என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Smallpox"
திருவனந்தபுரம்:
பருவநிலை மாற்றத்தின் போது சில தொற்று நோய்கள் பரவுவது சகஜமான ஒன்று. ஆனால் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஜனவரி மாதத்தில் இருந்தே அடுத்தடுத்து ஒவ்வொரு நோயாக பரவுகிறது.
நோய் பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் ஏதாவது ஒரு நோய் பாதித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தொற்றக்கூடிய காய்ச்ச லால் 78, 718 பேரும், சளி தொல்லையால் 1,567 பேரும், சின்னம்மையால் 971 பேரும், டெங்கு காய்ச்சலால் 328 பேரும், மஞ்சள் காமாலையால் 294 பேரும், மலேரியாவால் 20 பேரும், எலி காய்ச்சலால் 70 பேரும், பன்றி காய்ச்சலால் 37 பேரும் பாதிக்கப்பட் டுள்ளனர்.
அது மட்டுமின்றி மேற்கு நைல் காய்ச்சலால் 9 பேரும், ஷிகெல்லா தொற்றால் 4 பேரும் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது தவிர தனியார் ஆஸ்பத்திரி களிலும் பல்வேறு தொற்று நோய் பாதிப்புகளுக்கு உள்ளான ஆயிரக் கணக்கான சிகிச்சை பெறுகின்றனர்.
இவ்வாறு தொற்று நோய்கள் அதிக அளவில் பரவுவதற்கு மாநிலத்தில் வழக்கத்தை விட அதிகமாக நிலவிய வெப்பம் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்ேபாது மழை காரணமாக தொற்று காய்ச்சலால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொற்றுநோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருப்பதால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற தொடங்க உள்ளது.
இது தொற்று நோய்கள் பரவலை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தொற்று நோய்கள் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், தண்ணீரை காய்ச்சி குடிக்கு மாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் பரவி வரும் தொற்று நோய்கள் உயிர் பலியையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 மாதங்களில் எலி காய்ச்சலுக்கு 39 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 16 பேர், ஹைபடைடிஸ் ஏ மற்றும் பி தொற்று பாதிப்புக்கு 16 பேர், சின்னமைக்கு 10 பேர், மலேரியாவுக்கு 3 பேர், தொற்றக்கூடிய காய்ச்சலுக்கு 3 பேர் என 91 பேர் இறந்துள்ளனர். இது மக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவில் அதிகரித்து வரும் தொற்று நோய்களில் பல எளிதில் பரவக்கூடியது என்பதால், தமிழகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் தமிழக சுகாதாரத்துறை கவனமாக இருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.
- கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார்.
உடுமலை:
உடுமலை கோட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.
அதில் பெரும் சவாலாக இருப்பது தொற்று நோய்களாகும்.அவற்றில் இலம்பி தோல் அலற்சி நோய் என்று அழைக்கக்கூடிய பெரியம்மை நோயை உடுமலை கோட்டத்தில் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவுரையின்படி பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 8- ந் தேதி முதல் தொடங்கி உள்ளது. கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்,
ஒவ்வொரு குக்கிராமங்கள் தோறும் கால்நடை மருத்துவர் குழுவினரால் முகாம் அமைத்து பெரியம்மை நோய் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ளது.கால்நடை வளர்ப்போர் முகாமினை பயன்படுத்தி கால்நடைகளை பெரியம்மை நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
பெரியமை நோய் வைரஸ் கிருமியினால் பரவும் நோயாகும்.இந்த நோய் கொசுக்கள்,உண்ணிகள், ஈக்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு மாட்டிலிருந்து மற்றொரு மாட்டிற்கு பரவக் கூடியதாகும். அதைத் தடுத்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசியே சிறந்த வழியாகும்.
உடுமலை கோட்டத்தில் ஜல்லிபட்டி, மடத்துக்குளம், குடிமங்கலம்,துங்காவி ஆகிய 4 பகுதிகளில் முகாம்கள் நடத்த ஏதுவாக 57 ஆயிரம் டோஸ் மருந்துகள் இறப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
- கால்நடை துறை சார்பில் தடுப்பூசி போட்டு வருகின்றனர்
- மருத்துவ முகாம் நடத்த வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தற்போது மழைக்காலம் என்பதால் ஈ, கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஈ, கொசுக்கள் கடிப்பதன் மூலம் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்படுகிறது.
காய்ச்சல், உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், சினையுற்ற மாடுகளுக்கு கருச்சிதைவு உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும்.
வேலூர் மாவட்டத்தில் இந்தநோய் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் மாடுகளுக்கு இந்நோய் பரவி வருகிறது. நோய் பாதித்த மாடுகளுக்கு தடுப்பூசி கால்நடை துறை சார்பில் போடப்பட்டு வருகிறது.
சத்துவாச்சாரி நேதாஜி நகர் மந்தைவெளி பகுதியில் மாடுகளுக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாடுகள் சுருண்டு விழுகிறது. இந்த பகுதியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தி, தடுப்பூசி போட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்