என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Street Walker"
- வருகிற 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.
- 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.
மெலட்டூர்:
பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவ னநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி- அம்பாள் காலை, இரவு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.
முதல் நாளில் கொடியேற்றம் நடைபெற்று, இரவு வக்கீல் அரிய அரசபூபதியின் ஆன்மீக சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து சுவாமி- அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.
2-வது நாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு சூரிய பிரபையில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
இன்று (26-ந்தேதி) காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு பூத வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதியுலாவும், தொடர்ந்து சிவசக்தி கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நாளை (27-ந்தேதி) சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 28-ந்தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.
வருகிற ஜூன் (1-ந்தேதி) தேரோட்டமும், 2-ந்தேதி தீர்த்தவாரியும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வை யில் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.