என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilakna"

    • வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
    • இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி இரண்டு இடம் முன்னேறியது.

    துபாய்:

    வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்.

    இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.

    புதிய பட்டியலின் படி 6-வது இடத்தில் இருந்த இலங்கை வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் 50 சதவீதத்துடன் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இலங்கைக்கு எதிராக தோல்வி கண்ட வங்காளதேசம் தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து 7-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

    68.51 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்திலும், 62.50 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், 50 சதவீதத்துடன் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.

    36.66 சதவீதத்துடன் பாகிஸ்தான் 5வது இடத்திலும், 33.33 சதவீதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்திலும் உள்ளது.

    • இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் இன்று 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.
    • அனுர குமார திசநாயக்கை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

    இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

    அனுர குமார திசநாயகே இலங்கை அதிபராக பதவியேற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் இன்று 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.

    அனுர குமார திசநாயக்கை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

    இந்தியா வருகை தந்துள்ள அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது புத்த கயா செல்ல உள்ளார்.

    ×