என் மலர்
நீங்கள் தேடியது "social media"
- வாலிபர் நேர்காணல் முடிந்து வெளியே சென்ற நிலையில், அவர் வேலைக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.
- இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நேர்காணலின் போது தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என பதிவிட்டனர்.
பட்டதாரிகள் பலருக்கும் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நேர்காணலின் போது இளைஞர் ஒருவர் தனக்கு நடந்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதில், அவர் வேலைவாய்ப்பு தேடி ஒரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு சென்றுள்ளார்.
அங்கு நிறுவன மேலாளர் அவரிடம் சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது வாலிபர் பதிலளித்து கொண்டிருந்த போது வெளியில் விமானம் பறக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே தன்னை மறந்த அவர் மேலாளரின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை நிறுத்திவிட்டு அருகே இருந்த கண்ணாடி சுவற்றின் வழியாக விமானம் பறப்பதை பார்த்தார். அதன் பின்னர் அந்த வாலிபர் நேர்காணல் முடிந்து வெளியே சென்ற நிலையில், அவர் வேலைக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.
அந்த வாலிபரின் உடல் மொழியும், தன்னம்பிக்கையும், எதிர்கால திட்டங்கள் பற்றி தெளிவின்மையும் தான் அவருக்கு வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்று நிறுவன மேலாளர் கூறினார் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நேர்காணலின் போது தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என பதிவிட்டனர்.
- இளம்பெண் அவருக்குப் பதிலளிக்கும்படியாக செய்யும் செயல்தான் வீடியோவை வைரலாக்கி இருக்கிறது.
- வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.
வாலிபர் ஒருவர், பூங்காவில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை கவர்வதற்காக சாகசம் செய்து சொதப்பும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், பூங்காவில் உள்ள கம்பியில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அப்போது அங்கு வரும் வாலிபர், அவரது மனதை கவர்வதற்காக அருகில் உள்ள மற்றொரு கம்பியில் தாவி நின்று, சறுக்குவதுபோல பாவனை செய்து, அப்படியே தலைகீழாக சுழன்று வந்து தரையில் நின்றபடி இளம்பெண்ணின் மனநிலையை நோட்டம் விடுகிறார்.
அப்போது அந்த இளம்பெண் அவருக்குப் பதிலளிக்கும்படியாக செய்யும் செயல்தான் வீடியோவை வைரலாக்கி இருக்கிறது. அந்த இளம்பெண், கம்பியில் தலைகீழாக பலமுறை சுழன்று சுழன்று சாகசம் செய்து அசர வைக்கிறார். இதைப் பார்க்கும் வாலிபர், இவர் எத்தனை முறை சுழல்வார் என்பதைப்போல தலையை சுழற்றி சுழற்றி... யப்பா தலை சுற்றுதப்பா... என்று அங்கிருந்து நகர்ந்து செல்வதுடன் வீடியோ முடிகிறது.
சாகசம் செய்து மனதை கவர முயன்ற வாலிபருக்கு, பதில் சாகசத்தால் வாயடைக்கச் செய்த இளம்பெண்ணின் செயலுக்கு வலைத்தளவாசிகள் பாராட்டு கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.
- வீட்டு செல்ல நாய், லேசாக சத்தம் எழுப்பியபடி குழந்தையை விளையாட அழைத்துவிட்டு ஓடுகிறது.
- குழந்தையும் நாயின் மொழியை புரிந்து கொண்டு எழுந்து செல்கிறது.
குழந்தையுடன், நாய் கண்ணாமூச்சி ஆடும் வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது. நடைபழகிய சுமார் ஒன்றரை வயது குழந்தை வீட்டில் தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்போது அவர்கள் வீட்டு செல்ல நாய், லேசாக சத்தம் எழுப்பியபடி குழந்தையை விளையாட அழைத்துவிட்டு ஓடுகிறது.
குழந்தையும் நாயின் மொழியை புரிந்து கொண்டு எழுந்து செல்கிறது. அப்போது நாய் ஒரு அறையின் வழியாகச் சென்று சுற்றி, மறுவழியாக வந்து விளையாடுகிறது. குழந்தை அந்த வழியில் சுற்றி வரும் முன்பாக எதிர்திசையிலும் ஓடி விளையாட்டு காட்டும் நாய், குழந்தையுடன் அருமையான கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி மகிழ்கிறது.
