என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Smart Board"
- கயத்தாறு தாலுகா சாலைப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் கணினி போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாவட்ட கவுன்சில் பிரியா குருராஜ் தலைமை தாங்கி ஸ்மார்ட் போர்டு கல்வியை தொடங்கி வைத்தார்.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா அகிலாண்டபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த சாலைப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் போர்டு கல்வி கற்பிக்க மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கணினி போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கவுன்சில் பிரியா குருராஜ் தலைமை தாங்கி ஸ்மார்ட் போர்டு கல்வியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அணி துணை அமைப்பாளர் குருராஜ், பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் மந்திரமூர்த்தி, ஆசா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் முருகன், பள்ளிக்கல்வி மேலாண்மை குழு துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராணி வரவேற்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வார்டு கவுன்சிலர் மந்திரமூர்த்தி பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியர் தங்கம்மாள் நன்றி கூறினார்.
- கரும்பு சாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதேபோல் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துக்குளி அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட கரும்பு சாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஸ்மார்ட் போர்டினை பள்ளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரி யர்கள், மேச்சேரி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மேச்சேரி ராஜா, பாமக வடக்கு ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகரன், ஒன்றிய தலைவர் விஜயகுமார், பொருளாளர் ஜெயந்தி பிரகாஷ், வன்னியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கோபால், இளைஞர் அணி மல்லிகார்ஜுன், பரமசிவம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துக்குளி அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் எம்.சி. மாரியப்பன், பாமக ஒன்றிய செயலாளர் சசிகுமார், கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்