என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "stomach"
- கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிப்பு பீடா வகையான பான் என்பது வட இந்தியாவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய பண்டம் ஆகும். சமீப காலங்களில் தென்னிந்தியாவிலும் இந்த பான் வகைகள் விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன. ஐஸ் பான் முதல் ஃபயர் பான் வரை பான் வகைகள் உருவாகி இளைஞர்களின் விருப்பத்தை தூண்டியுள்ளது.
இதில் புகையுடன் கூடிய திரவ நைட்ரஜன் பான் வகை உண்ணும்போது திரில் ஆன அனுபவத்தை தருவதால் சிறுவர்கள் அதனை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் அதுவே ஒரு சிறுமிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. பெங்களூருவில் 12 வயது சிறுமி திரவ நைட்ரஜன் பான் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருதுவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வயிற்றில் துளை உருவாகியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இந்த துளை உருவாகுதலுக்கு பெர்ஃபோரேஷன் பெரிட்டோனிடிஸ் (perforation peritonitis) என்பது மருத்துவப் பெயர் ஆகும். வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது. சிகிச்சைக்குப் பின் சிறுமி உடல் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் உணவில் திரவ நைட்ரஜனை பயன்படுத்துவது கடுமையான விளைவுகளைத் ஏற்படுத்தும். திரவ நைட்ரஜனில் ஆவியாகும் இரசாயனமே இதற்கு காரணம் ஆகும். இந்த நீராவிகளை உள்ளிழுப்பது சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
- எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.
புதுச்சேரி:
புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த பொது மருத்துவர் டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் மருத்துவ குழுவினர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வாலிபரின் வயிற்று பகுதியில் சிறிய இரும்பு துண்டு இருப்பதும் அதன் காரணமாக அவர் வயிற்று வலியால் அவதிப்படுவதை உறுதி செய்தனர்.
உடனடியாக எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.
இதுகுறித்து டாக்டர் ரவீந்திர பாரதி, கூறியதாவது:-
வாலிபர் பல்வலிக்கு சிகிச்சைக்காக சென்ற–போது இந்த இரும்பு துண்டை விழுங்கியுள்ளார்.
அந்த இரும்பு துண்டு உணவுடன் கலந்து மிதந்ததால், அதனை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் சி.ஆர்ம் என்று சொல்லக்கூடிய தொடர் எக்ஸ்ரே கருவி மூலம் நிதானமாக 3 மணிநேர முயற்சிக்கு பின் இரும்பு துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. வாலிபர் வீடு திரும்பினார்.
இவ்வாறு டாக்டர் ரவீந்திர பாரதி கூறினார்.
சிக்கலான இந்த சிகிச்சையை மயக்க மருந்து இல்லாமல் எண்டோஸ் கோப்பி மூலம் மேற்கொண்ட டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் குழுவினரை பிம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல், கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்