என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "smiriti irani"
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டது.
குறிப்பாக இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக நீண்ட காலம் இருந்த அமேதி தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்வானார். ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதிஇரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயம் போட்டியிடுவார் என உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் கூறியிருந்தார். அதே நேரம் ஸ்மிருதிஇரானியும் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அமேதி தொகுதி மக்களுக்கு ஸ்மிருதிஇரானியும், ராகுல்காந்தியும் போட்டி போட்டு தீபாவளி பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். ஸ்மிருதிஇரானி அமேதி தொகுதி மக்களுக்கு செல்போன்கள், சுவர் கடிகாரங்கள், சேலைகள் வழங்கியுள்ளார்.
இதேபோல ராகுல் காந்தி தனது பங்கிற்கு அமேதி தொகுதி மக்களுக்காக பேண்ட், சட்டைகள் மற்றும் இனிப்புகள் என பரிசுகளை வழங்கியுள்ளார்.
ஸ்மிருதிஇரானி தரப்பில் தீபாவளி பரிசு வழங்கியதை உறுதிபடுத்திய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கோவிந்த்சவுகான் கூறுகையில், ஸ்மிருதி இரானியின் பரிசுகள் சமூகத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மற்றும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசுகள் தேவைப்படுபவர்களை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றார்.
இதேபோல பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஸ்மிருதிக்கு வாக்களித்து பரிசுகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
- அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ள ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தோண்டர்கள் போஒராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் காந்தி குடும்பத்தினர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் ஆர்வம் காட்டுவது ஏன் என ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
புது டெல்லி:
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைக்கேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அந்த அலுவலகத்தின் முன்பு ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் குவிந்தனர். ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், திக்விஜய சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றார் இதனையடுத்து தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்குச் சென்றார்.
இதையடுத்து ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை மந்திரி ஸ்மிருதி இராணி கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி இரானி கூறியதாவது:-
நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாகவே ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார். இது தனிப்பட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையெல்லாம் இல்லை. காங்கிரஸ் தலைவா்களின் ஊழல் அம்பலமாகி விட்டதால், தற்போது அமலாக்கத்துறைக்கு அழுத்தம் கொடுக்க தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது காந்தி குடும்பத்தின் ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகும். இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் காந்தி குடும்பத்தினர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் ஆர்வம் காட்டுவது ஏன் என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிரிதி இரானி களமிறங்கினார். தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.வாக்கு எண்ணிக்கை துவக்கம் முதலே ராகுல் காந்தி, ஸ்மிரிதி ஆகிய இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை போன்று செயல்பட்டோம். தொண்டர்களின் மிகச்சிறப்பான பணிகளால் வென்றுள்ளோம். கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த பாஜக தொண்டர்களின் குடும்பங்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், வரும் 12, 19 ஆகிய தேதிகளில் மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஆனால் கபடதாரிகளான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் மகா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிரதமரை குறை கூறுவதை தவிர வேரு எதையும் செய்வதில்லை. ஆண்டு தோறும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் ராகுல் காந்திக்கு இந்தியாவின் கங்கை, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதாவது தேர்தலின்போது மட்டும் தான் தெரியும். அப்போது தான் வருகை தந்து தரிசனம் செய்வார்.
மேலும் காங்கிரஸ் கட்சியினர் அயோத்தியாவிற்கு வருவார்கள். ஆனால், ராமர் ஆலயங்களுக்கு சென்று ராமரை வணங்கமாட்டார்கள். ஓட்டு தான் அவர்களுக்கு முக்கியம். மக்களை ஓட்டு வங்கிகளாக தான் பயன்படுத்துகிறார்கள். வாரணாசி தொகுதியில் களத்தில் இறங்கி நேரடியாக போட்டியிட முடியவில்லை. மேலும் ராகுல் காந்தி, அமேதியையும் விடுத்து வயநாட்டிற்கு சென்று விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.
இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று அமேதி தொகுதியை அடைந்த ஸ்மிரிதி இரானி, உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை எனவும், அவரது சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.
இதில் ரூ.1.75 கோடி அசையும் சொத்துக்கள் ஆகும். இரானிக்கு ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன. ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கியிருக்கும் வீடுஆகியவற்றுடன் சேர்த்து ரூ.2.96 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்மிரிதி இரானியின் கணவர் ஜுபின் இரானியின் சொத்து மதிப்பில் ரூ.1.69கோடி அசையும் சொத்துக்கள் எனவும், ரூ.2.97கோடி அசையா சொத்துக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SmritiIrani
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்