என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Street campaigning"
- மத்திய பட்ஜெட் குறித்த பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
- 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தானில் பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசார கூட்டம் வட்ட பிள்ளையார் கோவில் முன்பு நடந்தது. மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துராமன், ரவிசந்திரன், ரங்கசாமி, முத்துசெல்வம், குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முன்னதாக நடந்த மண்டல கூட்டத்தில் கட்சி நிதி வழங்கப்பட்டது. நிர்வாகி ராஜாராம் நன்றி கூறினார்.
இதேபோல் முள்ளிப்பள்ளம் கிராம சமுதாய கூடத்தில் பா.ஜ.க. வாடிப்பட்டி தெற்கு மண்டல செயற்குழு கூட்டம் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது. மண்டல பார்வையாளர்-மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிராஜன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.
- நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா தெரு முனை பிரசார கூட்டம் கோவில்பட்டி மற்றும் லிங்கம் பட்டியில் நடைபெற்றது.
மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மிக்கேல், குலசேகரபுரம் கிளை செயலாளர் பேதுரு செல்வம், புதுக்காலனி மாரியப்பன், சமத்துவபுரம் முத்துமாடத்தி, ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிரிட்டோபெஸ்சி தாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் சேவியர்லாரன்ஸ் வரவேற்றார். நகர துணை செயலாளர் காளியப்பன், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், இலக்கிய அணி தலைவர் சோழப்பெருமாள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை, பாண்டவ ர்மங்கலம் கிளைச்சாளர் கஜேந்திரன், சண்முகசிகாமணி நகர் கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வ மணி கண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் வரவேற்றார். விழாவில் போத்திராஜ், செல்வம், காளிமுத்து, சுப்புராஜ், செல்வின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்