என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storytelling"

    • பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும்.
    • குழந்தைகளின் புரிதல் திறன் வளர்கிறது.

    ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது என்று கதை சொல்ல தொடங்கும் போதே குழந்தைகள் காட்டிற்குள் சென்று விடுகிறார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருந்தது என்றதும் பெரிய சிங்கத்தை கற்பனையில் உருவாக்கி விடுகிறார்கள்.

    இப்படி குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அவர்கள் தங்களை மறந்து கதை உலகிற்குள் சென்று விடுகிறார்கள். இந்த கதைகள் குழந்தைகளை எப்படி உருவாக்குகிறது? என்ன பயன் கிடைக்கிறது? என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்!


    இன்றைய காலச்சூழலில் குழந்தைகளோடு அமர்ந்து பேசுவதற்கும், அவர்கள் சொல்வதை கேட்பதற்கும் நேரம் இல்லாமல் பல பெற்றோர் வேலை என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு தயங்குகிறார்கள்.

    இந்த சூழலை சரி செய்ய பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும். இது குழந்தைகளுக்கு அன்பை வெளிப்படுத்துகிற செயல்பாடாக மாறும். இதனால் குழந்தைகள் பெற்றோர் உறவு நெருக்கமாகும்.

    நேர்மறை எண்ணம் வளர்தல்

    குழந்தைகளுக்கு நீதிக்கதைகளையும், தன்னம்பிக்கை கதைகளையும், வரலாற்று கதைகளையும், புரட்சியாளர்களின் வாழ்க்கை கதைகளையும் சொல்கிறபோது அவர்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கை வளர்கிறது.

    இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற உந்துதல் கிடைக்கிறது. எல்லா சூழலிலும் வாழ்க்கையை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொள்ளும் எண்ணத்தை கதைகள் குழந்தைகளுக்குள் விதைக்கிறது.


    புரிதல் திறன் அதிகரித்தல்

    குழந்தைகள் கதைகளை ஆர்வமுடன் கேட்பதால் அந்த கதையின் கருத்துகளை புரிந்து கொள்கிறார்கள். ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வம் அதிகமாகிறது. இதனால் அவர்களின் புரிதல் திறன் வளர்கிறது.


    சொல் அறிவு

    ஒவ்வொரு முறை கதை சொல்கிற போதும், கதைகளை கேட்கிற போதும் குழந்தைகள் புதிய சொற்களையும் அதற்குரிய அர்த்தங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். நிறைய கதைகளை கேட்கிறபோது பல சொற்கள் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிகமான சொல் அறிவு அவர்கள் எழுதுவதற்கு உதவுகிறது.

    நல்லொழுக்கம் வளர்கிறது

    கதைகள் குழந்தைகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆர்வமுடன் கேட்பதால் அவர்களின் ஆழ்மனதில் கதைகள் பதிந்து விடுகிறது. எனவே குழந்தைகளுக்கு ஒழுக்கம் சார்ந்த கதைகளை சொல்வது அவர்களை ஒழுக்கமானவர்களாக மாற்றும்.


    கலாசாரங்களை அறிதல்

    குழந்தைகள் கதைகளின் வழியாக அவர்களுடைய கலாசாரத்தை அறிந்து கொள்கிறார்கள். பல நாட்டு கதைகள் வழியாக குழந்தைகள் பரந்துபட்ட உலகத்தையும், பிற பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்கிறார்கள். இதனால் குழந்தைகள் எல்லா மக்களையும் புரிந்து கொண்டு பன்முகத்தன்மை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.

    எனவே, அன்பு பெற்றோரே! குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள், குழந்தைகளின் கதைகளை கேளுங்கள். கதைகளை வாசிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகள் சொல்லும் கதைகளை புத்தகமாக்குங்கள். கதைகள் அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்றும்.

    • இப்பயிற்சியில் கருத்தாளர்கள் நடித்தல் கதை கூறுதல் பேசுதல் விளையாடுதல் பாடுதல் மற்றும் வரைதல் ஆகிய செயல்பாடுகளை ஆசிரியர்களிடம் செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.
    • இப்பயிற்சியில் கருத்தாளர்கள் உட்பட 138 ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் வட்டார வள மையத்தின் சார்பாக தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 5 நாள் பயிற்சியாக நடைபெற்று வருகின்றது.இப்பயிற்சியின் தொடக்க விழா துளசேந்திரபுரம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமையேற்றார் மாவட்ட உதவி விட்ட அலுவலர் ஞானசேகரன் தொடங்கிவைத்தார். வட்டரா கல்வி அலுவலர்கள் சரஸ்வதி சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டரா வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் வரவேற்புரையாற்றினார்.

    இப்பயிற்சியில் கருத்தாளர்கள் நடித்தல் கதை கூறுதல் பேசுதல் விளையாடுதல் பாடுதல் மற்றும் வரைதல் ஆகிய செயல்பாடுகளை ஆசிரியர்களிடம் செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.

    மையத்தை இணை இயக்குநர் பாஸ்கர் சேதுபதி பார்வையிட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்று பாராட்டினார்.இப்பயிற்சியில் கருத்தாளர்கள் உட்பட 138 ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் கருத்தாளர்களாக பாலாகிருஷ்ணன் இராமன் சிங்கரவேல ராஜேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர். ஐந்து நாள் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செய்து இருந்தார்.கருத்தாளர் கம்பன் நன்றி கூறினார்.

    ×