search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snapchat"

    • செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
    • ஸ்மார்ட்போன் செயலியின் தயவோடு தான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    தற்போதைய இளைஞர்கள் எந்நேரமும் செல்போனில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஒவ்வொருத்தரின் செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

    இன்றைய இளம் பருவத்தினர், சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதை விட போன் மெசெஜ் மூலம் மற்றவர்களிடம் பேசுவதை விரும்புகிறார்கள். இதனாலேயே மொபைல் செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக், ஸ்னாப்சாட் போன்றவை அதிகம் பிரபலமாக உள்ளன.

    ஸ்மார்ட்போன் செயலியின் தயவோடு தான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் கிடைக்கின்றன.

    இதுபோன்று கிடைக்கும் செயலிகளை பெரும்பாலானோர் உபயோகித்து வருகின்றனர். இந்த நிலையில், மெசெஜிங் செயலியால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மகாராஷட்ராவில் உள்ள தானே மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி, அவருடைய தந்தை மொபைலில் ஸ்னாப்சாட் செயலியை தரவிறக்கம் செய்ய அனுமதிக்காததால் கோபம் அடைந்தார். இதையடுத்து சம்பவ நாளன்று குடும்பத்தில் அனைவரும் உறங்கியப்பின் அவளது பெட்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறுமி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொழில்நுட்ப வளர்ச்சி பல எல்லைகளை கடந்து வரும் சூழலில், அதன் மீது கொண்ட காதலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் துயரம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


    தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே இந்த 9152987821 எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.

    • ஸ்னாப்சாட் செயலியில் புது அம்சம் வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் தனது வலைதள பதிவில் தெரிவித்து இருக்கிறது.
    • இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனின் இரு கேமராக்களை பயன்படுத்தி பதிவிட முடியும்.

    ஸ்னாப்சாட் செயலியில் டூயல் கேமரா எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனின் ரியர் மற்றும் செல்பி என இரு கேமரா சென்சார்களையும் பயன்படுத்த முடியும்.

    புது அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் பல்வேறு பரிணாமங்களை ஸ்னாப்சாட்டில் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் அனைவரும் மொமண்டில் பங்கேற்க முடியும். டூயல் கேமரா அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் ஸ்னாப்சாட் செயலியை திறந்து கேமரா டூல்பாரில் உள்ள புதிய ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.


    இவ்வாறு செய்த பின் ஸ்னாப், ஸ்டோரிஸ் மற்றும் ஸ்பாட்லைட் வீடியோக்களை உருவாக்குவதற்கான ஆப்ஷனை பார்க்க முடியும். துவக்கத்தில் டூயல் கேமரா அம்சம் நான்கு லே-அவுட்கள் இடம்பெற்று இருக்கும். டூயல் கேமரா அம்சத்துடன் மற்ற ஸ்னாப்சாட் அம்சங்களும் இடம்பெற்று இருக்கும்.

    முதற்கட்டமாக இந்த அம்சம் ஸ்னாப்சாட் ஐஓஎஸ் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஐஒஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டு வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது.

    • ஸ்னாப்சாட் நிறுவனம் ஸ்னாப்சாட் பிளஸ் சேவையை முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.
    • இந்த சேவை பயனர்களுக்கு பிரத்யேக அம்சங்களை வழங்கி வருகிறது.

    ஸ்னாப்சாட் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்னாப்சாட் பிளஸ் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. ஏற்கனவே இந்த சேவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் ஸ்னாப்சாட் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 49 ஆகும். இந்த சேவையை கொண்டு பயனர்கள் விசேஷ அம்சங்கள் மற்றும் ஸ்னாப்சாட் சோதனை செய்து வரும் புதிய அம்சங்களையும் பயன்படுத்த முடியும்.

    ஸ்னாப்சாட் பிளஸ் சேவையை பயன்படுத்துவோர் ஆறு பிரத்யேக அம்சங்களை பெற முடியும். அந்த வகையில் பயனர்கள் ஆப் ஐகானை மாற்றிக் கொள்ளவும், எத்தனை பேர் ஸ்டோரிக்களை திரும்பி திரும்பி பார்க்கின்றனர் என்பதை டிராக் செய்ய முடியும்.

