search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "startups"

    • மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் பேர் அமெரிக்காவில் பணி இழந்தனர்
    • அக்சென்சர் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது

    முன்னர் எந்த வருடங்களிலும் இல்லாத அளவு, கடந்த 2023ல் பல தனியார் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கூகுள், மைக்ரோசாஃப்ட், வெரிசான், காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களிலும், ஸ்டார்ட் அப் எனப்படும் புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களிலும் இந்த சூழல் நிலவியது.

    உலகம் முழுவதும் சுமார் 2.6 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் வேலையிழந்தவர்கள். மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் (1.79 லட்சம் பேர்) அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

    16,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இந்தியா 2-ஆம் இடத்தில் உள்ளது.

    13,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஜெர்மனி 3-ஆம் இடத்தில் உள்ளது.

    11,100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு சுவீடன் 4-ஆம் இடத்திலும், 9400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இங்கிலாந்து 5-ஆம் இடத்திலும் உள்ளது.

    இந்தியாவில், கடந்த 2023 டிசம்பர் மாதம் மட்டுமே 1000 பணியாளர்கள் பேடிஎம் (Paytm) நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    அமெரிக்க-அயர்லாந்து நாடுகளை மையமாக கொண்ட மென்பொருள் பெருநிறுவனமான அக்சென்சர் (Accenture) 19,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது.

    இணையதள கல்வி நிறுவனமான பைஜு'ஸ் (Byju's) சுமார் 4 ஆயிரம் பணியாளர்களையும், இணைய வணிக வர்த்தக நிறுவனமான அமேசான் 500 பணியாளர்களையும் நீக்கியது.

    கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தோன்றியுள்ள மந்தமான பொருளாதார சூழல், அதிகரிக்கும் விலைவாசியினால் மக்களிடம் சேமிப்பு குறைதல், தொழில்நுட்ப சேவைக்கான தேவை குறைவு, உலகளாவிய போர் சூழல், பணியாளர்களுக்கான கட்டுக்கடங்காத சம்பள உயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை கூறப்படுகின்றன.

    உலகளாவிய பொருளாதார நிலைமை மேலும் சரிவடைந்தால், பணிநீக்கங்கள் இவ்வருடமும் தொடர்வது மட்டுமின்றி அதிகரிக்கலாம் என மனித வள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • ஏற்காடு ஒன்றியத்தில் அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் எற்கனவே குண்டூர், தெப்பக்காடு, முன்டகாம்பாடி ஆகிய பகுதிகளில் பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளன.
    • அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் இன்று பூஜையுடன் பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளது.

    ஏற்காடு:

    ஏற்காடு ஒன்றியத்தில் அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் எற்கனவே குண்டூர், தெப்பக்காடு, முன்டகாம்பாடி ஆகிய பகுதிகளில் பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளன.

    தற்பொழுது அதன் தொடர்ச்சியாக கோவில்மேடு பகுதிக்கு அனைவருக்கும் இலவச குடிநீர் திட்டத்தின் கீழ் இன்று பூஜையுடன் பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி ரவிசந்திரன். பஞ்சாயத்து துணைதலைவர் பட்டாசு பாலு, கோவில்மேடு வார்டு உறுப்பினர் பிரீத்தா கலை, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவில்மேடு பகுதியை தொடர்ந்து லாங்கில்பேட்டை, டவுன், அழகாபுரம்.ஜெரினாக்காடு ஆகிய பகுதிகளுக்கு இந்ததிட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

    • 749 மையங்களில் 30 ஆயிரம் பேருக்கு எழுத்தறிவு திட்டம் தொடக்கம் தொடங்கியது.
    • தியாகராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 3-ம் கட்டமாக 749 மையங்களில் 29 ஆயிரத்து 991 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கற்றுத்தரும் பணி தொடங்கியுள்ளது என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறி னார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், தியாக ராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார்.

    திட்டத்தைத் தொடங்கி வைத்து, கற்போருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கி உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசியதாவது:-

    விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ங்களை முன்னுரிமை பெறும் மாவட்டங்கள் என 2019-ம் ஆண்டு அறிவித்து ஒவ்வொரு துறையிலும் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அரசு நிறை வேற்றி வருகிறது.

    இதன்படி சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் சார்பில் முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் 2019-2020 ஆண்டில் 615 மையங்களில் தலா 40 பேருக்கும், 2020-2021 ஆண்டில் 1124 மையங்களில் தலா 40 பேருக்கும் அடிப்படை எழுத்தறிவு 6 மாதங்கள் தன்னார்வலர்கள் மூலம் இரவு நேரங்களில் கற்றுத் தரப்பட்டு, இவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்ப ட்டது.

    தற்போது 3-வது இறுதி கட்ட எழுத்தறிவுத் திட்டம் ஜூன் மாதம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 749 மையங்களில் தொடங்க ப்பட்டுள்ளது. இதில் 29,991 பேருக்கு எழுத்தறிவு 6 மாதங்கள் கற்றுத்தரப்பட்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும். இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் எழுத படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலை உரு வாகும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியப் பயிற்றுநர் கற்பகம், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்திய அரசாங்கம் இளைய தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். #PMModi #InnovationKiBaatPMKeSaath
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி டேராடூன், கவுகாத்தி மற்றும் ராய்ப்பூர் உட்பட பல நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

    இந்தியாவில் பல இளைஞர்கள் புதிய தொழிலை தொடங்க ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவர்களிடம் போதுமான பணம் இல்லாததால் தொடங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

    அவர்களுக்கு உதவும் வகையில் மேக் இன் இந்தியா மற்றும் டிசைன் இன் இந்தியா போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இளைஞர்களும் தொழில் தொடங்க ஆசைப்படுகின்றனர். தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் திட்டங்களில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் இளைஞர்கள் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

    இளைஞர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றனர். அதற்காக அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. அவர்களின் முன்னேற்றத்திற்காக அரசு உதவி வருகிறது என கூறினார். #PMModi #InnovationKiBaatPMKeSaath

    ×