என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivaikundam"

    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையில் அரிப்பு ஏற்படுகிறது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்குளம், செய்துங்கநல்லூர், புதுக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள சத்தக்காரன் பட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் ஊருக்குள் பொதுமக்கள் சென்று வர தற்காலிகமாக குழாய்கள் மூலம் பாதைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வந்த தொடர் மழையால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பாலத்திற்காக தோண்டப்பட்டு குழிகள் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காலை முதல் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.


    உடனடியாக இந்த பாலத்தை சரி செய்து போக்குவரத்து நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையில் கருங்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் தொடர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் மே மாதம் திருவிழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு தினம் தோறும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பரபவனி நடந்தது. இதற்காக காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை சாத்தான்குளம் மறைமாவட்ட ரவிபாலன் நடத்தினார்.

    அதனை தொடர்ந்து சப்பர பவனி நடந்தது. இதில் மிக்கெல் சம்மன்ஸ், பரமோலாக மாதா, சூசையப்பர் என மூன்று சப்பரம் பவனி வந்தது. இந்த சப்பரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் பங்கைச் சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.
    • முத்துமாரியம்மன் தசரா குழுவினர் 38 வருடமாக தசரா திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
    • 7ம் திருவிழாவை முன்னிட்டு தசரா கூடம் முன்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே சேரகுளம் அருகே உள்ள சின்னார்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் தசரா குழுவினர் 38 வருடமாக தசரா திருவிழாவை நடத்தி வருகின்றனர். இங்கு வருடம் தோறும் தசரா திருவிழா மற்றும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி மற்றும் தசரா திருவிழா கால் நாட்டுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினம் தோறும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. 7ம் திருவிழாவை முன்னிட்டு தசரா கூடம் முன்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திருமணமான பெண்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடை முத்துமாரியம்மன் தசரா குழுவினர் செய்திருந்தனர்.

    • தாமிரபரணி ஆற்று பாசனத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் என நான்கு வாய்க்கால்கள் மூலமாக 53 குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • வடகால் பாசன வாய்க்கால் மூலம் 7 குளங்கள் தண்ணீர் வரத்து பெறுகின்றன. இந்த வடக்கு பிரதான கால்வாய் மூலம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்று பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் இரண்டு அணைக்கட்டுகளும், மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் என நான்கு வாய்க்கால்கள் மூலமாக 53 குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் இடது புறத்திலிருந்து வடகால் பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வடகால் பாசன வாய்க்காலின் மொத்த நீளம் 19.25 கி.மீ. ஆகும். வடகால் பாசன வாய்க்கால் மூலம் 7 குளங்கள் தண்ணீர் வரத்து பெறுகின்றன. இந்த வடக்கு பிரதான கால்வாய் மூலம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த வடகால் வாய்க்காலில் எல்.எஸ்.0 மீட்டர்முதல் 15 கிமீ வரை மண் திட்டுக்களும் காட்டுச்செடிகளும் அதிகளவில் காணப்படுவதால் தண்ணீர் செல்வது இடையூறாக இருந்து வருகிறது.

    ஸ்ரீவைகுண்டம் பகுதி பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் வடகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்து தரவேண்டும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தமிழக அரசுக்கு வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தாமிரபரணி பாசன அமைப்பில் சிறப்பு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

    இதன்படி ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன வாய்க்கால் 25 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி தொடக்க விழா ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மங்களகுறிச்சியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தாமிரபரணி நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஏரல் தாசில்தார் கண்ணன், பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு தூர் வாரும் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் ஸ்ரீவைகுண்டம், வரதராஜபுரம், கீழ்பிடாகை கஸ்பா, மங்கலகுறிச்சி, சிறுத்தொண்டநல்லூர், கொட்டாரக்குறிச்சி, இருவப்பபுரம், ஆறுமுகமங்கலம், பழையகாயல், அகரம், மஞ்சள் நீர்க்காயல், கொற்கை, வாழவல்லான், சாயர்புரம், திருப்பணி செட்டிக்குளம், சேர்வைக்காரன்மடம், குலையன்கரிசல், அத்திமரப்பட்டி மற்றும் கோரம்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், உதவி பொறியாளர் பாஸ்டிங் வினு, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் அலங்காரபாண்டியன், சிவகளை பிச்சையா, ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, நகர தலைவர் கருப்பசாமி, வட்டார செயலாளர் நிலமுடையான், வட்டார துணைத்தலைவர் அமச்சார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சொரிமுத்து, ஊடக பிரிவு பொறுப்பாளர் மரியராஜ், திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், மற்றும் நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டார அளவிலான போட்டிகள் ஸ்ரீவைகுண்டம் ஆதிகுமரகுருபரசுவாமிகள் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.
    • 6 முதல் 8-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்விதுறை சார்பாக செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டார அளவிலான போட்டிகள் ஸ்ரீவைகுண்டம் ஆதிகுமரகுருபரசுவாமிகள் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.

    6 முதல் 8-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற வீரர்கள் தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவி சினேகவள்ளி பாலமுருகன், துணைத்தலைவர் கண்ணியம்மாள், பேரூராட்சி உறுப்பினர் பிரேம்குமார் சமூகஆர்வலர் சந்துரூ, வக்கீல் அமிர்தவள்ளி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் செல்வகுமார், மரீயஜெபசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் இக்னேஷ்யல் சுமதி வரவேற்றார். போட்டியில் 252 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவி மற்றும் மனைவியின் தாய், பாட்டி ஆகிய 3 பேரையும் உயிரோடு தீவைத்து எரித்து விட்டு, சங்கர் தீக்குளித்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது32). லாரி டிரைவரான இவர் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் பேரூரை சேர்ந்த முருகன் மகள் கீதா (22). பட்டதாரி பெண்.

    சங்கரும், கீதாவும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமான 3 மாதத்திலேயே அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கீதா கணவரிடம் கோபித்துக் கொண்டு பேரூரில் உள்ள தனது தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து சங்கர் அவரை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தார். எனினும் கீதா திரும்பி வர மறுத்து பிடிவாதமாக தாய் வீட்டிலேயே இருந்தார். நேற்றுஇரவு சங்கர் தனது மனைவி கீதாவை அழைப்பதற்காக பேரூருக்கு சென்றார். அப்போது அங்கு கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி கீதா உடல் மீது ஊற்றி தீவைத்தார். அவரை தடுக்க வந்த கீதாவின் தாய் பெருமா, பாட்டி செல்ல பொண்ணு ஆகியோர் மீதும் சங்கர் தீ வைத்தார்.

    இதனால் கீதா, அவரது தாய், பாட்டி ஆகிய 3பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது. இதனைப்பார்த்த சங்கர் பயத்தில் தனது உடல்மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இந்த சம்பவத்தில் சங்கர், அவரது மனைவி கீதா, மாமியார், கீதாவின் பாட்டி ஆகிய 4 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு 4பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குடும்பம் நடத்த வரமறுத்த மனைவி மற்றும் மனைவியின் தாய், பாட்டி ஆகிய 3பேரையும் உயிரோடு தீவைத்து எரித்து விட்டு, சங்கர் தீக்குளித்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×