என் மலர்
நீங்கள் தேடியது "Spin"
- முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பார்ல்:
தென் ஆப்பிரிக்காவில் உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகமாக ஜோ ரூட் 78 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. பிரிட்டோரியா தரப்பில் வில் ஜாக்ஸ் 56 ரன்கள் அடித்தார்.
பார்ல் தரப்பில் ரூட், பிஜோர்ன் போர்டுயின் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி சார்பில் 20 ஓவரையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 ஓவரையும் சுழற்பந்தாக வீசிய முதல் அணி என்ற சாதனையை பார்ல் ராயல்ஸ் படைத்துள்ளது.
- ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
- தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர்:
சேலம் மாவட்டம் எடப்பா டி தாலுகா இருப்பாலி கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வன்(வயது 18), சேலம் ஜலகண்டபுரம் தினேஷ்குமார்(18) உள்பட 50 பேர் திருவாரூரில் தொடங்கிய இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கலந்து கொள்ள பஸ்சில் புறப்பட்டனர்.
அந்த பஸ், தஞ்சை வழியாக சென்றபோது பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
அப்போது தாமரை செல்வன், தினேஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மட்டும் பெரிய கோவில் அருகே உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றில் குளித்தனர்.
இதில் ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தினேஷ்குமாரை மட்டும் உயிருடன் மீட்டனர்.
ஆற்றில் அடுத்து செல்ல ப்பட்ட தாமரைச்செ ல்வனை தொடர்ந்து தேடி வந்தனர்.
நேற்று இரவு வரை தேடினர். பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததால் இன்று மீண்டும் தேட முடிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் மேம்பாலம் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள ஆற்றில் தாமரை செல்வன் உடல் பிணமாக மிதந்து வந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.