குழந்தையும் சந்தோஷமாக சிரித்தபடி அங்கும் இங்குமாக நடந்தபடி நாயுடன் விளையாடுகிறது. இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து வலைத்தளத்தில் வெளியிட, அந்த காட்சிகள் 6 நாட்களில் சுமார் 1 கோடியே 44 லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்துள்ளது.
- குழந்தையை அவர் தன் கைகளில் ஏந்தி பரமாரிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.
- அந்த பெண்மணிக்கும் அவருடைய மருமகளுக்கும் வயது வித்தியாசமே தெரியாத வகையில் அவர் காட்சியளிக்கிறார்.
உணவு பழக்கம், வேலைப்பளு மற்றும் பொருளாதாரநிலை முதலியவற்றால் ஒருவருடைய முகம் பொலிவை இழந்து இளம்வயதிலேயே வயதானவர்போல காட்சியளிக்கிறார்கள். ஆனால் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு பெண் ஒருவர் பாட்டியானாலும் இளமை ததும்ப காட்சி அளிக்கிறார்.
சீனாவின் சூசோ நகரை சேர்ந்த அந்த பெண் 1985-ல் பிறந்தவர். 39 வயதே ஆன இவருடைய மகனுக்கு திருமணமானது. தற்போது அவருடைய மருமகளுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை அவர் தன் கைகளில் ஏந்தி பரமாரிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. வீடியோவில் பேரக்குழந்தையை கைகளில் ஏந்தி பாட்டி பால் கொடுக்கிறார்.
பள்ளி மாணவிப்போல காணப்படும் அந்த பெண்மணிக்கும் அவருடைய மருமகளுக்கும் வயது வித்தியாசமே தெரியாத வகையில் அவர் காட்சியளிக்கிறார். பள்ளி மாணவிப்போல் உள்ளீர்கள், ''அழகிய கிழவி'' உள்ளிட்ட கருத்துகளை பதிவிட்டு இதனை வைரலாக்கி வருகிறார்கள்.
- கிட்டத்தட்ட மனிதனின் குணாதிசயங்களை ஒத்து இருக்கும் விலங்கு என்றால் அது குரங்குதான்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தே மனித இனம் உருவானது என்பார்கள் உயிரிலாளர்கள். மொழி தவிர கிட்டத்தட்ட மனிதனின் குணாதிசயங்களை ஒத்து இருக்கும் விலங்கு என்றால் அது குரங்குதான். புத்திசாலி விலங்கு என குரங்கு கூறப்படுவதற்கு வங்காளதேசத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்குள்ள மெஹர்பூரில் குரங்குகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது.
இந்தநிலையில் குரங்கு ஒன்றுக்கு கையில் அடிபட்டது. அப்போது அந்த குரங்கு அங்குள்ள மருந்துக்கடைக்கு தானாக சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர், குரங்குக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்தார். அங்கு கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் குரங்குக்கு உதவி செய்ய முற்பட்டனர். அப்போது அதன் கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து தடவி முதலுதவி சிகிச்சை அளித்தனர். குரங்கும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
- ஒரு சில வீடியோக்கள் மட்டும் மொழி, மாநிலம் கடந்து ரசிகர்களின் அன்பை பெறுகின்றன.
- இதுவரை லட்சக்கணக்கானோரின் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.
சமூகவலைத்தளங்களில் பலரும் நடனம் மற்றும் பாடல்களை பாடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். எனினும் எல்லா வீடியோக்களும் மக்களின் கவனம் பெறுவதில்லை. ஒரு சில வீடியோக்கள் மட்டும் மொழி, மாநிலம் கடந்து ரசிகர்களின் அன்பை பெறுகின்றன.
அந்தவகையில் ஒரு பெண் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பிரபல இந்தி பாடலான `உயி அம்மா' பாடலுக்கு சிறுமியுடன் சேர்ந்து அவர் நடனமாட அதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றினர்.
அதில் சேலை அணிந்து கொண்டு அவர் ஆடிய நடனம் பலரையும் ஈர்த்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கானோரின் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.
- வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.
- பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த வெள்ளம் ரத்தம்போல செந்நிறத்தில் பாய்ந்தது. இந்த தண்ணீர் கடலில் கலந்ததால் கடலும் சிவப்பாக மாறியது.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த பலரும் இது என்ன ரத்த மழையா? அல்லது கடவுளின் கோபமா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆனால் உண்மையில் இது அந்த பகுதியின் இயற்கை அதிசயம் ஆகும். அதாவது ஹோர்மோஸ் தீவில் உள்ள மண்ணில் அதிகளவு இரும்பு ஆக்சைடு இருப்பதால் இதுபோன்று ஏற்படுவதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இயற்கையின் இந்த அழகை காணவே அங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் எனவும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
- பயங்கரவாத அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது.
- பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு பொருளாதார தடைகளை விதிக்கிறது.
புதுடெல்லி :
டெல்லியில் முதன் முதலாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்பு குழுவின் சிறப்பு கூட்டம் 2 நாட்களாக நடந்து வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் 2-வது நாளான நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளில் புதிய மற்றும் வளர்ந்து வருகிற தொழில்நுட்பங்கள், மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள், மறைகுறையாக்கப்பட்ட தகவல் தொடர்பு சேவைகள், மெய்நிகர் நாணயங்கள் வரை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், உலகம் செயல்படுகிற விதத்தை மாற்றி உள்ளன. இவை பரந்த எதிர்காலத்துக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை பொருளாதார மற்றும் சமூக நன்மைகளின் வரிசையாக வழங்குகின்றன.
இந்த தொழில்நுட்பங்கள் அரசுகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.
சமீப காலங்களில் பயங்கரவாத குழுக்கள், அவர்களது சித்தாந்தத்தை ஏற்று பின்தொடர்கிறவர்கள் இந்த தொழில்நுட்பங்களை அணுகுவதன் மூலம் தங்கள் திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளனர்,
இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் சக்தி வாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன. அவற்றின் வாயிலாக அவர்கள் தங்கள் கொள்கை பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள்.
இன்றைக்கு அரசுகளுக்கு ஏற்கனவே உள்ள கவலைகளுடன் மற்றொரு கவலையாக புதிதாக சேர்ந்திருப்பது, பயங்கரவாத குழுக்கள் மற்றும் அமைப்பு ரீதியிலான குற்ற நெட்வொர்க்குகள் ஆளில்லாத வான் அமைப்புகளை (டிரோன்களை) பயன்படுத்துவதாகும்.
இந்த டிரோன்களை ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் வினியோகிப்பதற்கும், குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்துவதும் உடனடி ஆபத்தாக மாறி இருக்கின்றன.
எனவே, உலகமெங்கும் அவை பாதுகாப்பு முகமைகளுக்கு ஒரு சவாலாக மாறி உள்ளன. மூல உபாய, உள்கட்டமைப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு எதிராக பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆயுதம் ஏந்திய டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள், உறுப்பு நாடுகளின் தீவிர கவனத்தை ஈர்க்கின்றன.
பயங்கரவாதம் என்பது மனித குலத்துக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அச்சுறுத்தலை எதிர்த்துப்போராடுவதற்கு, முக்கிய கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு பொருளாதார தடைகளை விதிக்கிறது.
பயங்கரவாதத்தை அரசு நிதியுதவி நிறுவனமாக மாற்றிய நாடுகளுக்கு எதிராக இதன்மூலம் ஐ.நா. வலிமையாக செயல்பட்டுள்ளது.
இதற்கு மத்தியிலும், ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது. விரிவடைந்து வருகிறது.
எனவே புதிய தொழில்நுட்பங்கள் பயங்கரவாத குழுக்களால் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படாமல் தடுப்பது குறித்து பயங்கரவாத தடுப்பு குழு விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கும் முழு நடவடிக்கைகள் கடந்த வாரம் நிறைவு பெற்றன.
- ட்விட்டர் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க் கையில் சின்க் ஒன்றை எடுத்து செல்லும் வீடியோ வைரலானது.
ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர பணியை சரியான காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க தவரும் ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். ட்விட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன் படி ட்விட்டர் புளூ சந்தாவுக்கான மாதந்திர கட்டணம் 19.99 டாலர்கள் என மாறும் என கூறப்படுகிறது.
வெரிபைடு பயனர்கள் 90 நாட்கள் வரை புளூ டிக் வைத்திருக்க முடியும். அதற்குள் சந்தா செலுத்தாத பட்சத்தில் புளூ டிக் நீக்கப்பட்டு விடும். இதற்கான வசதியை ட்விட்டரில் செயல்படுத்த நவம்பர் 7 ஆம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை செய்ய தவறும் பட்சத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது.