    ஸ்னாப்சாட் பிளஸ் பயனர்கள் நண்பர்களில் ஒருவரை தங்களின் ப்ரோஃபைலில் பெஸ்ட் பிரெண்ட் ஆக வைத்து கொள்ள முடியும். முன்னதாக ஸ்னாப்சாட் பிளஸ் சேவை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் மற்ற நாடுகளில் ஸ்னாப்சாட் பிளஸ் சேவை கட்டணம் 3.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 317 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    ஸ்னாப்சாட் செயலியில் டிக்டொக் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. #SnapChat



    ஸ்னாப்சாட் செயலியில் லென்ஸ் சேலஞ்சஸ் என்ற பெயரில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் மற்ற பயனர்களுடன் சவால்களில் பங்கேற்க முடியும்.

    புதிய அம்சத்தை பயன்படுத்துவோர் ஸ்னாப்களை உருவாக்க வேண்டும். இதற்கு ஸ்னாப்களில் பாடல்கள், நடனம், விடுமுறை அல்லது ஏதேனும் நிகழ்வை பயன்படுத்த வேண்டும். விடுமுறையொட்டிய நிகழ்வுக்கு, சவால் அம்சமாக ஜிவென் ஸ்டீஃபானியின் ஜிங்கிள் பெல் பாடலை உடன் சேர்ந்து பாட வேண்டும்.



    இந்த அம்சம் ஸ்னாப்சாட் மற்றும் லென்ஸ் க்ரியேட்டர்களின் கற்பனை, திறமை மற்றும் சுய வெளிப்பாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும் என ஸ்னாப்சாட் தெரிவித்துள்ளது. புதிய சேலஞ்சர் அம்சம் பயன்படுத்துவோர் லென்ஸ் ஸ்டூடியோவை பயன்படுத்துவார்கள் என ஸ்னாப்சாட் எதிர்பார்க்கிறது.

    லென்ஸ் சேலஞ்ச் அம்சத்தின் முதல் சவாலாக மறைந்து போகச் செய்வது இருந்தது. இந்த லென்ஸ் ஜை ட்ரூடிங்கர் மூலம் உருவாக்கப்பட்டது. இது பயனர்கள் இரண்டு புகைப்படங்களை சூப்பர்இம்போஸ் வகையில் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தினுள் இருக்கும் பொருள் மறைந்து போகும்.
    ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் செயலியில் புது அம்சத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 45 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதே அம்சத்தை சுமார் 18.8 கோடி ஸ்னாப்சாட் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். ஏ.ஆர். செல்ஃபி மாஸ்க், அனிமேஷன் ஜிஃப், பிட்மோஜி போன்ற வசதிகள் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதுதவிர இந்த ஆண்டின் இரண்டு மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் ஸ்னாப்சாட் பயனர்கல் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து இருக்கிறது. எனினும், ஸ்னாப்சாட் செயலியில் தானாக மறைந்துபோகும் சாட் வசதி வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை நிரந்தரமாக பதிவிடும் வசதி மட்டுமே வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டதும், அவற்றை அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே வேலை செய்யும். இன்ஸ்டாகிராம் செயலியில், நிரந்தரமாகவும், குறைந்த நேரத்திற்கு என புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும். டெக்ஸ்ட் பதிவுகள் நிரந்தரமானவை ஆகும்.

    இதேபோன்ற அம்சத்தை வாட்ஸ்அப் மிக எளிமையாக தனது செயலியில் வழங்க இருக்கிறது. இதற்கு பயனர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் போது தானாக குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மறைந்துபோகச் செய்ய டைமர் வசதியை சேர்க்க முடியும். வாட்ஸ்அப் செயலியில் தானாக அழிந்து போகும் ஸ்டேட்டஸ் வசதி விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாட்ஸ்அப்பில் எழுத்துக்கள் தானாக அழிந்து போகச் செய்யவோ அல்லது எவ்வளவு நேரம் தெரிய வேண்டும் என்பதை மிக எளிமையாக வழங்க முடியும் என கூறப்படுகிறது. இதுவரை இந்த அம்சம் வழங்கலாமா என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    ×