேண்டும். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட வாரியாக பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுடன் Whatsapp Group-ஐ ஏற்படுத்த வேண்டும். நவ திருப்பதி போன்ற சுற்றுலா தொகுப்பை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் எல்லையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தாராபுரம் அரசுமருத்துவமனைக்கு ஒரு 102 ஆம்புலன்ஸ் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
- பிரசவித்த தாய்மார்கள் வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர்.
தாராபுரம்:
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் 102 ஆம்புலன்ஸ் தாய் சேய் நல இலவச சேவையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-
பிரசவ சிகிச்சை முடிந்து தாய்மார்கள் வீடு திரும்புவதற்காக தாய் சேய் நல சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஒரு 102 ஆம்புலன்ஸ் தமிழக அரசால் வழங்கப்பட்டது. மருத்துவமனையில் இந்த ஆம்புலன்ஸ் பயன்பாட்டில் இருக்கும். அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களையும், குழந்தைகளையும் கொண்டு விடவும் மறு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போட வரும் தாய் சேய் ஆகியோரை மருத்துவமனையில் இருந்து இல்லங்களுக்கு அழைத்து செல்வதற்கும் இலவச வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த வாகனத்தை பயன்படுத்த 102 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும்.அப்போது அரசு மருத்துவமனையில் இருந்து இந்த வாகனம் அனுப்பி வைக்கப்படும். பிரசவித்த தாய்மார்கள் வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர். இந்த வாகனத்தில் குழந்தைகளுக்கான ஒரு தொட்டில் தாய் உறவினர்கள் அமர்ந்து செல்லும் வகையில் 7 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசவித்த தாய்மார்களை இல்லங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு மட்டுமின்றி பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அழைத்து சென்று வரவும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:
இந்து சமய அறநிலையத்துறை உருவான ஆண்டு முதல் எந்த ஆட்சியிலும் செய்ய தோன்றாத வகையில், பல்வேறு புதுப்புது திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்தி வருகிறோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் என முக்கிய கோயில்களில் பெருந்திட்ட (மாஸ்டர் பிளான்) வரைவை ஏற்படுத்தி, அத்திட்ட அறிக்கையின்படி பக்தர்களின் அடிப்படை தேவைகள், கோயில்களை பழைமை மாறாமல் பாதுகாக்க வேண்டிய பணிகள் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

வடமாநிலங்களில்தான் 100 கோடி, 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கேள்விப்பட்டிருப்போம். முதன் முதலில் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பங்கேற்புடன் ரூபாய் 300 கோடி செலவிலே இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மேம்பாட்டுப் பணிகளும், ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வருகின்ற 28.09.2022 அன்று முதலமைச்சர், தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த பெருந்திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார். கோயிலுக்கு நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாக பாதை அமைக்கின்ற பணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் உடன் கலந்தாய்வு செய்து அவரையும் நேரில் வர வைத்து அதற்குண்டான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
மேலும் கோயிலுக்குள் வருவதற்கு முன்பு கடலில் சென்று கை கால் கழுவிவது ஐதீகமாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு அப்படிப்பட்ட ஒரு நிலை கடினமாக இருப்பதை அறிந்து அதையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு உண்டான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வெகு விரைவில் மாற்றுத்திறனாளிகளும் கடல் நீரை தொட்டு வணங்குகின்ற ஒரு நல்ல சூழலையும் அதற்குண்டான முயற்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அனைத்து ஒப்புதல்களும் முறையாக பெறப்பட்டிருக்கின்றன. அன்னதான கூடம், மருத்துவ மையம், ஆழிக் கிணறுக்கு செல்லுகின்ற பாதைகள், கடலில் குளியலுக்கு பிறகு உடைமாற்றும் அறைகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளாக மேற்கொள்ளப்பட உள்ளன.
எந்தவிதமான சிறு குற்றச்சாட்டும் இல்லாமல் முழுமையாக வெளிப்படை தன்மையோடு இந்த திருப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். திருப்பணியால், கந்த சஷ்டி விழாவிற்கு எந்த இடையூறும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள கோயில் அலுவலர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள்.
இந்த பணிகள் முடிந்து சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கின்ற பொழுது இறை அன்பர்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் இந்த திருப்பணி ஒன்றிற்காகவே மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும், இவர் இருந்தால் தான் பல்வேறு திருக்கோயில்களின் திருப்பணிகளை நிறைவேற்றி தருவார் என்ற வகையில் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.