- ட்விட்டர் தளத்தில் புளூ டிக் பெற விரும்புவோர் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
- ட்விட்டர் புளூ சேவைக்கான கட்டண விவரங்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் தளத்தில் ஏற்கனவே உள்ள ட்விட்டர் புளூ சந்தா முறைக்கு கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் பலன்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதன்படி ட்விட்டர் புளூ சந்தாவுக்கு கொடுக்கும் கட்டணத்தில் "புளூ டிக்" வெரிபிகேஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது. வெரிபிகேஷன் வழங்க ஒவ்வொரு மாதமும் 20 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. எனினும், தற்போது இந்த கட்டணம் 8 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 660 ஆகும்.
ட்விட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தும் போது ட்விட்டர் பயனர்களுக்கு புளூ டிக் உள்பட நான்கு பலன்கள் கிடைக்கும். ட்விட்டரில் வருவாய் ஈட்டும் முறையில் விளம்பரதாரர்களை மட்டும் சார்ந்திருக்க முடியாது. ட்விட்டரில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை மோசமானது, கட்டணம் ஒவ்வொரு நாடுக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

புளூ டிக் மட்டுமின்றி ட்விட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு வருவதில் பாதி விளம்பரஙகள் மட்டுமே வழங்கப்படும். மேலும் இவர்களால் நீண்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோவை பதிவேற்ற முடியும்.
ட்விட்டர் புளூ சந்தா பலன்கள்:
புளூ கட்டணம் மாதம் 8 டாலர்கள்
ரிப்ளை, மென்ஷன் மற்றும் சர்ச்களில் முக்கியத்துவம்
நீண்ட வீடியோ, ஆடியோ பதிவேற்றும் வசதி
பாதி விளம்பரங்கள்
பப்லிஷர்களுக்கு பேவால் பைபாஸ் வசதி
புளூ அக்கவுண்ட் ஸ்பேம்/ஸ்கேம் செய்தால் அக்கவுண்ட் உடனடியாக நீக்கப்படும்
- எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் மற்றும் புது விதிகளை அறிவித்து வருகிறார்.
- ட்விட்டரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றி இருக்கும் எலான் மஸ்க், அதில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறார். உலகம் முழுக்க ட்விட்டரில் பணியாற்றி வரும் ஊழியர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 50 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் இந்தியாவில் பணியாற்றி வந்த ஒட்டுமொத்த விளம்பர குழுவும் நீக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பொறியியல், பிராடக்ட் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். உலகளவில் நிறுவனம் மாற்றியமைக்கப்பட்டு வருவதால், ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும், இதன் காரணமாக திங்கள் கிழமை முதல் பணிக்கு வர வேண்டாம் என்றும் ட்விட்டர் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

மேலும் ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கைகள் முழுமை பெறும் வரையில் அடுத்த வாரம் வியாழன் கிழமை வரை உலகளவில் செயல்பட்டு வரும் ட்விட்டர் அலுவலகங்களை மூடவும், ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழையவும் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்ற விவரங்களை ட்விட்டர் இதுவரை வெளியிடவில்லை.
- ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் தளத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
- முன்னதாக உலக நாடுகளில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
எலான் மஸ்க்-இன் சமூக வலைதளமான ட்விட்டர், சில வெரிபைடு அக்கவுண்ட்களுக்கு "Official" லேபல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் அடங்கும். இந்த வழிமுறை புதிய 8 டாலர்கள் சந்தா முறை அமலுக்கு வரும் போது பயன்பாட்டுக்கு வரும். ட்விட்டரில் எட்டு டாலர்கள் சந்தா முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ட்விட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் பிரிவு அதிகாரி எஸ்தர் கிராஃபோர்டு ட்விட்டர் புளூ சந்தா முறையில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை பயனர்களுக்கு வெரிபைடு புளூ டிக் வழங்கும். இவ்வாறு வழங்கும் போது எந்த விதமான சோதனையும் மேற்கொள்ளப்படாது. இந்த வழிமுறைக்கு பலரும் எதிர்ப்பு மற்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக வெரிபை செய்யப்பட்டு புளூ டிக் பெற்று இருக்கும் அக்கவுண்ட்களுக்கு புதிய "Official" லேபெல் வழங்கப்படாது. எனினும், இதனை பணம் கொடுத்து வாங்கிட முடியாது. இந்த லேபெல் முதன்மையாக அரசாங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், வியாபாரங்கள், முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் சில பொது நபர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட இருக்கிறது.