என் மலர்
நீங்கள் தேடியது "Srikanth Kidambi"
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வென்றார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.
இதில் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2-வது சுற்றில் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.
- இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- இன்று நடந்த போட்டியில் ஶ்ரீகாந்த் கிடாம்பி, விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி, டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் கிடாம்பி 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி சீன வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் மலேசியா வீரரை எதிர்கொண்டார்.
ஜெகார்த்தா:
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் மலேசிய வீரரை 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதேபோல், மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த் கிடாம்பியை நாளை எதிர்கொள்கிறார்.
- ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செல்லியை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். இந்த ஆட்டம் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது சுற்றில் பிவி சிந்து
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட்டில் சோவ் டைன் சென்னை (சீன தைபே) தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இஸ்ரேல் வீரர் டேனில் டுபோவென்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் கிடாம்பி, ஹாங்காங் வீரரை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரணோய் 11-21, 14-21 என இந்தோனேசிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இளம் வீராங்கனையான வைஷ்ணவி ரெட்டியும் தோல்வியடைந்தார்.
ஜப்பான் வீரரின் ஆட்டத்திற்கு ஸ்ரீகாந்த் கிதாம்பியால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 9-21 என இழந்த ஸ்ரீகாந்த், 2-வது செட்டை 11-21 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபனில் கென்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே சென்றது. இறுதியில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-23 என இழந்தார். 2-வது செட்டையும் 19-21 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார். ஹாங் காங் வீரர் 40 நிமிடத்தில் ஸ்ரீகாந்த் கிதாம்பியை வீழ்த்தினார்.

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த் கிதாம்பி 22-18, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 11-ம் நிலை வீரரான கென்டோ மோமொட்டாவை எதிர்கொள்கிறார்.