என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "stock"
- பருத்தி விலை நாள்தோறும் மாறுபடுவதால் நூல் விலையும் உயா்ந்து கொண்டே செல்கிறது.
- ஒரு கேண்டி ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையில் விற்பனை செய்கின்றனா்.
திருப்பூர்
இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் பருத்தி இருப்பு குறித்த விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
பருத்தி விலை நாள்தோறும் மாறுபடுவதால் நூல் விலையும் உயா்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பின்னலாடை உற்பத்தி, கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் கடும் சிரமத்தில் உள்ளன. தொழிலாளா்கள் வேலைவாய்ப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நமது நாட்டில் நமக்கு தேவையான அளவு பருத்தி உற்பத்தி செய்தும் பற்றாக்குறை ஏற்பட பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்தான் காரணமாக உள்ளன.பருத்தி விளைச்சல் உள்ள காலங்களில் ஒரு கேண்டி 365 கிலோ ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையில் குறைந்த விலையில் வாங்கி பல லட்சம் பேல்களை இருப்பு வைத்து கொள்கின்றனா்.
பின்னா் பருத்தி விளைச்சல் காலம் முடிவடைந்தவுடன் செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி ஒரு கேண்டி ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையில் விற்பனை செய்கின்றனா். இந்த காலகட்டத்தில் நூல் விலையும் உயா்ந்து கொண்டே செல்கிறது.
ஆகவே, பன்னாட்டு நிறுவனங்கள் பருத்தி இருப்பு குறித்த விவரங்களை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து ஜவுளி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.
- மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.
மடத்துக்குளம்:
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் பருவ மழைகள் திருப்தியாக பெய்ததால் இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.இப்பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்தை கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.
நடப்பாண்டு உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஒரு குவிண்டால் 2,250 முதல் 2340 வரை விற்று வந்தது. மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் சிண்டிகேட் காரணமாக கடந்த 10 நாட்களாக தினமும் 10 ரூபாய், 20 ரூபாய் என குறைக்கப்பட்டு குவிண்டால் 1,150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
வெளி மாநில வரத்து வாய்ப்பில்லை. உள்ளூர் மக்காச்சோளம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டிய சூழலில் திடீர் விலை சரிவு காரணமாக விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடையை குறைத்து கொண்டதோடு அறுவடை செய்ய மக்காச்சோளத்தையும் விற்பனை செய்யாமல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைக்க துவங்கினர்.இதனால் விற்பனைக்கு மக்காச்சோளம் வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குவிண்டாலுக்கு, 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மக்காச்சோளம் அறுவடை துவங்கி இரண்டு மாதம் வரை நிலையான விலை காணப்பட்டது. இந்நிலையில் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைக்கப்பட்டது.மக்காச்சோளத்திற்கு விதை, உரம், மருந்து என 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ள நிலையில் அறுவடைக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.வழக்கமாக ஏக்கருக்கு 40 குவிண்டால் மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது 20 முதல் 22 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் விலையை எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் கூறுகையில், மக்காச்சோளம் விலை குறைவு காரணமாக, விற்பனைக்கு வரத்து குறைந்தது. இதனால் மீண்டும் விலை உயரத்துவங்கியுள்ளது என்றனர்.
- பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
- கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக மல்லிகை பூ கிலோ இன்று ரூ.2000- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற பூக்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது குறித்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) வருமாறு :-
மல்லிகை - ரூ.2000, முல்லை - ரூ.2000, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.1000, கலர் காக்கட்டான் - ரூ.1000, மலை காக்கட்டான் - ரூ.900, சி.நந்தியா வட்டம் - ரூ.150, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.360, வெள்ளை அரளி - ரூ.360, மஞ்சள் அரளி - ரூ.360, செவ்வரளி - ரூ.400, ஐ.செவ்வரளி - ரூ.400, நந்தியா வட்டம் - ரூ.150.
- தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 டன் கிரிப்கோ யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு வந்தது.
- 4,374 டன் உரம் இருப்பு உள்ளது. என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்.
சேலம்:
சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 டன் கிரிப்கோ யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு வந்தது. இந்த உர மூட்டைகள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 600 டன் உரமும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 300 டன் உரமும் அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 1,464 டன் யூரியா, டி.ஏ.பி. 916 டன் டி.ஏ.பி., பொட்டாஸ் 364 டன், காம்ளக்ஸ் 1,630 டன் என மொத்தம் 4,374 டன் உரம் இருப்பு உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் உரத்தை பெற்று பயன் அடைய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
- ஆமணக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 1 எக்டேருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படுகிறது.
- விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்திருந்து பெற்றுக்கொள்ளலாம்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் நடப்பு ஆண்டில் உணவு எண்ணை பயிர்களுக்கான தேசிய இயக்கத்தில் ஆமணக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 1 எக்டேருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான வீரிய ஆமணக்கு விதைகள் வேளாண்மை அறிவியல் நிலையம் நாமக்கல்லில் இருப்பு உள்ளது.
விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்திருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டம் பற்றிய விரிவான விவரங்களுக்கு பரமத்திவேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்